என் பெண்ணும் மாப்பிள்ளையும் அமெரிக்காவில்
இருப்பதால் ஆறு மாதப் பயணமாக மூன்று முறை
அமெரிக்கா சென்று வரும்படியாக அமைந்தது
மூன்றில் இரண்டுமுறை சமமான சீதோஷ்ண நிலை
இருந்த காலத்தில் சென்று வந்ததால் உடலுக்கு
எவ்வித பிரச்சனையும் இல்லை. ஒருமுறை மட்டும்
குளிர்காலத்தில் சென்று வரும்படியாக இருந்தது.
எங்களுக்கு இந்த மைனஸ் டிகிரி உஷ்ண நிலை
யெல்லாம் பரிச்சயமில்லை என்றாலும் அங்கு
வீடு மற்றும் செல்லும் மால்கள் முதலான
இடங்களில் எல்லாம் சீதோஷ்ண நிலையை
சமன் செய்யும்படியானவசதிகள் எங்கும் இருந்ததால்
வீட்டுக்குள் இருப்பதும் மால்கள் செல்வதும்
பிரச்சனையில்லை.
ஆனால் வெளியில் தான் எத்தனை பாதுகாப்பாக
உடை அணிந்து கொண்டாலும் ஐந்து நிமிடங்கள்
கூட தொடர்ச்சியாக இருக்க முடியாது..
இந்த அனுபவத்தை நேரடியாக அனுபவித்த பின்புதான்
கோடையை ஏன் அவ்வளவு சிறப்பாகக்
கொண்டாடுகிறார்கள் என்பதைப் புரிந்து
கொள்ளமுடிந்தது..நாங்களும் அவர்களுடைய
மனோபாவத்திற்கு மாறி கோடையை
மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தோம்
அது குறித்து எழுதவும் புகைப்படங்களைப்
பகிரவும் நிறைய இருந்தாலும் இப்போது
இந்தப் பதிவு அதற்கானது இல்லை என்பதால்
அந்தக் குளிரின் காரணமாக கொண்ட
ஒரு அசௌகரியத்தை உடல் உபாதையை
அது தீர்ந்த விதத்தை பகிர்ந்தால்
அனைவருக்கும் அது பயன் தரலாம் என
இப்போது பகிர்கிறேன்
ஆறு மாதம் அங்கு இருந்து வந்த ஒரு வாரம்
எந்தப் பிரச்சனையுமில்லை. ஒரு வாரம் கழித்து
காலை நேரம் படுக்கையை விட்டு எழுகையில்
வலது கையை அசைக்க முடியவில்லை.
இடது கைப்பிடித்து தூக்கினாலும்
ஒரு நாற்பது டிகிரிக்கு மேல் நகர்த்தவே
முடியவில்லை.
சரி படுத்து இருந்ததில் வேலை செய்ததில்
ஏதாவது நரம்புப் பிசகு நேர்ந்திருக்கும்
இரண்டு நாள் லேசான பயிற்சிகள் செய்து
பார்ப்போம் என முயற்சித்ததில் வலியும்
தூக்க முடியாத நிலையும்கூடியதே தவிர
குறைகிற பாடாய்க் காணோம்
சரி இதற்கு மேல் ரிஸ்க் எடுக்க வேண்டாம்
என மருத்தவரைப் பார்க்கப் போனேன்..
அவர் சொன்ன விஷயம் அதிர்ச்சி
அளிப்பதாக இருந்தது
மீதி அடுத்தப் பதிவில்
10 comments:
குளிர் என்ன செய்தது . நலம் ஆன விபரம் அறிய ஆவல்
உண்மை தான். முதலில் சென்றது வாக்கிஹென் (சிக்காகோ). அங்கு கடுமையான பனிப்பொழிவு. சாலையெல்லாம் பனிக்கட்டி மூடியிருந்தது. பிறகு (ப்ளோரிடா) Tampa. அங்கு முழுக்க முழுக்க நம் தமிழ்நாட்டு தட்பவெப்பநிலை தான்.
ரொம்ப ஆவலா படிக்க வந்தால், 'மீதியை வெள்ளித் திரையில் காண்க' என்று சொல்லிட்டீங்களே. அடுத்த தடவை இடுகை போடும்வரை இதை நினைவில் வைத்திருக்கணுமே
அடுத்தப் பதிவில்
என்றதும்
அதிர்ச்சி
வலி தீர்ந்த விதம் சொல்லுங்கள். தொடருங்கள்.
தொடர்ச்சி...என்பது அதிகம் சிந்திக்க வைத்துவிட்டது.
அதிர்ச்சியோடு காத்திருக்கிறேன்
வணக்கம் சகோதரரே
அனுபவங்களை விவரிப்பது சுவையானவை. ஆனால் கவலை நிரம்பிய அனுபவங்கள் எங்களுக்கும் அதிர்ச்சியை தருகிறது. மருத்துவர் நல்லபடியாக குணமாக்கியிருப்பார் என்ற நம்பிக்கையோடு அடுத்த பதிவிற்கும் காத்திருக்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அடுத்து என்ன நடந்தது, எப்படி சமாளித்தீர்கள், எவ்வளவு நாட்கள் சிரமப்பட்டீர்கள் போன்ற கேள்விகள் மனதில் வருவதை தவிர்க்க முடியவில்லை....
அதீத குளிர் - சமாளிப்பது கடினம் தான். சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை. உங்கள் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
Post a Comment