என்னுடல்
என் மனம்
என் சுகம்
இதைக் கடந்து
சமயலறை
படுக்கையறை
வாசல்படி
இதைக் கடந்து
என் ஜாதி
என் மதம்
என் இனம் கடந்து
எனது தெரு
எனது ஊர்
என் நாடு கடந்து
என்பணி
என் சகா
என் வர்க்கம் கடந்து..
இப்படி
எல்லாவற்றியும் கடந்து கடந்து
அனைத்தையும்
மிகச் சரியாகக்
கடந்துவிட்டதாக எண்ணி
மகிழ்ந்து நிமிர்கையில்
எதிரே
"உன்னத வாழ்வுக்கான பாதை
இங்குதான் துவங்குகிறது "
என்கிற அறிவுப்புப்புடன்
நீண்டு செல்கிறது
ஆளரவமற்ற
ஒரு நெடுஞ்சாலை
குழம்பிபோய்
கடந்துவந்த பாதையைப் பார்க்க
காலம், சக்தி ,செல்வம்
அனைத்தையும்
ஏய்த்துப் பிடுங்கிய
எக்களிப்பில்
எகத்தாளமாய் சிரிக்கிறது அது
2 comments:
எல்லா நாளும் எல்லாக் காலமும் நல்ல நாளே கடந்து செல்லும் வரை.
சென்றதை செலவில் வைப்போம்
வருவதை வரவில் வைபவம்.
இன்று போல் என்றும்
கொண்டாடுவோம்.
Jayakumar
அதுவே...
அதுதான்...
வாழ்க்கை...
Post a Comment