Friday, February 14, 2020

மத்தியமரின்...

செல்வம்
இரவை பகலாக்கி
பகலை இரவாக்கி
கோடையை வாடையாக்கி
வாடையை கோடையாக்கி
செல்வந்தர்களின்
உடலையும் மனத்தையும்
நலத்தில் இல்லையாயினும்                        சுகத்தில் நிலை நிறுத்திப்போகிறது

வறுமை
இரவை இரவாகவும்
பகலை பகலாகவும்
கோடையை கோடையாகவும்
வாடையை வாடையாகவுமே வைத்திருந்து
ஏழைகளின்
உடலையும் மனத்தையும்
சுகத்தில் இல்லையாயினும்                        நலத்தில் நிலை நிறுத்திப்போகிறது

எப்படி முயன்றும்
முடியாமையால்
முன்னவர்போல்
சுகத்தில் நிலைக்க இயலாமலும்
ஒருபடி இறங்க
இயலாமையால்
பின்னவர்போல்
நலத்தை சுகிக்க முடியாமலும்
 பாவம் மத்தியமரின்
உடலும் மனமும் மட்டும்
நாளும் ஏங்கி  ஏங்கியே தேய்கிறது
கௌசிக  மனம் தானே  படைத்த
திரிசங்கு நரகத்தில்
நாளும் உழன்று  வாழ்ந்தே சாகிறது

8 comments:

G.M Balasubramaniam said...

உண்மை அப்பட்டமான அக்மார்க் உண்மை

சிகரம் பாரதி said...

திரிசங்கு நிலைதான் அவர்களுக்கு எந்நாளும்... அருமை....

நமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

https://newsigaram.blogspot.com/

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்...

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை
உண்மை

மனோ சாமிநாதன் said...

நச்சென்று சொல்லும் உண்மை!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அழகான உண்மைகளோடு மத்தியமரின் மனங்கள் தினம் புழுங்குகின்றன என்பதை சிறப்பாக திரிசங்கு நரகத்திற்கு மேற்கோள் காட்டி பதிவை தந்திருப்பதை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

சரிதான்.  உண்மையிலும் உண்மை.

வெங்கட் நாகராஜ் said...

உண்மையை உரக்கச் சொன்ன பதிவு.

Post a Comment