Friday, August 14, 2020

பொறுப்பும் சுதந்திரமும்...

கம்னியூச நாட்டிலிருந்து
ஒரு கொழுகொழுத்த நாயும்

நம்போன்ற
ஜனநாயக நாட்டிலிருந்து
எலும்பும் தோலுமாய் ஒரு நாயும்

எல்லைக் கோட்டில் அதிருப்தியுடன்
சந்தித்துக் கொள்கின்றன

"எங்கள் நாட்டில்
உணவுக்குப் பஞ்சமில்லை
ஆனால் குரைக்கத் தான் முடிவதில்லை "
என்றது கொழுத்தது

"எங்கள் நாட்டில்
எப்போது வேண்டுமானாலும்
யாரைப் பார்த்தும்  குரைக்கலாம்
சோத்துக்குத்தான் பாடாய்ப்படனும்"
என்றது மெலிந்தது

இரண்டும் ஒத்தமனதுடன்
இடம் மாறிக்கொள்ளச் சம்மதித்து
நாடு மாறிக் கொண்டன

பொறுப்பறியா சுதந்திரமும்
சுதந்திரமில்லா பொறுப்புக்களும்
மீண்டும் சலிப்படையத்தான் செய்யும்
என்பதை உணராமலேயே...

இதே காரணத்திற்காக
இவை இரண்டும் மீண்டும்
மாறித் தொலைக்க வேண்டி இருக்கும்
என்பதை அறியாமலேயே

11 comments:

துரை செல்வராஜூ said...

அருமை.. அருமை..

இதனால் தான் அறிவு கெட்ட நாய் என்ற பெயர் வழங்கலாயிற்று...

துரை செல்வராஜூ said...

அன்பின் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்...

வெங்கட் நாகராஜ் said...

சுதந்திர தினத்திற்கான கவிதை நன்று.

KILLERGEE Devakottai said...

இன்றைய சூழலுக்கு பொருத்தமாய்....

G.M Balasubramaniam said...

இதையே வேறுவிதமாக ----ஒரு அமேரிகன் எங்கள் நாட்டில் எங்களால் அமெரிக்க ப்ரெசிடெண்ட் ஒரு முட்டாள் ந்று கூறமுடியும்என்று பிற்றிக்கொண்டானாம் இடைக் கேட்ட ரஷ்யனொருத்தன் எங்களாலும் அமெரிக்க ப்ரெசிடெண்ட் ஒருமுட்டாள் என்று சத்தமாகச் சொல்லமுடியும் என்றானாம்சுதந்திரம் பற்றி அப்பாதுரையின் எழுத்து என்னை ஈர்த்தது அடை என் பதிவுகள் சிகவற்றில் உபயோகித்து இருக்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

சுதந்திர தின வாழ்த்துகள்...

koilpillai said...

அருமை , அருமை.. கற்பனை சிறப்பு.

ஸ்ரீராம். said...

இக்கரைக்கு அக்கரை பச்சை...   இல்லாத பொருள்மீது எல்லோர்க்கும் ஆசை வரும்!  கவிஞர் சொல்லி இருக்காரே...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

Thulasidharan V Thillaiakathu said...

இத்தினத்திற்கான கவிதை அருமை

துளசிதரன்

கவிதை அருமை. கற்பனையை ரசித்தேன். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல

கீதா

balu said...

அருமையான உபமானம் உபமேயம்.

Post a Comment