சாணக்கியத் தனமேஅரசாள அச்சாணி
எனும் போலி நம்பிக்கையை
மக்கள் மன்றத்தில் சிலர்
பரப்பிக் கொண்டிருந்த காலத்தில்.
இல்லையில்லை
மக்கள் நல மனத்தாலும்
மனிதாபிமானத்தால் கூட
அது சாத்தியம் என
நிரூபித்துக் காட்டியவனே..
கலை கலைக்காகவே
எனும் பழமை வாத வழியில்
பலர் பயணப்பட்டு
விருதுகளும் கேடயங்களும்
பெற்றுக் கொண்டிருந்த காலத்தில்
கலை மக்களுக்காகவே
எனும் கொள்கை வழியில்
திடமாய் இருந்து
ஏழை எளிய மக்களின்
உள்ளம் கவர்ந்த உயர்ந்தவனே
வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில்
நிறைந்தவர் யார் எனும்
கேள்வியை நீயே எழுப்பி
மறைந்து ஆண்டுகள்
நாற்பதை நெருங்கியும்
மக்கள் மனங்களில்
மறையாது நிலைத்து
அது "நான் தான் "என நிரூபிப்பவனே
உன்னை நினைத்திருப்பதே
எங்கள் நலம் எங்கள் பலம்
உன் பிறந்த நாளில்
உன் நினைவுகளில் மூழ்குவதையே
தவமாகக் கொள்கிறோம்
இன்றுபோல் என்றென்றும்
வாழ்க நீ வாழ்க நீ
தமிழகத்தின் தவப்புதல்வனே
3 comments:
//மறைந்தது ஆண்டுகள் நாற்பதை நெருங்கியும் மக்கள் மனதில் மறையாது நிலைத்து நிலைத்து நிற்பவர் //
உண்மை. உளம் வியக்கும் உண்மை.
இவரைப் பற்றி பல கருத்துகள் நிலவினாலும் இன்றும் பலர் அவர் மறையவில்லை என்றும் தெய்வமாகவும் கூட வழிபடுவதைப் பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கிறது!
கீதா
எல்லோரும் வயிறு நிறைய சாப்பிடவேண்டும். பணம் வேண்டும் என்று யார் வந்தாலும் அள்ளிக் கொடுக்கவேண்டும். மக்கள் ஏழ்மையில் வாடக்கூடாது என்று நிஜமாகவே நினைத்த மனிதர். அதனால் தான் மறைந்து 40 வருடம் ஆனாலும் மக்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!
Post a Comment