பால்கனியே
பூங்கா ஆகிப்போக
பிக் பாஸ்கெட்டே
மார்கெட் ஆகிப் போக
செல்போனே
சமூகத் தொடர்பென ஆக
முன்பு
சிலிர்ப்பூட்டிய
சுவாரஸ்யப்படுத்திய
பிக் பாஸ்
இப்போது
சலிப்பூட்டுவதாக
மிக மிக எரிச்சலூட்டுவதாக.
இருக்கவே சாத்தியம் அதிகம்..
ஆம்
வெளியிலிருந்து
கூண்டுக்குள் இருப்பதைப்
பார்க்கிற சுவாரஸ்யம்....
கூண்டுக்குள் இருந்து
கூண்டுக்குள் பார்க்கச் சாத்தியமா என்ன ?
12 comments:
ஸூப்பர் கேள்வி கவிஞரே...
முதல் வரவுக்கும் உற்சாகமூட்டும் பதிலுரைக்கும் வாழ்த்துகள்..
உண்மை
நேர்மறையான பதிலுரைக்கு வாழ்த்துகள்..
அட...இந்தக் கோணம் புதுசா இருக்கே. ஒருவேளை அடைந்துகிடக்கும் மனிதர்கள், பிக் பாஸில் கலந்துகொள்ளும் மக்களின் அடாவடி விநோத மனநிலையைப் புரிந்துகொள்வார்களோ?
ஆம் அதற்கும் அதிக வாய்பிருக்கிறது..அருமையான பதிலுரைக்கு வாழ்த்துகள்..
நல்ல கேள்வி. பிக் பாஸ் - பார்ப்பதே இல்லை. மற்ற தொலைகாட்சி நிகழ்ச்சிகளும்!
நானும்...உங்களைப் போலவே..
ந்ம்க்கு தெரிந்தவர்களை அவர்களை அறிந்து கொள்ள் பிக் பாஸ் பயன்படலாம் that helps us to peek into their behaviour
ஆம் ...உண்மையான அவர்களை..அவர்களுக்கே தெரியாத அவர்களை..
அதானே... உண்மை தான்...
In big boss everything is scripted.
Post a Comment