சிறு வயதில் நீச்சல் கற்றுக் கொள்வது எளிது.அப்படியே சைக்கிள் கற்றுக் கொள்வதும்...அந்தப் பருவத்தில் கற்றுக் கொள்ளாது பெரியவர்கள் ஆனதும் அதனைக் கற்றுக் கொள்ள அதிகம் மெனக்கெட்டவர்களையும் அல்லது கற்றுக் கொள்ள இயலாதே போனவர்களையும் அதற்காக வருத்தப்படுபவர்களையும் எனக்கு அதிகம் தெரியும். நாம் கடலையா /ஆற்றையா கடக்கப் போகிறோம் அப்படி கடக்க வேண்டி இருந்தாலும் படகு இருக்கிறது கப்பல் இருக்கிறது எனச் சொல்வது இப்போது புத்திசாலித்தனமாக ஏன் பகுத்தறிவுடன் பேசுவதுப் போலப் படலாம். ஆனால் அழகிய ஏரியைக் கண்டதும் சட்டென இறங்கி நீந்தத் துவங்கும் நண்பனைக் கண்டதும் ஏற்படும் ஒரு விரக்தி/ சைக்கிள் ஓட்டத் தெரியாதா அப்போது பைக் பழகுவது கடினமாக இருக்கும் என பயிற்சியாளர் சொல்லத் தோன்றும் சங்கடம் அனுபவித்தால்தான் தெரியும் அந்த வகையில் பள்ளி நாட்களில் விளையாட்டுத்தனமாக வேறு ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது நிச்சயம் பின்னாளில் அதிகம் பயனுள்ளதாகவே இருக்கும்..அது சரி கற்றுக் கொள்வோம் அதற்கு ஏன் இந்தி..உலகத்திற்கான பொது மொழி ஆங்கிலம் என்பது போல் (வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும்) இந்தியாவுக்கான பொது மொழியாக இந்தி இருக்கவே சாத்தியம்.(வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும்) சிறுவயதில் ஒழுக்கத்தை கட்டாயப்படுத்தித்தான் கற்றுத் தரவேண்டும்.இங்கு இஷ்டப்பட்டால் என்கிற வாதம் சரிப்படாது.அப்படித்தான் வாழ்வுக்கு பயனுள்ளதையும்..தங்கள் தொழில் சார்ந்து பள்ளியில் ஹிந்தி அவசியம் என கட்டாயப்படுத்துகிற பகுத்தறிவுப் பாசாங்கிகள் வெளிஉலகில் அரசியல் ஆதாயத்திற்காக செய்கின்ற மாய்மாலங்களில் மயங்கிடாது பொறுப்பான தந்தையாக தாயாகச் சிந்தித்தால் இதிலுள்ள நியாயம் புரியும்.. .(நானும் இந்தி போராட்டத்தில் கலந்து கொண்டவன் தான், ஆனால் இன்றுஅது முட்டாள்தனமாக தோன்றுகிறது தவறுசெய்து விட்டோம்-சாலமன் பாப்பையா! )
Tuesday, June 4, 2019
Tuesday, May 28, 2019
வலைத்தளத்தின் எதிர்காலம்
பத்திரிக்கைகள் நியூஸைத் தராது நியூஸ் குறித்த அவர்களது வியூஸையே செய்தியாகத் தருவதால்.. தொலைக்காட்சிகள் அதன் முதலாளிகள் சார்ந்திருக்கிற கட்சியினைச் சார்ந்தே செய்திகள் தருவதால் ..... அவைகள் நமக்கானதில்லை என மக்கள் முடிவு செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை எனவே அப்போது நேரும் வெற்றிடத்தை வலைத் தளங்களும் முகநூலுமே நிரப்பவேண்டியிருக்கும் என்பதை மனதில் கொண்டு இப்போதிருந்தே பொறுப்பாக எழுதப் பழகுவோம்.அதற்கான ஆயத்தப் பணியாக பொறுப்பற்று தரமற்று எழுதுவோரையும் பின்னூட்டமிடுவோரை ஒதுக்கி வைக்கவும் பழகுவோம் ( மீடியாவை விட்டு விலகியே இருப்பதால் அஜித் அவர்களுக்கான மதிப்பு குறைந்து விட்டதா என்ன? )
Monday, May 27, 2019
கெட்டிக்கார வாக்காளன்
தன் வாயிலிருந்து வருகிற இரத்தம் என அறியாது தான் கடிக்கிற எலும்பிலிருந்து வருகிற இரத்தமெனக்கருதி இன்னும் அழுத்தமாய் எலும்பை இரசித்துக் கொண்டிருந்தது அந்தத் தெருநாய் அதன் முட்டாள்த்தனத்தைக் கண்டு தலையிலடித்துக் கொண்டு நகர்கிறான் அதிகப் பணம் கொடுத்தவருக்கு வாக்களிக்கும் வேகத்தில் ஓட்டுச் சாவடிக்கு ஓடும் கெட்டிக்கார வாக்காளன்
ஓட்டிங் மெஷின் ஹேக்கிங்
ஓட்டிங் மெஷினை ஹேக் பண்ணித்தான் அவுக ஜெயித்ததாகச் சொல்றாங்களே அப்படியானா தமிழ்நாட்டில மட்டும் ரிசல்ட் ஏன் இப்படி ஆகிப் போச்சு.. அது ஒன்னுமில்லை வடக்கே எல்லாம் தப்பை சரியாச் செய்துட்டாங்க. தமிழ்நாட்டுல மட்டும் தப்பைத் தப்பாவே செய்துட்டாங்க அம்புட்டுத்தான் அய்யோ புரியும்படியாகத்தான் சொல்லேன் விசயம் சிம்பிள் ஹேக்கருக்கு சரியா இங்கிலிஸ் தெரியாது.அமித்ஷா அவர்கிட்டே " மை டியர் சன் தமிழ்நாடு ரிசல்ட் இஸ் இன் யுவர் ஹேண்ட் டோண்ட் ஃபார்கெட் மைடியர் சன்னுன்னு திரும்பத் திரும்ப சொல்லி இருக்காரு..இதை மொழி பெயர்த்தவர் தங்கபாலு மாதிரிஒருத்தர் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கையையும் சூரியனையும் மறந்திடாதன்னு டிரான்ஸ்லேட் பன்னிட்டாரு அதனால வந்த வினைதான் இது அய்யோ அப்பா இதில இவ்வளவு விசயம் இருக்கா.அப்புறம் என்ன ஆச்சு அப்புறம் என்ன இதை வெளியே சொல்லிப்புடாதன்னு ஹேக்கருக்கு இவங்களும் சில கோடி கொடுத்து விசயத்தை அமுக்கிப்புட்டாங்க. யாருக்கும் தெரியாத இவ்வளவு பெரிய விசயம் உனக்கு மட்டும் எப்படித் தெரிஞ்சது அதெல்லாம் பெரிய விசயமே இல்ல நீயும் மோடி அவர்களுக்கு எதிரா எழுதறவங்க ஃபேஸ்புக்கைப் பத்து நாள் படி. உனக்கும் இந்த மாதிரி பல விசயங்கள் தானா தோணும்.சரி வரட்டா
Sunday, May 26, 2019
பெரியார் மண்
லெப்ட்ல இண்டிகேட்டரைப் போட்டு ரைட்ல கையைக்காட்டி ஸ்ரைட்டா போய்க்கிட்டே இருப்போம்.ஆமா தமிழ்நாட்டு ஆட்டோக்காரன்னா சும்மாவா... / அதேமாதிரி தொகுதியில எந்த ஜாதிக்காரன் எந்த மதத்துக்காரன் ஜாஸ்தி இருக்கானோ அவனை வேட்பாளராப் போட்டு பணமும் கொடுத்து ஜெயிச்சு இது பெரியார் மண்ணு இங்கெல்லாம் ஜாதி மதத்துக்கு இடமே இல்லை ன்னு கத்திக்கிட்டே திரிவோம் ஆமா ..தமிழ்நாட்டு அரசியல்வாதின்னா சும்மாவா..
Friday, February 15, 2019
இங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்
முன்பெல்லாம்
எங்களைத் தூரம் பிரித்திருந்தது
எங்களுக்கும் அதனால்
சந்திப்பின் அருமை புரிந்திருந்தது
முன்பெல்லாம்
தொடர்புச் சாதனங்கள்
எமக்கு எட்டாத உயரத்திலிருந்தன
நாங்களும் அதனால்
சாதனங்களின் அருமை அறிந்திருந்தோம்
முன்பெல்லாம்
எல்லோரும் சமதளத்தில்
இருப்பதாக உணர்ந்திருந்தோம்
நாங்களும் அதனால்
பரஸ்பர புரிதலில் இருந்தோம்
முன்பெல்லாம்
வசதிக்கான சாதனங்கள்
எங்கள் இடத்தை அடைக்கவில்லை
நாங்களெல்லாம் அதனால்
மிக நெருக்கமாகவே இருந்தோம்
எதனை நினைக்கையிலும்
முன்பெல்லாம் என்கிற நினைவு..
இழந்ததையெல்லாம் மனதில்
சுமை ஏற்றிப் போக
இப்போதெல்லாம் நாங்கள்
அன்றைய சுகந்த நினைவுகளைச் சுகித்தபடி
இன்றைய இருப்புக் கணக்கில் மட்டும்
விடுபடாது இருப்பதுபோலவே இருக்கிறோம்
எங்களைத் தூரம் பிரித்திருந்தது
எங்களுக்கும் அதனால்
சந்திப்பின் அருமை புரிந்திருந்தது
முன்பெல்லாம்
தொடர்புச் சாதனங்கள்
எமக்கு எட்டாத உயரத்திலிருந்தன
நாங்களும் அதனால்
சாதனங்களின் அருமை அறிந்திருந்தோம்
முன்பெல்லாம்
எல்லோரும் சமதளத்தில்
இருப்பதாக உணர்ந்திருந்தோம்
நாங்களும் அதனால்
பரஸ்பர புரிதலில் இருந்தோம்
முன்பெல்லாம்
வசதிக்கான சாதனங்கள்
எங்கள் இடத்தை அடைக்கவில்லை
நாங்களெல்லாம் அதனால்
மிக நெருக்கமாகவே இருந்தோம்
எதனை நினைக்கையிலும்
முன்பெல்லாம் என்கிற நினைவு..
இழந்ததையெல்லாம் மனதில்
சுமை ஏற்றிப் போக
இப்போதெல்லாம் நாங்கள்
அன்றைய சுகந்த நினைவுகளைச் சுகித்தபடி
இன்றைய இருப்புக் கணக்கில் மட்டும்
விடுபடாது இருப்பதுபோலவே இருக்கிறோம்
Friday, February 1, 2019
😭😭😭😭😭😭😭😭 அதிர்ச்சி தரும் செய்தி
*பிரபல வலைப் பதிவரும், என் அருமை நண்பருமான, திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ அவர்கள் இன்று 02.02.2019 சனிக்கிழமை காலை 9.15 மணி சுமாருக்கு, மூச்சுத் திணறல் அதிகமாகி காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.*
*அன்னாரின் இறுதி யாத்திரை நாளை 03.02.2019 ஞாயிறு காலை 10 மணி சுமாருக்கு No. 27, துளசி இல்லம், 3rd Cross, நாகப்பா நகர், Near KK Near Bus Stand ...., திருச்சியிலிருந்து புறப்பட உள்ளது.*
*தொடர்புக்கு:*
*அரவிந்தன் (ஒரே மகன்)*
*9486114574*
😭😭😭😭😭😭😭😭
*பிரபல வலைப் பதிவரும், என் அருமை நண்பருமான, திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ அவர்கள் இன்று 02.02.2019 சனிக்கிழமை காலை 9.15 மணி சுமாருக்கு, மூச்சுத் திணறல் அதிகமாகி காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.*
*அன்னாரின் இறுதி யாத்திரை நாளை 03.02.2019 ஞாயிறு காலை 10 மணி சுமாருக்கு No. 27, துளசி இல்லம், 3rd Cross, நாகப்பா நகர், Near KK Near Bus Stand ...., திருச்சியிலிருந்து புறப்பட உள்ளது.*
*தொடர்புக்கு:*
*அரவிந்தன் (ஒரே மகன்)*
*9486114574*
😭😭😭😭😭😭😭😭
Wednesday, January 30, 2019
வரப்புயர .....
"இதனை
இதனால்
இவன்
என்பதை மட்டுமல்ல...
அதனை
அவன்கண்
என்பதையும் கூட
எதனுடனும்
எவருடனும்
இணைத்துப் பொருள் கொள்ளமுடியும்
அப்படி
இன்றைய சீரழிவுக்குக் காரணம்..
எது
எதனால்
யாரால்
ஏன் என்பதனை
பொதுமைப்படுத்திச் சொல்லமுடியுமா ?"
என்றான் நண்பன்
அது பெரிய விஷயமில்லை
தீமையை எது தருமோ
அது எட்டும்படியும்
பயனற்றதை
முயன்றால் அடையும்படியும்
நன்மையை எது தருமோ
அதை அடைய முடியாதபடியும்...
உள்ளதை அறியாது...
தேவையற்றதை
தெளிவாய்த் தெரிந்து கொண்டும்
பயனற்றதை
அரைகுறையாய் அறிந்தபடியும்
அவசியமானதை
முற்றாக அறியாதபடியும்
இருப்பதால் தான் "என்றேன்
நண்பன் ஒவ்வொன்றாய்
பட்டியலிட்டப்பின் சொல்கிறான்
"ஆம் வரப்புயர "என்பதைத் தொடர
அது எங்கெங்கோ சுற்றி
கோன் என முடிவதைப் போல்
இதுவும் மூலம் தொடுகிறது
மிகச் சரியாய்" என்கிறான் திருப்தியுடன்.
இதனால்
இவன்
என்பதை மட்டுமல்ல...
அதனை
அவன்கண்
என்பதையும் கூட
எதனுடனும்
எவருடனும்
இணைத்துப் பொருள் கொள்ளமுடியும்
அப்படி
இன்றைய சீரழிவுக்குக் காரணம்..
எது
எதனால்
யாரால்
ஏன் என்பதனை
பொதுமைப்படுத்திச் சொல்லமுடியுமா ?"
என்றான் நண்பன்
அது பெரிய விஷயமில்லை
தீமையை எது தருமோ
அது எட்டும்படியும்
பயனற்றதை
முயன்றால் அடையும்படியும்
நன்மையை எது தருமோ
அதை அடைய முடியாதபடியும்...
உள்ளதை அறியாது...
தேவையற்றதை
தெளிவாய்த் தெரிந்து கொண்டும்
பயனற்றதை
அரைகுறையாய் அறிந்தபடியும்
அவசியமானதை
முற்றாக அறியாதபடியும்
இருப்பதால் தான் "என்றேன்
நண்பன் ஒவ்வொன்றாய்
பட்டியலிட்டப்பின் சொல்கிறான்
"ஆம் வரப்புயர "என்பதைத் தொடர
அது எங்கெங்கோ சுற்றி
கோன் என முடிவதைப் போல்
இதுவும் மூலம் தொடுகிறது
மிகச் சரியாய்" என்கிறான் திருப்தியுடன்.
Tuesday, January 22, 2019
நமதருமைப் பதிவர்கள் போலவே....
சமபந்திதான் ஆயினும்
ருசியான சத்தான சாத்வீகமான
உணவுதான் ஆயினும்..
சரிசமமாகப் பறி,மாறப்பட்டதே ஆயினும்
அள்ளியபடி பல கைகளும்
துழாவியபடி சில கைகளும்
இருக்கக் காரணம்
நிச்சயம் கைகளில்லை
மாறாக
பசித்த வயிறும்
ஏற்கெனவே
அஜீரணத்தில் அவதியுறும் வயிறும் என்பது
பறிமாறுபவனுக்குப் புரியும்..
எனவே
பறிமாறுபவன் தொடர்ந்து
பறிமாறுவதில் மட்டுமே
கவனம் கொள்கிறான்
நியாயமானதுதான் ஆயினும்
நடுநிலையில் பயன்கருதி எளிமையாகச்
சொல்லப்பட்டதுதான் ஆயினும்
இரசித்துச் பலரும்
கண்டும் காணாதபடிச் சிலரும்
இருக்கக் காரணம்
நிச்சயம் படைப்பில்லை
மாறாக
பரிசீலித்தேற்கும் மனநிலையும்
ஏற்கெனவே
கொள்கைகளால் நிரம்பிய மனமும் என்பது
படைப்பாளிக்கும் தெரியும்
எனவே
படைப்பாளி தொடர்ந்து
படைப்பதில் மட்டுமே
கவனம் கொள்கிறான்
பதிவுலகில் தொடர்ந்து எழுதும்
நமதருமைப் பதிவர்கள் போலவே....
Monday, January 21, 2019
இன்றைய அரசியல்..அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது ?
அந்தக் காலங்களில் நாம் இருவருமே
மனிதர்களாய் இருந்தோம்
எம் உயர்வு குறித்து
எப்போதும் சிந்தித்தபடி நீங்களும்
உங்கள் நல்வாழ்வு உயர்வு குறித்து
எப்போதும் வேண்டியபடி நாங்களும்
எங்களைச் சந்திப்பதில் உங்களுக்கிருந்த
மகிழ்வும் இன்பமும்
உண்மையாய் இருந்தது
உங்களைத் தரிசிப்பதில் எங்களுக்கிருந்த
ஆர்வமும் எழுச்சியும்
அளவு கடந்திருந்தது
அதனால்தான் இரவெல்லாம் நாங்கள்
தூங்காது விழித்துக் காத்திருந்தோம்
அதனால்தான் பகலிரவாய் நீங்களும்
சோராது சந்தித்து மகிழ்ந்தீர்கள்
இப்போது நாம் இருவருமே
மோசமான வியாபாரிகளாகி விட்டோம்
உம் நிலைப்புக் குறித்து
எப்போதும் சிந்தித்தபடி நீங்களும்
எங்கள் அற்பத் தேவைகள் குறித்து
எப்போதும் நினைத்தபடி நாங்களும்
எங்களைச் சந்திப்பது
உங்களுக்கு இப்போது
அலுப்பாகவும் சலிப்பாகவும்
உங்களைச் சந்திப்பது
எங்களுக்கு இப்போது
வெறுப்பாகவும் கோபமாகவும்
அதனால்தான்
இப்போதெல்லாம் நீங்கள்
அழைத்துச் செல்லவேண்டி
எம் வீட்டிலேயே காத்திருக்கிறோம்
மாறிய
சூழலறிந்து நீங்களும்
பணத்துடன் பொட்டலத்துடன்
எம் வீட்டு வாசல் வருகிறீர்கள்
இருவரில் யார் மிக மோசம்
என்னும் போட்டி
நம்முள் தொடர்ந்து கொண்டிருக்கிறது...
மிகச் சரியாகச் சொன்னால்...
விபச்சாரி வீடு போய்
பழக்கப்பட்டவன்
பழக்க தோஷம் போகாது
முதலிரவில் மனைவியிடம்
நூறு ரூபாய்க் கொடுக்க
அவளும் பழக்க தோஷம் போகாது
ஐம்பது ரூபாயைத்
திருப்பிக் கொடுத்த கதையாக...
இன்றைய நம் அரசியல்
அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது...?
இப்படித்தான் சொல்லணும்
இன்னும் மிகச் சரியாய் என்றால்
இன்னும்
அசிங்கமாகத்தான்தான் சொல்லணும்..
மனிதர்களாய் இருந்தோம்
எம் உயர்வு குறித்து
எப்போதும் சிந்தித்தபடி நீங்களும்
உங்கள் நல்வாழ்வு உயர்வு குறித்து
எப்போதும் வேண்டியபடி நாங்களும்
எங்களைச் சந்திப்பதில் உங்களுக்கிருந்த
மகிழ்வும் இன்பமும்
உண்மையாய் இருந்தது
உங்களைத் தரிசிப்பதில் எங்களுக்கிருந்த
ஆர்வமும் எழுச்சியும்
அளவு கடந்திருந்தது
அதனால்தான் இரவெல்லாம் நாங்கள்
தூங்காது விழித்துக் காத்திருந்தோம்
அதனால்தான் பகலிரவாய் நீங்களும்
சோராது சந்தித்து மகிழ்ந்தீர்கள்
இப்போது நாம் இருவருமே
மோசமான வியாபாரிகளாகி விட்டோம்
உம் நிலைப்புக் குறித்து
எப்போதும் சிந்தித்தபடி நீங்களும்
எங்கள் அற்பத் தேவைகள் குறித்து
எப்போதும் நினைத்தபடி நாங்களும்
எங்களைச் சந்திப்பது
உங்களுக்கு இப்போது
அலுப்பாகவும் சலிப்பாகவும்
உங்களைச் சந்திப்பது
எங்களுக்கு இப்போது
வெறுப்பாகவும் கோபமாகவும்
அதனால்தான்
இப்போதெல்லாம் நீங்கள்
அழைத்துச் செல்லவேண்டி
எம் வீட்டிலேயே காத்திருக்கிறோம்
மாறிய
சூழலறிந்து நீங்களும்
பணத்துடன் பொட்டலத்துடன்
எம் வீட்டு வாசல் வருகிறீர்கள்
இருவரில் யார் மிக மோசம்
என்னும் போட்டி
நம்முள் தொடர்ந்து கொண்டிருக்கிறது...
மிகச் சரியாகச் சொன்னால்...
விபச்சாரி வீடு போய்
பழக்கப்பட்டவன்
பழக்க தோஷம் போகாது
முதலிரவில் மனைவியிடம்
நூறு ரூபாய்க் கொடுக்க
அவளும் பழக்க தோஷம் போகாது
ஐம்பது ரூபாயைத்
திருப்பிக் கொடுத்த கதையாக...
இன்றைய நம் அரசியல்
அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது...?
இப்படித்தான் சொல்லணும்
இன்னும் மிகச் சரியாய் என்றால்
இன்னும்
அசிங்கமாகத்தான்தான் சொல்லணும்..
Subscribe to:
Posts (Atom)