வருடப் பிறப்பும் வேப்பம்பூ பச்சடியும்
"எங்கள் வீட்டில்
எல்லா வருடப் பிறப்பின் போதும்
வேம்பம்பூப் பச்சடி உண்டு
சில வருடங்களில்
நான் காலண்டர் இல்லாதே கூட
வருடத்தைக் கடத்தி இருக்கிறேன்
ஆனால் வேப்பம்பூப் பச்சடி இன்றி
ஒரு வருடப் பிறப்பைக் கூடக்
கடந்ததே இல்லை..
காரணம்
காலத்தோடு பிணைக்கப் பட்டிருப்பதை
மறந்து நான்
காலண்டரோடு பிணைந்து
குழம்பித் திரிவதைப் போல
எங்கள் வீட்டு வேம்பு
என்றும் குழப்பம் கொண்டதே இல்லை..
(அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள் )
8 comments:
வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. ஆம். எங்கள் வீட்டிலும் வேப்பம்பூ பச்சடி வருடா வருடம் உண்டு. வேம்பும், வருடப்பிறப்பும் இணை பிரியாத தோழர்கள் என்று நானும் நினைப்பேன். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வேப்பம்பூப் பச்சடியுடன் வாழ்த்துகள் ஐயா...
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா .வேப்ப மரம் வீட்டில் ஊரில் இருந்தது அப்போ அதன் அருமை தெரில .இப்போ வெளிநாட்டில் அந்த பூ தமிழ் கடைகளில் தேடி அலைகிறேன் .
தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள். எங்கள் வீட்டிலும் வேப்பம்பூ பச்சடி உண்டு.. "எமனுக்கு கசப்பாக, மனிதனுக்கு தித்திப்பாக" என்று சொல்லி மூன்று முறை எங்கள் கையில் விடுவார் அம்மா.
வணக்கம்
ஐயா நிச்சயம் நிகழ்வில் பங்கு பற்றுகிறேன்
இனிய சித்திரைப் புத்தாண்டு
எங்கள் வீட்டில் செய்ததில்லை. ஆனால் நண்பர்கள் வீட்டில் செய்துள்ளார்கள். பார்த்திருக்கிறேன்.
வேப்பம்பூ பச்சடி - தில்லி வந்த பிறகு இவையெல்லாம் மறந்தே போனது எனக்கு.
“எமனுக்கு கசப்பாக, மனிதனுக்கு தித்திப்பாக” - முதல் முறையாக கேட்கிறேன் ஸ்ரீராம்.
//முதல் முறையாக கேட்கிறேன் ஸ்ரீராம்.//
:))
Post a Comment