மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க போராடும் அன்பார்ந்த கணவன்மார்களும், எங்கு தொலைத்தோம் சந்தோஷத்தை என்று தெரியாமல் தேடும் மனைவிமார்களும் இந்த பதிவு......
பிரெஸ்னோ பசிபிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒரு தம்பதியரில் உள்ள பெண்மணியை பார்த்து கேட்டார்.
"உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்கிறாரா?"
அருகிலிருந்த கணவர் நிமிர்ந்து, நம்பிக்கையுடன் அமர்ந்தார். காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை. அவர் சந்தோஷமாகவே இருந்தார்.
ஆனால், அந்த மனைவி தெளிவாக "இல்லை, என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை" என்றார். கணவர் அதிர்ந்தார். ஆனால், மனைவி தொடர்ந்தார்.
"என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை. என்னை சந்தோஷப்படுத்தியதும் இல்லை. ஆனால், நான் சந்தோஷமாக இருக்கிறேன். நான் சந்தோஷமாக இருப்பது என்பது அவரை சார்ந்தது இல்லை. என்னையே சார்ந்தது. நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப்பட்ட விஷயம்."
"வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பது என்பது என் முடிவு. அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்ன பொருளால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்னின்ன தருணங்களில் நான் சந்தோஷமாக இருப்பேனென்றால், நான் பெரும் பிரச்சனையில் இருக்கிறேன் என்று பொருள்."
"நம்மை சுற்றியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்கள், செல்வங்கள், என் உடல், தட்பவெப்பம், என் முதலாளி, சந்தோஷங்கள், நண்பர்கள், எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் எல்லாமே. இது ஒரு நீண்ட பட்டியல்."
"என்ன ஆனாலும் சந்தோஷமாக இருப்பது என்பது நான் எடுத்த முடிவு. நிறைய இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை. வெளியே சென்றாலோ, வீட்டில் இருந்தாலோ, ஏழையாக இருந்தாலோ, பணக்காரியாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை."
"திருமணத்துக்கு முன்னும் சந்தோஷமாகத்தான் இருந்தேன், பின்னும் சந்தோஷமாகவே இருக்கிறேன். என்னை பற்றி எனக்கே சந்தோஷமாக இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன்."
"என் வாழ்க்கையை நான் விரும்ப காரணம் என் வாழ்க்கை மற்றவர்களதை விட சுலபமானதாக இருப்பதால் அல்ல. நான் தனிப்பட்ட முறையில் சந்தோஷமாக இருப்பது என்று தீர்மானித்திருப்பதால். நானே என் சந்தோஷத்துக்கு பொறுப்பு."
"இதை நான் ஒரு தீர்மானமாக மனதில் கொள்ளும்போது, என்னை சுமக்கும் பொறுப்பை மற்றவர்களிடமிருந்து நீக்குகிறேன். நான் என்னைப் பார்த்துக் கொள்வது போல் என்னைச் சுற்றியுள்ள மற்றவர்களும் அவரவர் வாழ்வைப் பார்த்துக் கொள்ளட்டும். இது அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்குகிறது. அதனால்தான், எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது" என்றார்.
அரங்கத்தில் கைதட்டல் ஓயவே இல்லை.
ஆக
உங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள். வெயிலோ, மழையோ, உடல் சரியில்லையா, பணமில்லையோ, காயப்பட்டிருந்தாலோ, விரும்பப்படவில்லையோ உங்கள் மனதில் உள்ள சந்தோஷத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். உங்களை நீங்கள் மனதார மதிக்கும்வரை உங்களுக்குள் நீங்களே சந்தோஷப்பட்டுக் கொள்ளுவீர்கள். அது இந்த உலகத்தில் எத்துனை தேடினாலும் கிடைக்காது. சொல்லப் போனால் மற்றவர்களால் கிடைக்கும் சந்தோஷம் என்பது நிரந்தரமே அல்ல..... திரும்ப எதிர்பார்க்கும் தருணத்தில் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். வாழ்க்கையே நிரந்தரம் இல்லாத போது சந்தோஷம் மட்டும் நிரந்தரமா என்ன ? மனித மனத்தின் எதிர்பார்ப்புகளைப் போல அதுவும் மாறிக் கொண்டே இருக்கும். மற்றவர்கள் உங்கள் சந்தோஷத்தின் ஒரு கருவியே தவிர மற்றபடி உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். சின்ன சின்ன சந்தோஷங்கள் எதில் கிடைத்தாலும் அதில் ஆனந்தம் கொள்வது அவரவர் கையிலே. மனதிலே. மகிழ்ச்சியும் அப்படியே.... மற்றவர் என்பதில் அனைத்து குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உற்றார், உறவினர்களும் அடக்கம். அவரவர் சந்தோஷத்தை தக்க வைத்துக் கொள்வது அவரவர் கையில் மட்டுமே.எல்லா சமயத்திலும் நம்மை மற்றவர் தான் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பது முடியுமா....சந்தோஷம் என்பது உங்களுக்கு உள்ளே உள்ளது. அதை உங்களுக்குள்ளே தேடுங்கள். கட்டாயம் கிடைக்கும். வெளியில் இல்லவே இல்லை...... தேடாதீர்கள். கிடைக்காது....படித்ததில் பிடித்தது..
16 comments:
என்றோ வாசித்தது...
ஒரு பதிவில் ஒரு குரல் :-
இல்லாமல் இருப்பதிலிருந்து இருப்பதை கொண்டு வருவதே வாழ்க்கை... மகிழ்ச்சியும் அப்படித்தான்; இன்னும் பலவற்றும் அப்படித்தான்... (அட... சரியாகத்தான் எழுதியுள்ளேன்...!)
பதிவின் இணைப்பு : → தெரியாததை x என்க...! ←
நன்றி ஐயா...
சரியாகத்தானே எப்போதும் எழுதுகிறீர்கள்...உடன் வரவுக்கும் பாராட்டுரைக்கும் வாழ்த்துகள்..
இருக்கும் இடத்தை விட்டு இலலாத இடம் தேடி அழைக்கிறோம். உள்ளே இருப்பது தெரியாமல் வெளியே தேடுகிறோம்.
ஆம் ...சுருக்கமாக என்றாலும் மிகச் சரியான கருத்துக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்..
மகிழ்ச்சி என்பது நம் மனதில்தான் இருக்கிறது. ஆனால் அதை வெளியில் தேடுகிறோம்
துளசிதரன்
இது போன்ற பதிவுகளை வாசிக்க்கும் போது எனக்கு டக்கென்று நினைவுக்கு வருவது தாஸேட்டன் கச்சேரியில் பாடும் ஒரு பாடல். அது யார் எழுதியது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் தாஸேட்டன் பாடிக் கேட்டதோடு சரி நெட்டிலும் தேடிப் பார்த்தேன் அந்தப் பாடலை கிடைக்கவில்லை
இல்லாததை நினைத்து வருந்துகிறான் அது எட்டாததை நினைத்துக் கொட்டாவி விடுகிறான். எல்லாம் மனதுள் இருக்க இன்பம் அது எங்கே என்று
வரிகள் சரியாக நினைவில்லை ஆனால் வெளியில் தேடுகிறோம் என்பதுதான் பொருள்
கீதா
மகிழ்ச்சிக்கு காரண்ம் நம்முள் தான் என்பது சரிபோல் தோன்றினாலும் நிதர்சனம் அதுவல்ல பலரும் பல விஷயங்களும் சந்தோஷத்துக்குக்காரணம்
''உன் வாழ்க்கை உன் கையில்'' என்பது போலுள்ளது இக்கட்டுரை அருமை.
வணக்கம் சகோதரரே
சந்தோஷத்தைப் பற்றிய சந்தோஷமான பதிவு அருமை. சந்தோஷத்தை வெளியில் தேடினால் கிடைக்காது. நம்முள் நாமே அதை பிரதிபலித்து தக்க வைத்துக் கொண்டால் நம் வாழ்வு நன்றாக இருக்கும்.. உண்மைதான்.. நல்லதொரு பகிர்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான விரிவான பதிலுரைக்கு மிக்க நன்றி
ஆம் அதுவே...வாழ்த்துக்கு நன்றி..
பலரும் இருந்தாலும் நம்முடைய எதிர்வினைதானே முக்கிய காரணம்?
பாடல் கிடைத்திருந்தால் இப்பதிவுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கும்...தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான பதிலுரைக்கும் மிக்க நன்றி..
ஆம்..இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறோம்..தங்கள் வரவுக்கும் அருமையான பதிலுரைக்கும் நல்வாழ்த்துகள்..
மிக அருமையான எண்ணோட்டம். அந்த அம்மா
மிகத் தெளிவாக இருக்கிறார்.
80 சதவிகிதம் சரிதான்.
மறுபாதி வந்து உன்னை உபத்திரவித்தால்
அதிலிருந்து விடுபடவும் தெரிய வேண்டும்.
மிகத் தெளிவான பதிவு ஸ்ரீ ரமணி.
உங்கள் தளத்தின் பெயரோடு ஒத்துப்போகிறது இன்றைய பதிவின் சாராம்சம் - தீதும் நன்றும் பிறர்தர வாரா.
Post a Comment