கஞ்சத்தனத்திற்கும்
சிக்கனத்திற்கும் இடையில்தாராளத்திற்கும்
ஊதாரித்தனத்திற்கும் இடையில்
பழக்கத்திற்கும்
நட்புக்கும் இடையில்
நட்புக்கும்
காதலுக்கும் இடையில்
விளக்கதிற்கும்
விவாதத்திற்கும் இடையில்
விவாதத்திற்கும்
பகைமைக்கும் இடையில்
வேண்டுதலுக்கும்
கோரிக்கைக்கும் இடையில்
கோரிக்கைக்கும்
போராட்டத்திற்கும் இடையில்
பொறுமைக்கும்
சகிப்பினுக்கு இடையில்
சகிப்பினுக்கும்
வெறுப்பினுக்கும் இடையில்
எதிர்பார்ப்பிற்கும்
ஆசைக்கும் இடையில்
ஆசைக்கும்
வெறித்தனத்திற்கும் இடையில்
அனுபவ உரைக்கும்
அறவுரைக்கும் இடையில்
அறவுரைக்கும்
அறிவுரைக்கும் இடையில்
.....................................
...........................................
மொத்தத்தில்
சிவப்புக்கும்
பச்சைக்கும் இடையில்
மஞ்சளாய் எச்சரிக்கும்
ஒரு சூட்சுமக் கோடே
லெட்சுமணக் கோடு
அதைக்
காணத் தெரிந்தவனுக்கு
கண்டுத் தெளிந்தவனுக்கு
அதன் பலம் அறிந்தவனுக்கு
என்றும் இல்லை கேடு
3 comments:
வணக்கம் சகோதரரே
கவிதை வரிகள் அருமை. லெட்சுமணக் கோட்டின் சூட்சுமத்தை ரசித்து புரிந்து கொண்டேன். அழகாக எழுதியுள்ளீர்கள்.பாராட்டுகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
லக்ஷ்மணன் கோடு பலருக்கும் தெரிவதே இல்லை. சிறப்பான ஒப்பீடு. பாராட்டுகள்.
அருமை...
Post a Comment