ஆரம்பத்தில்
சீனாவில்
கொரோனாவால் ஏற்பட்ட
ஒரு சில மரணத்திற்கே
பதறிய மனம்.....
இப்போது
உலகெங்கும்
இலட்சக்கணக்கில் என்றபோதும்
சமநிலை பேணுகிறது...
மாலைச் செய்தியில்
மரண அறிக்கையினைக் கேட்கக் கேட்க
உறவுகளை இழந்தது போல்
நடுங்கிய மனம்....
இப்போது
அடுத்த வீட்டில் என்றாலும் கூட
அதை ஒரு தகவலாக மட்டுமே
கணக்கில் கொள்கிறது...
புராணங்களும்
போதனைகளும்
தராத ஞானத்தை
ஒரு நுண்கிருமி தந்து போனது கூட
ஒருவகை நகை முரணே...
இருந்தும் உண்ணாதிருத்தலும்
இல்லாமையால் உண்ணாதிருப்பதும்
விரதக் கணக்கில் சேர்த்த கதையாய்...
உணர்ந்து தெளிந்து பெறும்
ஆத்ம ஞானமும்...
இயலாது அடங்கிப் பெற்ற
இந்த அல்ப ஞானமும்..
இப்போது ஒரே கணக்கில்....
6 comments:
இந்த உலகின் ஒரே பெருமை :-
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு
மனம் நூலறுந்த பட்டம் போல ஆகிவிட்டது
உணர்ந்து தெளிந்து பெறும்
ஆத்ம ஞானமும்...
இயலாது அடங்கிப் பெற்ற
இந்த அல்ப ஞானமும்..
இப்போது ஒரே கணக்கில்....
உண்மை, உண்மை, அருமை
ஆறுமாதமாகக் கண்டு அறிந்து வரும்
பயம், தெளிவு, திகைப்பு,
ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை
எல்லாமே மனதைக் கலங்கத்தான் வைக்கின்றன.
மீண்டு வரவேண்டும்.
கடந்த ஐந்தாறு மாதங்களும் நமக்கு விதம் விதமான படிப்பினைகளைத் தந்துச் சென்றிருக்கின்றன.
கவிதை நன்று.
உண்மைதான்.
Post a Comment