Wednesday, May 25, 2022

உண்மையாய் நடிப்பவர்கள்

 துடிப்பது தமிழ்... தமிழ் என்று... : நடிப்பது ஹிந்தி... ஹிந்தி நன்று!


பதிவு செய்த நாள்: மே 09,2022 


தமிழகத்தில் கடந்த ஓராண்டாக தமிழ்ப் பற்றும், ஹிந்தித் திணிப்பும் என பரபரப்பாக சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.


 தமிழுக்கு ஆதரவாகவும், ஹிந்தித் திணிப்புக்கு எதிராகவும் பல சினிமா பிரபலங்களும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.


தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு அதன் மீது பற்றும், பாசமும் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 


தமிழுக்காகவே தங்களை அர்ப்பணித்தது போல பேசும் சிலர் வெளியில் தமிழ்…தமிழ்…எனப் பேசிவிட்டு, திரை மறைவில் ஹிந்திக்கு வலை வீசுவதையும் பார்க்க முடிகிறது.


தமிழ் சினிமாவில் இன்றல்ல கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தி சினிமா நட்சத்திரங்கள்தான் முன்னணியில் இருந்து வருகிறார்கள். 


இங்குள்ள தமிழ் பேசத் தெரிந்த, தமிழ் நடிகைகளுக்கு பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வாய்ப்பளிப்பதே இல்லை.


 தமிழ் நடிகைகளுக்கு சில பல லட்சங்கள் சம்பளம் தந்தாலே போதும். 


ஆனால், பாலிவுட்டிலிருந்து வரும் நடிகைகளுக்கு கோடிகளில் சம்பளம், அவர்களுடன் வரும் உதவியாளர்களுக்கு சம்பளம் என எத்தனை கோடி செலவானாலும் தரத் தயாராக இருக்கிறார்கள்.


இங்கு வெற்றி பெற்று ஓரளவு பேரும், புகழும் அடைந்த சிலருக்கு உடனே ஹிந்திக்குப் போக வேண்டும் என்று ஆசை.


 இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலருக்கும் அந்த உண்டு. இங்கிருந்து அங்கு போக வேண்டும் என்ற ஆசையில் சிலர் இருக்க, இங்கு தங்களை நிலை நிறுத்திக் கொள்ள அங்கிருந்து இங்கு ஆட்களை அழைத்து வருபவர்களும் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். 


அது நடிகை, நடிகர்களுடன் நின்று விடாமல் தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் வரை கூடிக் கொண்டே போகிறது.


ஹிந்தியை தீவிரமாக எதிர்க்கும் திமுக.,வின் வாரிசு நடிகரான உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள படம் தான் நெஞ்சுக்கு நீதி. 


அந்த படம் ஹிந்தி படமான ‛ஆர்டிக்கிள் 15' படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது.


அஜித்குமார் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹிந்தித் தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிப்பில் நடித்து வருகிறார். “நேர்கொண்ட பார்வை, வலிமை” படங்களைத் தொடர்ந்து தன் 61வது படத்தையும் அவர் தயாரிப்பில்தான் நடிக்கிறார் அஜித்.


தமிழில் தொடர்ந்து தன்னை ஒரு தனித்துவமான இயக்குனர் எனக் காட்டிக் கொள்ளும் பா.ரஞ்சித் கடைசியாகத் தயாரித்த 'ரைட்டர்' படத்திற்கு பாலிவுட் தயாரிப்பாளர்களுடன்தான் கூட்டு சேர்ந்துள்ளார்.


 'பிர்சா முண்டா' வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ஹிந்தியில் இயக்குவதாக அறிவித்தார்.


தங்கள் குடும்பத்தையே தமிழ் ஆதரவாளர் குடும்பமாகக் காட்டிக் கொள்ளும் சூர்யா, அடுத்து ஹிந்திக்குச் சென்றுள்ளார். 


அங்கு அக்ஷய்குமார் நடிக்கும் 'சூரரைப் போற்று' படத்தை அவர் தயாரிக்கிறார். அது மட்டுமல்ல கடந்த சில வருடங்களாக அவர் நடித்த படங்களை ஹிந்தியிலும் டப்பிங் செய்து வெளியிட அவர் எந்த மறுப்பும் சொல்லவில்லை.


சர்ச்சைகள் வரும் போதெல்லாம் தன்னை தமிழுக்கு ஆதரவாகக் காட்டிக் கொள்ளும் ஏ.ஆர்.ரஹ்மான், ஹிந்தியில் இசையமைத்த படங்கள் தான் அதிக வெற்றியை ஈட்டியுள்ளன.


 அவரை உலக அளவிற்கும் கொண்டு சென்றுள்ளன. இப்போதும் ஹிந்தி சினிமாவை விட்டு அவர் விலகவில்லை.


'ஹிந்தி தெரியாது போடா' என்று டி ஷர்ட் போட்டு பரபரப்பை ஏற்படுத்திய சமயத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ‛ஐயம் தமிழ் பேசும் இந்தியன்' என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்திருந்தார். 


இவரும் ஹிந்தியில் ராஜா நட்வர்லால் என்ற படத்தில் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்துள்ளார்.


 அதேப்போன்று சமீபத்தில் ஹிந்தியில் டாப் டக்கர் என்ற ஆல்பம் வெளியானது. இதில் ராஷ்மிகா உடன் ஆடி, பாடி, நடித்து இசையும் அமைத்திருந்தார் யுவன்.


யுவனை போன்று 'ஹிந்தி தெரியாது போடா' என்று டி ஷர்ட் போட்டு பரபரப்பை ஏற்படுத்திய தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், 'டாடி' என்ற ஹிந்திப் படத்தில் நடித்திருக்கிறார்.


இப்படி முன் வாசலில் ஹிந்தியை எதிர்த்துப் பேசிவிட்டு, பின் வாசல் வழியாக ஹிந்திக்கு சால்வை அணிவித்து வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள் இந்தத் தமிழ் ஆர்வலர்கள். 


பேசுவது ஒன்று, செய்வது மற்றொன்றாக இருக்கிறது இவர்களது செயல்கள்.


(https://m.dinamalar.com/cinema_detail.php?id=104949)

4 comments:

ஸ்ரீராம். said...

படித்திருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

படித்திருக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

வருமானம் முக்கியம்! வருமானம் என்று வரும் போது கொள்கை என்று ஒன்று இல்லை!

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ் வாழ்க...!

Post a Comment