இன்று ஜனவரி 24
இந்தியாவின் முதல் பெண் அதிகாரி
சி.பி. முத்தம்மா
பிறந்த தினம்.
(24.1.1924).
இந்தியாவின் உயர் அதிகாரிகளாக ஆவதற்கு ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்.
ஆனால் அவற்றில் வெற்றி பெற்றாலும் பெண்கள் அதில் சேர முடியாத நிலை இருந்தது.
அதை முதலில் உடைத்து வெற்றி பெற்ற பெண் சி. பி. முத்தம்மா கர்நாடகத்தில் பிறந்தவர்.
அவர் சென்னையில் உள்ள பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். சென்னை பிரெசிடென்ஸி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரிகளில் மூன்றுமுறை தங்கப்பதக்கம் பெற்ற மாணவி.
இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949ல்
சி.பி. முத்தம்மா பணியில் சேர்ந்தார்.
அந்த காலத்தில் வெளியுறவுத் துறையில் உள்ள பெண் அதிகாரி திருமணம் செய்ய வேண்டும் என்றால் அரசின் அனுமதியைப் பெற வேண்டும், திருமணம் வேலையைத் தடுக்கிறது என அரசு கருதினால் அவர் ராஜினாமா செய்துவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பல விதிகள் இருந்தன.
அவற்றை எதிர்த்து முத்தம்மா உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணய்யர் தனது தீர்ப்பில் “வெளியுறவுத் துறையில் காணப்படும் 8(2)ஆம் விதி பெண்களுக்கெதிரான பாகுபாட்டை வெளிப்படையாகக் காட்டுகிறது என்று கூறினார்.
மேற்காணும் பாலியல் பாகுபாடு நிறைந்த விதிகள் நீக்கப்பட்டதாக வெளியுறவுத் துறையின் சார்பில் பிரமாணப் பத்திரம் அளிக்கப்பட்டதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
முத்தம்மாவின் தகுதி பதவி உயர்வுக்கு ஏற்றதாக இருக்கிறதென அறிவித்த அரசு அவரை நெதர்லாந்துக்கான இந்தியத் தூதராக நியமித்தது.
இந்த வழக்குக்குப் பிறகு ஆணாதிக்க விதிகள் உடனே மாற்றப்பட்டன.
இதனால் முத்தம்மா பதவி உயர்வுகளைப் பெற்றார்.
வெளிநாட்டு தூதர், ஹைகமிஷனர் பதவிகளில் அமர்ந்த முதல் இந்தியப் பெண் ஆனார்.
2 comments:
பாராட்டப்பட வேண்டியவர். அநியாய விதிகளை அதிரடி ஆக்ஷன் எடுத்து மாற்ற வைத்திருக்கிறார்.
சிறப்பான தகவல். அங்கீகாரத்திற்கு இப்படியெல்லாம் போராட வேண்டி இருந்திருக்கிறது.
Post a Comment