Wednesday, March 11, 2020

ரிஸர்வ் வங்கியும் ஆண்பாவம் பாண்டியராஜனும்..

எஸ் வங்கியின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட மத்திய ரிஸர்வ் வங்கி அதன் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஒரு அலுவலரை நியமித்ததாகவும் அதன் தொடர்ச்சியாக அந்த வங்கி மிகச் சரியாக திவால் ஆகும் நிலைக்கு வந்ததும் அந்த அதிகாரி உடன் ரிஸர்வ் வங்கிக்கு தகவல் தெரிவிக்க உடன் திவாலாகாது தடுக்க அரசு நடவடிக்கை எடுத்ததையும் கேள்விப்பட....                                                   ஆண்பாவம் படத்தில் பாலத்தில் அமர்ந்திருந்த பாண்டியராஜனிடம் காரில் வந்தவர் ரிவர்ஸில் வண்டியெடுக்க முயற்சிக்கையில் "பாலத்தில் வண்டி இடிக்குதான்னு பார்த்துச் சொல்லு 'எனச் சொல்லி வண்டியை மெல்ல மெல்ல ரிவர்ஸில் எடுத்தபடி  ஒவ்வொரு முறையும் இடிக்குதா இடிக்குதா எனக் கேட்டுக் கொண்டே எடுப்பார்.பாண்டியராஜனும் ஒவ்வொரு முறையும் "இல்லை வாங்க " எனச் சொல்லிக் கொண்டே வருவார்.கடைசியாக நகர்த்துகையில் பாலத்தில் வண்டி இடித்துவிடும்..பாண்டியராஜனும் எவ்வித ரியாக்ஸனும் இன்றி "இடித்து விட்டது..இடித்து விட்டது "என்பார்.கார்க்காரர் கோபமாய் இறங்கி "ஏன் முதலிலேயே சொல்லவில்லை " அடிக்க வருவார்..பாண்டியராஜன் மிகச் சாதாரணமாக "நீங்க இடிக்குதான்னு தானே பார்க்கச் சொன்னீங்க ..அதுதான் இடிச்சதும் சொன்னேன் ",என்பார்.                     எஸ் வங்கி விசயத்தில் அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளைப் பார்க்க எனக்கு அந்தத் திரைப்படக் காட்சியே நினைவுக்கு வருகிறது..                                     உங்களுக்கும் அப்படியே வந்திருந்தால் அல்லது வந்தால் நாமெல்லாம் ஓரினமே

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அதே... அதே...!

பாலத்தில் அடுத்த வண்டி...!!

வரிசையில் ரிசர்வ் வங்கி...!!!

திண்டுக்கல் தனபாலன் said...

அதே... அதே...!

பாலத்தில் அடுத்த வண்டி...!!

வரிசையில் முடிவில் 'ரிசர்வ்' வண்டி...!!!

ஸ்ரீராம். said...

நீங்கள் சொன்னதும் பொருத்தமானதாகவே தோன்றுகிறது!

வெங்கட் நாகராஜ் said...

பொருத்தமான உதாரணம்! வங்கியின் நிலை பரிதாபம். அதை விட பரிதாபம் அந்த வங்கியில் பணம் சேமித்தவர்கள்....

Post a Comment