Monday, May 17, 2021

சாபத்துள் மறைந்திருக்கும் வரம்..

 இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற

நாமெல்லாரும் இதுவரை சந்தித்திராத

ஒரு மோசமான சூழலைக் 

கடந்து கொண்டிருக்கிறோம்


அதே சமயம் நம்முள் இருக்கும்

மனித நேயத்தை நம் செய்கையால்

வெளிப்படுத்த வேண்டிய அவசியமான

சூழலிலும் இருக்கிறோம்...


சாபத்தின் இடையில் ஆண்டவன்

நமக்களித்திருக்கிற வாய்ப்பாகவும்

வரமாகவும் கூட இந்தச் சூழலை

நாம் புரிந்து கொள்வோம் ஆயின்

மிகச் சிறப்பு...


நல்ல நண்பனாக உறவினராக

சமூக நேயமிக்க மனிதராக இந்தச்

சூழலில் நாம் செய்கிற ஒருசிறு உதவி கூட

அதைப் பெறுகிறவர்களுக்கு

நிச்சயம் பேருதவியாகவே இருக்கும்


உதவி என்பது பணத்தால்

பொருளால்தான் இருக்கவேண்டும் என்கிற

அவசியமில்லை


உடலளவில் சிறு உழைப்பாக இருக்கலாம்

சிறு ஆறுதல் வார்த்தைகளாக இருக்கலாம்

ஏன் அலைபேசியின் மூலம் நலம்

விசாரித்தலாகக் கூட இருக்கலாம்.....


வீட்டில் இருந்தபடி அனைவருடன்

முன்பை விட அதிகத் 

தொடர்பில் இருப்போம்


பாதிப்பை அமைதியுடன் ஏற்று

அதனுடன் வாழப் பழகும்

மிருகங்களல்ல நாம். என்பதை..


எதையும் வென்று சாதித்து

தலை நிமிரும்  இனம்மனித இனம்

என்பதை நீரூபனம் செய்ய

இது ஒரு நல்ல வாய்ப்பு.....


ஆம் சாபத்திடையில் இருக்கும்

வரத்தினைப் புரிந்து செயலபட

இது ஒரு நல்ல வாய்ப்பு....


புரிந்து செயல்படுவோம் வாரீர்

இணைந்து செயல்படுவோம் வாரீர்

நீங்கள் அரசுப்பணியாளரா ?

 நீங்கள் அரசுப்பணியாளரா ?

ஆம் எனில் நீங்கள்

யோகவான் மட்டுமல்ல

பாக்கியவானும் கூட....


யோகவான் என்பதை

உங்கள் அதிகாரத்தின் மூலம்

உங்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் மூலம்

நீங்களே அறிந்திருப்பீர்கள்

அதற்கு விளக்கம் வேண்டியதில்லை


பாக்கியவான்கள் என்பதற்குத்தான்

விளக்கம்வேண்டி இருக்கிறது...


இந்துவுக்கு காசி

இஸ்லாமியனுக்கு மெக்கா

கிறித்தவனுக்கு ஜெருசலேம்

முக்கிய ஸதலங்கள்...


வாழ்வில் ஒருமுறையேனும்

சென்றாகவேண்டும் எனும்

புண்ணிய ஸ்தலங்கள்

அதற்காக அவர்கள்படும் பாடும் ஏராளம்                                                                                                                                                                                                                                                  ஆயினும்                                                                                                                                        அந்த ஸ்தலங்களிலேயே  வாழும்         

பாக்கியம் பெற்றவர்கள்

அவ்விடத்தின் மகிமை உணர்திருப்பர்களாயின்

அவர்களே கொடுத்துவைத்தவர்கள்

அவர்களே பயணச் சிரமமில்லா பாக்கியவான்கள்

...

அங்ஙனமே..


மறுமைச் சுகங்களுக்காக

விரதம் இருந்து

கோவில் கோவிலாய் ஏறி இறங்கி

ஆயிரம் ஆயிரமாய் தானதருமங்கள் செய்து

சேர்க்கின்ற புண்ணியத்தை...


உதவி நாடிவரும்  

கல்வி அறிவற்ற பாமரர்க்கும்

வசதி வாய்ப்பற்ற

ஏழை எளியவருக்கும்

செய்யும் சேவையே

வேலையென வாய்த்த உங்களுக்கு


அன்றாடம் செய்யும் கடமைகளே

சேவைகளாக அமைவது

எத்தனைப் பெரிய பாக்கியம்...


ஆம் இதை உணர்ந்தால்......


கடமையை கடனெனச் செய்யாது 

கருத்தூன்றிச் செய்தால்.....


நீங்கள்தான் ஆண்டவன் கணக்கில் 

நேரடி வரவாகும் பாக்கியவான்கள்...


ஆம் அரசுப் பணியாளரான நீங்கள் 

யோகவான மட்டும் அல்ல

நிச்சயம் பாக்கியவானும் கூட..

Sunday, May 16, 2021

இரு புதிருக்கு ஒரே விடைபோல

 கனத்த

வெறுமை நிறைந்த அமைதியை

மயான அமைதி என்போம்


பரபரப்பும்

நெருக்கடியும் நிறைந்த இடத்தை

பிரதான சாலை என்போம்


இப்போது இரண்டும் இடம் மாறி


மயானம்

பரபரப்பான சாலையாய்


சாலைகள்

வெறுமை சூழ்ந்த மயானமாய்..


தண்ணீரில் விளையாடிய மீனை

தரையில் போட்ட கதையாய்..

தரையில் உறவாடிய மானை

தண்ணீரில் போட்ட கதையாய்...


தடுமாறுகிறோம்

தத்தளிக்கிறோம்

புரியாத புதிருக்கு விடைதேடி...

புலராத இரவுக்குள் ஒளிதேடி....


ஆயினும் இப்போதும்

எதுவும் கையை மீறவில்லை

கரையைத் தாண்டவில்லை


பரவக் காரணமான நாமே

இப்போது முயன்றால் கூட

அதன் அழிவுக்கும் காரணமாகிவிடக் கூடும்..


ஆம்..இரண்டு புதிருக்கு

விடை ஒன்றே என்பதுபோல்

இருவூருக்கும் வழி ஒன்றே போல்


கொடிய இந்த இரு சூழல்

கூண்டோடி அழிய ஒழிய

அதற்கான வழியும் ஒன்றே


ஆம் இந்தக் கொடிய

கொரோனா சங்கிலிப் பின்னலை

தகர்த்தெரிந்தாலே போதும்


ஆம் சமூக விலகலை

ஒரு நொடியும் விடாது

கடைபிடித்தாலே போதும்....


இனியேனும்

இதைச் செய்யப் பயில்வோம்

நம் சமூகம்

விரைவில் உய்ய முயல்வோம்

Saturday, May 15, 2021

கொரோனா..ஓஷோவின் பார்வையில்..

 ஓஷோ கொரோனா போன்ற உலகிற்கு அற்புதமான அறிவைக் கொடுத்தார்


 70 களில், காலராவும் ஒரு தொற்றுநோயாக உலகம் முழுவதும் பரவியது, பின்னர் அமெரிக்காவில் ஒருவர் ஓஷோ ரஜ்னீஷ் ஜியை கேள்வி எழுப்பினார்.

 -இந்த தொற்றுநோயிலிருந்து தப்பிப்பது எப்படி?


 ஓஷோ விரிவாக விளக்கியது இன்று கொரோனாவுக்கும் மிகவும் பொருத்தமானது.


 * ஓஷோ *


 இந்த கேள்வியை நீங்கள் தவறாக கேட்கிறீர்கள்,


 தொற்றுநோயால் இறக்கும் என் பயத்தைப் பற்றி நான் ஏதாவது சொல்ல வேண்டுமா என்பது கேள்வி.


 இந்த பயத்தைத் தவிர்ப்பது எப்படி ...?


 வைரஸ்களைத் தவிர்ப்பது மிகவும் எளிதானது என்பதால்,


 ஆனால் உங்களுக்கும் உலகின் பெரும்பாலான மக்களுக்கும் இடையில் அமர்ந்திருக்கும் பயத்தைத் தவிர்ப்பது மிகவும் கடினம்.


 இப்போது இந்த தொற்றுநோயால் குறைவான மக்கள், மக்கள் பயத்தால் அதிகமாக இறந்துவிடுவார்கள்….


 'பயத்தை' விட ஆபத்தான வைரஸ் இந்த உலகில் இல்லை.


 இந்த பயத்தை புரிந்து கொள்ளுங்கள்,

 இல்லையெனில் நீங்கள் மரணத்திற்கு முன்பே உயிருள்ள சடலமாக மாறுவீர்கள்.


 நீங்கள் இப்போது பார்க்கும் கொடூரமான சூழ்நிலை, இதற்கு வைரஸ்கள் போன்றவற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை.


 இது ஒரு கூட்டு பைத்தியம், இது ஒரு சரிவுக்குப் பிறகு எப்போதும் குறைந்து கொண்டே இருக்கிறது, காரணங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன, சில நேரங்களில் அரசாங்கங்களின் போட்டி, சில நேரங்களில் கச்சா எண்ணெயின் விலைகள், சில சமயங்களில் இரு நாடுகளின் சண்டை, சில சமயங்களில் உயிரியல் ஆயுதங்களை சோதனை செய்தல் !!


 இந்த வகை வெகுஜன பைத்தியம் அவ்வப்போது வெளிப்படுகிறது.  தனிப்பட்ட பைத்தியக்காரத்தனத்தைப் போலவே, பொதுவான, மாநில, உள்நாட்டு மற்றும் உலகளாவிய பைத்தியம் உள்ளது.


 இதில், பலர் என்றென்றும் குழப்பமடைகிறார்கள் அல்லது இறந்துவிடுவார்கள் *.


 இது இதற்கு முன்னர் ஆயிரக்கணக்கான தடவைகள் நடந்தது, தொடர்ந்து நடக்கும், மேலும் வரும் ஆண்டுகளில், போர் பீரங்கிகளால் அல்ல, உயிரியல் ஆயுதங்களுடன் சண்டையிடப்படும் என்பதை நீங்கள் காண்பீர்கள்.


 ஒவ்வொரு பிரச்சனையும் முட்டாளுக்கு பயம் என்று நான் மீண்டும் சொல்கிறேன், அதே நேரத்தில் அறிவுள்ளவர்களுக்கு வாய்ப்பு !!


 இந்த தொற்றுநோய்களில், நீங்கள் வீட்டில் உட்கார்ந்து, புத்தகங்களைப் படிக்கிறீர்கள், உடலையும் உடற்பயிற்சியையும் தொந்தரவு செய்கிறீர்கள், திரைப்படங்களைப் பார்க்கிறீர்கள், யோகா செய்கிறீர்கள், ஒரு மாதத்தில் 15 கிலோ எடையைக் குறைக்கிறீர்கள், குழந்தைகளைப் போல உங்கள் முகத்தில் புத்துணர்ச்சியைக் கொண்டு வருகிறீர்கள்.

 உங்கள் பொழுதுபோக்குகளை நிறைவேற்றுங்கள்


 என்னை 15 நாட்கள் வீட்டில் உட்காரச் சொன்னால், இந்த 15 நாட்களில் 30 புத்தகங்களைப் படிப்பேன், இல்லையென்றால் ஒரு புத்தகம் எழுதுவேன், இந்த மாபெரும் திருவிழாவில் பணத்தை முதலீடு செய்வேன், இது இருபது முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒரு வாய்ப்பு.  ... ஏன் நோயைப் பற்றி பேச நேரத்தை வீணடிக்கிறீர்கள் ...


 'பயம் மற்றும் நெரிசல்' உளவியல் அனைவருக்கும் புரியவில்லை.


 'பயத்தில்' சாறு எடுப்பதை நிறுத்துங்கள் ...


 வழக்கமாக ஒவ்வொரு மனிதனும் பயத்தில் கொஞ்சம் சாறு எடுத்துக்கொள்கிறான், மக்கள் பயப்படுவதை ரசிக்கவில்லை என்றால் மக்கள் ஏன் பேய் படம் பார்க்கச் செல்கிறார்கள்?


 ☘ இது ஒரு வெகுஜன பைத்தியம், செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி மூலம் கூட்டத்திற்கு விற்கப்படுகிறது ...


 ஆனால் வெகுஜன பைத்தியத்தின் தருணத்தில், நீங்கள் உங்கள் உரிமையை இழக்கலாம் ... நீங்கள் தொற்றுநோய்க்கு பயப்படுகிறீர்கள் என்றால், நீங்களும் கூட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள்.


 டிவியில் செய்தி கேட்பது அல்லது செய்தித்தாள் படிப்பதை நிறுத்துங்கள்


 உங்களில் பயத்தை உருவாக்கும் எந்த வீடியோ அல்லது செய்தியையும் பார்க்க வேண்டாம் ...


 தொற்றுநோய் பற்றி பேசுவதை நிறுத்துங்கள்,


 பயம் என்பது சுய-ஹிப்னாஸிஸின் ஒரு வடிவம்.


 அதே வகையான சிந்தனை மீண்டும் மீண்டும் உடலுக்குள் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகிறது, மேலும் இந்த வேதியியல் மாற்றம் சில நேரங்களில் மிகவும் நச்சுத்தன்மையுடையதாக இருக்கலாம், அது உங்கள் உயிரைக் கூட எடுக்கும்;


 தொற்றுநோயைத் தவிர, உலகில் நிறைய நடக்கிறது, அவற்றில் கவனம் செலுத்துங்கள்;


 தியானம் தேடுபவரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு பிரகாசத்தை உருவாக்குகிறது, இது வெளியில் இருந்து எதிர்மறை சக்தியை அதற்குள் அனுமதிக்காது,

 இப்போது முழு உலகின் ஆற்றலும் எதிர்மறையாக உள்ளது.


 அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த கருந்துளைக்குள் விழலாம் .... தியானப் படகில் உட்கார்ந்து இந்த குழப்பத்தைத் தவிர்க்கலாம்.


 வேதங்களைப் படியுங்கள்,

 முனிவர்-இணக்கமான, மற்றும் நடைமுறை, அறிஞர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்


 உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள், சுத்தமான தண்ணீரை குடிக்கவும்,


 கடைசி விஷயம்:

 பொறுமையாக இருங்கள் ... எல்லாம் விரைவில் மாறும் .......


 மரணம் வரும் வரை, அதைப் பயப்படத் தேவையில்லை, தவிர்க்க முடியாததை அஞ்சும் உணர்வும் இல்லை,


 பயம் என்பது ஒரு வகையான முட்டாள்தனம், நாங்கள் ஒரு தொற்றுநோயால் இறக்காவிட்டாலும், நீங்கள் ஒரு நாள் இறக்க நேரிடும், அது எந்த நாளிலும் நிகழலாம், எனவே ஒரு அறிஞரைப் போல வாழ்க, கூட்டத்தைப் போல அல்ல !!


 #ஓஷோ                (நேரமின்மையாலோ வேறு காரணங்களாலோ முன்பு போல் பதிவு அதிகம் எழுத முடியாது இருந்தவர்கள் ஓஷோ சொல்வது போல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாமே) 

Friday, May 14, 2021

மாடர்ன் எமன்...

 நம் உயிரெடுக்கும் எமன்

முன்போல பத்தாம்பஸலி இல்லை

அவன் மார்டன் ஆகி மாறி

இரண்டாண்டுகளுக்கு மேலாகிவிட்டது


எனக்கென்ன என நகரும் எருமையும்

எட்டி வீசமுடியாத பாசக்கயிறும்

தன் தொழிலுக்கு ஆகவில்லை என....


பிடித்துச் செல்லும்படியாக இருந்த

தன் உடமைகளை தூரக்கடாசிவிட்டு


அள்ளிச் செல்லும்படியான

கண்ணுக்குத் தெரியா 

கனரக வாகனத்திலும்


கொத்துக் கொத்தாய் 

அன்றாடம் அள்ள உதவும்

கொரோனா கிருமியுடன் தான்

அனுதினமும் அவன் வலம் வருகிறான்...


அவன் மாடனாக மாறியதை அறியாது

பத்தாம் பசலியாய்

வீடுவிட்டு வீதியில் திரிந்து

நாம்தான் 

அன்றாடம் பலியாகிக் கொண்டிருக்கிறோம்


மார்க்கண்டேயன்

சிவலிங்கத்தை அணைந்துத் தன்னைக்

காத்துக் கொண்டது போல்


தனிமைப்படுத்துதலை

இடைவெளி கடைப்பிடித்தலை

சுத்தம் பேணுதலை

அரவணைத்துக் கொண்டால் ஒழிய

நாம் தப்பிக்க வழியில்லை...


புரிந்து கொண்டால்

நாம் புத்திசாலிதனமாய் 

பிழைத்துக் கொள்ளலாம்


எமனை மீண்டும்

பத்தாம்பஸலியாக்கி

எருமையில் அலையவிடலாம்


இல்லையெனைல்...

இப்போது போல்

மர நுனியில் அமர்ந்து

முன் வெட்டும் முட்டாள் போல்


விரைவாக மருத்துவமனைகளில்

படுக்கைகளைக் கூட்டுவதில்

ஆக்ஸிஜன் ஆலைகள்

தகனமேடைகள் அதிகம் அமைப்பதில்

நாம் தான் விற்பன்னர்கள் என

மார்தட்டியபடி...


நம் உறவுகளையும்

நம் நண்பர்களையும்

முடிவாக நம்மையும்

இந்த மாடர்ன் எமனுக்கு

காவு கொடுக்கவேண்டியதுதான்..


எது வசதி........(அ ) எது சரி

Thursday, May 13, 2021

மனப்பரண்...

 இரண்டு நாட்களாக

என்னை நிம்மதியாய் இருக்கவிடாது

உறுத்திக் கொண்டே இருக்கிறது "அது"


"அது" கவிதைக்குச் சரியாய் வருமா ?

இல்லை கதையாகத்தான் சரியாய் வருமா ?

அதிகம் யோசிக்க வைக்கிறது "அது "


எப்படி யோசித்தபோதும்

"அது " இரண்டுக்கும் சரியாக வரும் போலவும்

இரண்டுக்கும் சரியாக வராது போலவும் தோன்ற


மெல்ல அதை எடுத்து

வழக்கம்போல்

மனப்பரணில் கிடத்தி வெளியேறுகிறேன்.....


ஏற்கெனவே கிடத்தப் பட்டவைகளின்

ஏக்கப் பார்வைகளைத் 

வலுக்கட்டாயமாய்த் தவிர்த்தபடி...


Wednesday, May 12, 2021

அனுமார் வால்..

சொல்ல வேண்டியவைகளையெல்லாம்

நிறையச் சொல்லிவிட்டார்கள்

எழுத வேண்டியவைகளையெல்லாம்

தெளிவாக எழுதிவிட்டார்கள்

நீயேன் உன்னையும் கஷ்டப்படுத்திக்கொண்டு

அடுத்தவர்களையும் கஷ்டப்படுத்துகிறாய்  "


மனதின் மூலையில் புகையாய்

மெல்லக் கிளம்பிய சலிப்புப் புகை

மனமெங்கும் விரிந்து பரவி

என்னை திணறச் செய்து போகிறது

நான் மிகச் சோர்ந்துச் சாய்கிறேன்


என் மனைவியிடம்  நெருங்கியமர்ந்த பேத்தி

" ஏன் பாட்டி உங்கள் காலத்தில்

நிஜமாகவே பீட்ஸா கிடையாதா

 சுடிதார் கிடையாதா ?

அட்டாச்சுடு பாத் ரூம் கிடையாதா ?"

என ஆச்சரியமாய்க் கேட்கிறாள்


" இல்லை அவையெல்லாம்  அப்போது

தேவையாய் இருக்கவில்லை " எனச் சொல்லி

பாட்டி எப்படியோ சமாளிக்கிறாள்

நான் அதிர்ந்து போகிறேன்


ஒரு கால் நூற்றாண்டில் தேவைகள்

 வாழ்வினையொட்டி

எப்படியெல்லாம மாறிவிட்டன

வாழ்வின் போக்கில்

உணவு உடை இருப்பிடம் மட்டுமின்றி

கலை பண்பாடு கலாச்சாரம

அனைத்திலும்தான்  பதிவு செய்யப்படாத

எத்தனை மாறுதல்கள் ?


தேவைகளை விளம்பரங்கள் முடிவு செய்ய

தேவைகளுக்கான இடத்தைக் கூட

பொழுது போக்கும் ஆடம்பரமும்  ஒதுக்கிக் கொடுக்க

உறவுகளைக் கூட அவர்களின் பயன் முடிவு செய்ய

உணவினை கிடைக்கும் நேரம் முடிவு செய்ய

உடலுறவைக் கூட கிழமை முடிவு செய்ய...


தொடர்ந்து சிந்திக்க சிந்திக்க

மனதின் மூலையில்

நெருப்புப் பற்றி எரியத் துவங்க

இப்போது புகை மூட்டமில்லா வெளிச்சத்தில்

 இந்த அவசரக் காலத்தைப் பதிவு செய்ய வேண்டிய

 இதுவரை பதிவு செய்யப்படாத

 புதிய பட்டியல்

அனுமார் வாலாய் நீண்டு தெரிகிறது

என்னுள்ளும் இதுவரை இல்லாத

அதீத உற்சாகம்

காவிரி நீராய் பரந்து விரிகிறது