Saturday, March 28, 2020

மனமாகும் குற்றாலம்..

மலரோடு உறவாடி
மகிழ்வோடு வலம்போகும்
நிலவோடு உறவாட
நினைவெல்லாம் பூமணக்கும்

கரையோடு தினம்கூடி
களிப்போடு சதிராடும்
அலையோடு நினைவோட
நுரைபொங்கும் மனமெங்கும்

மலையரசன் உடல்தழுவி
மதிமயங்கித் தரைநழுவும்
குளிரருவி நிலையுணர
மனமாகும் குற்றாலம்

தண்மலரைக் கூடிமனக்
களிப்போடு உலாபோகும்
வண்டினத்தின் சுகமறிய
மனம்கொள்ளும் ரீங்காரம்

இயற்கையுடன் இணைந்துவிடும்
இளம்மனது வாய்த்துவிட்டால்
இயற்கையதன் சுகம்யாவும்
யாவருக்கும் இலவசமே

கணந்தோறும் மகிழ்வோடு
சூழலிலே மயங்கவிழும்
மனமதுவும் கொண்டுவிட்டால்
கவிநூறு நம்வசமே

6 comments:

ஸ்ரீராம். said...

கவிதை அருமை.

வெங்கட் நாகராஜ் said...

மனதை மயக்கிய கவிதை. நன்று. பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் ரசித்தேன்...

G.M Balasubramaniam said...

ஊரடங்கு இருக்கும் நேரமிம்மாதிரி கவிதைகள் உசுப்பேற்றலாம்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

ஆகா.. அற்புதமான கவிதை. அருமையாக உள்ளது. வார்த்தையெனும் மலர்களால் அழகாய் கோர்க்கப்பட்ட அற்புத மலர் மாலையாக கவிதை மணம் வீசி மனதை நிறைக்கிறது.

/இயற்கையுடன் இணைந்துவிடும்
இளம்மனது வாய்த்துவிட்டால்
இயற்கையதன் சுகம்யாவும்
யாவருக்கும் இலவசமே/

வாஸ்தவம்.. இயற்கையுடன் கலந்து விட்டால், அதன் பரிசனைத்தும் நமக்கே...! அழகான வரிகள். ஆழமான வரிகளையுடைய இக்கவிதையை மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Yarlpavanan said...

அருமையான வரிகள்

Post a Comment