Tuesday, October 12, 2021

"செம்மொழி "

 இன்று அக்டோபர் 12


தமிழுக்கு "செம்மொழி" அங்கீகாரம் வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்ட  நாள் அக்டோபர் 12,2004.


       1999 ஜனவரி 16ஆம் நாள், சென்னையில்

நடைபெற்ற திருவள்ளுவர் நாள் விழாவில் பேசிய முதலமைச்சர் கலைஞர், “தமிழ்செம்மொழியா, இல்லையா? என்ற விவாதம், இனிமேலும் தேவை இல்லை. தமிழ் செம்மொழிதான். நடுவண் அரசு அதைஉடனடியாக அறிவிக்கவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

       கலைஞர் வலியுறுத்தலுக்கு இணங்க, 2004-ம்ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் நடைபெற்ற நடுவண் அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழை செம்மொழியாக அறிவிக்க முடிவுசெய்யப்பட்டது.

       அதற்கான ஆணை, 2004ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் வெளியிடப்பட்டது.     

        தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை இன்று நேற்று ஏற்பட்டதல்ல.

        திமுகவின் மூதாதையர் தம் அமைப்பான நீதிக்கட்சி 1918 மார்ச் 30, 31 தேதிகளில் நடத்திய தஞ்சை, திருச்சி பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டிலேயே தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

       1918 மார்ச் 18-ம் நாள் சென்னை பச்சையப்பன்  கல்லூரியில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டிற்காக கூடிய புலவர்கள் தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி இருந்தனர்.

         “உலகில் பிற நாட்டாரின் தாய்மொழியாய்த் தமிழ் இருந்திருக்குமே யானால் அது இந்நேரம் உலகப் பொது மொழியாய் அமைந்திருக்கும்” என்றார் நமது தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

         திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்த அற்புதமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தலைவர் கலைஞர் அவர்கள் தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்.

         தலைவர் கலைஞரது கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 12.10.2004 அன்று தமிழைச் செம்மொழியாக அறிவித்து ஆணை பிறப்பித்தது. 

         இந்திய மொழிகளிலேயே அதிகாரப்பூர்வமாக செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்மொழி தான். 

        30.6.2008 அன்று முதலமைச்சர் கலைஞர் சென்னை திருவல்லிக்கேணியில் செம்மொழி தமிழ் ஆய்வு மைய நிறுவனத்தினை திறந்து வைத்தார்கள்.


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ் வாழ்க... வளர்க...

கரந்தை ஜெயக்குமார் said...

செம்மொழி போற்றுவோம்

வெங்கட் நாகராஜ் said...

செம்மொழி தமிழ் மொழி....

வளரட்டும் தமிழ்.....

Post a Comment