"கம்யூனிஸ்டுகளுக்கு
ஜன நாயகத்தில் நம்பிக்கை இல்லை
அவர்கள் நம்புவது
தொழிலாளி வர்க்க யதேச்சதிகாரம்தான்
பின் அடிக்கடி அவர்கள் ஏன்
ஜன நாயகம் காப்போம் என
முஷ்டியைத் தூக்குகிறார்கள் "
எனக்கு வெகு நாட்களாக இருந்த குழப்பத்தை
என் நண்பனிடம் விரித்து வைத்தேன்
"உனக்கு விளங்கும்படியாகவே சொல்கிறேன்"
பீடிகையோடு துவங்கினான்
"முட்டையின் மஞ்சள் கரு அவர்கள்
வெள்ளைக் கரு பிற கட்சிகள்
முட்டையின் ஓடுதான் ஜன நாயகம்
அவர்கள் வெள்ளைக்கருவை உண்டு
வளர்கிற வரையில்
அவர்களுக்கு ஓடு வேண்டும்
அதைக் காப்பதில் கவனமாய் இருப்பார்கள்
வளர்ந்தபின் அவ்ர்களே அதை
உடைத்து நொறுக்கிவிடுவார்கள் " என்றான்
கொஞ்சம் புரிந்தது போல் இருந்தது
"அப்படியானால் முட்டைக்கும் முதலாளிகளுக்கும்
சம்பந்தமே இல்லையா" என்றேன்
"நிச்சயம்உள்ளது நிறையவும் உள்ளது
முட்டை உற்பத்தியாளர்களும்
வினியோகஸ்தர்களும்
நுகர்வோரும் அவர்கள்தான் "என்றான்
"சத்தியமாகப் புரியவில்லை "என்றேன்
"அதுதான் நல்லது
உனக்கு எனக்கு மட்டும் இல்லை பலபேருக்கும்
அதனால்தான் ஜனநாயகமுட்டையை
ஊழலில் அவித்து சிலர் மட்டும்
சுகமாய் தின்று கொழுக்க முடிகிறது
புரிந்துபோனால் தான்
முட்டையை கவனிப்பதை விடுத்து
கோழிகளை கவனிக்கத் துவங்கிவிடுவோமே " என்றான்
நிஜமாகவே ஒன்றும் புரியவில்லை
59 comments:
வித்தியாசமான தலைப்பில் , வித்தியாசமான சிந்தனை..
பாராட்டுக்கள் தலைவரே...
ரொம்ப ரொம்ப வித்த்யாசமாக யோசித்து கவிதை எழுதி இருக்கின்றீர்கள்!எனக்கு சற்று புரிந்தும் புரியாமலும் உள்ளது.மேலும் இரண்டொரு தடவை வாசித்தால் கிரஹித்துக்கொள்வேன்.
ஊழலில் அவிப்பது தான் சற்று இடிக்கிறது..
brilliant!
இதையே ஆஸ்திகம் நாஸ்திகம் மதவாதிகளுக்கும் சொல்லலாம் போலிருக்குதே?
ஜனநாயகத்தின் அநிதி என்ற அம்பு மட்டும் பிடுங்கி என்ன பயன்...அதை எய்யும் வில்லையும் உடைத்து எறியவேண்டுமல்லவா... யோசிக்க வைக்கும் அருமையான பகிர்வுக்கு நன்றி சகோ!
நல்ல கற்பனை.... இந்த அரசியல் தியரிதான் புரியவே இல்லை இத்தனை வயதாகியும்.... :)
மன்னிக்கவும், எனக்கும் புரியவில்லை.
வேடந்தாங்கல் - கருன் *! //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
நீங்கள் சொல்வது போல இரண்டுமுறை படித்தால்
விளங்கிப்போகும்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
மாய உலகம் //
மிகச் சரியாக படைப்பின் நோக்கம் அறிந்து
மிக அழகாக பின்னூட்டமிட்டமைக்கும்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
பாதி புரிந்தது. இருந்தாலும் நல்ல படிமம் என்பது புரிகிறது. மாலை வந்து மறுபடியும் வாசிக்கணும்
வணக்கம் அண்ணா,
நலமா இருக்கிறீங்களா?
முட்டையினை ஒப்புவமையாக்கி ஜனநாயகம் பற்றிய வித்தியாசமான விளக்க கவிதையினைத் தந்திருக்கிறீங்க.
வசன கவிதை ஸ்டைலில் கவிதையை நகர்த்திச் செல்லும் பாங்கு கலக்கல்.
கம்யூனிசம் பற்றி படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் கருத்து இது. இப்படி பட்டென்று சொல்ல உங்களால்தான் முடியும். சில தோழர்கள் உண்மையிலேயே மக்கள் நலனில் கருத்து வைத்து செயலாற்றுகின்றனர். ஆனால் அவர்கள்தான் கடைசியில் உடைபட்ட முட்டை ஓடுகளாகிவிடுகின்றனர். மதுரையில் இதற்கு உதாரணம் அதிகம். சிந்திக்க வைக்கும் பகிர்வு சார்.
கம்யூனிஸ்ட்கள் இன்றைய உலகில் இப்பொழுது நிலவும் ஜனநாயகத்தை தான் வெறுக்கிறார்கள், உண்மையில் லெனின் காலத்து அரசு ஜனநாயகம் தான் அவர்கள் கொள்கை... ஆனால் அதை மறந்து விடுவார்கள், ஏனெனில் இப்பொழுது தலைமயில் இருக்கும் அனைவரும் போலி கம்யூனிஸ்ட்கள்...
முப்பது சதவிகிதம் ஓட்டு வாங்கி காங்கிரஸ் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது, அப்படி என்றால் மீதி எழுபது சதவிகித மக்கள் காங்கிரஸ் ஆட்சியை விரும்பவில்லை என்று தானே அர்த்தம்...
அப்படி என்றால் எது ஜனநாயகம்...
இது குறித்து பெரிய விவாதம் தேவை...
நான் இந்த மக்கள் ஜனநாயகத்தை எப்படி கொண்டு வருவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்...
கம்யூனிஸ்ட் மாநாடுகளில் கலந்து கொண்டு இருப்பீர்களா என்று தெரியாது...
ஒரு மாநாட்டில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான தலைவர்களையே காய்ச்சி எடுக்கும் அளவுக்கு தொண்டர்களுக்கு ஜனநாயக உரிமை வழங்கப் பட்டுள்ளது...
மாற்றுக் கருத்தை பதிவு செய்யவே எழுதினேன்...
வேண்டாம் என்றால் அழித்து விடலாம், புண்பட மாட்டேன்...
போலி கம்யூனிஸ்ட்கள் என்று எழுதுங்கள், உண்மையான கம்யூனிஸ்ட்கள் வருத்தப் படுவார்கள்
வித்தியாசமான சிந்தனை
த.ம 8
வித்தியாசமாக சொல்லியிருக்கீறீர்கள்..
கண்டிப்பாக புரிய வேண்டியவர்களுக்கு இது புரியுமா என்றுதான் தெரியவில்லை...
என்னென்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும். எல்லா கட்சிகளையும் ஆட்சிமுறைகளையும் இயக்குபவர்கள், அதில் சுகம் காண்பவர்கள் முதலாளிகளே என்ற உட்கருத்து இருப்பது போல் படுகிறது. அவ்வப்பொழுது கம்யூனிஸ்ட் என்ற கோழிக் குஞ்சை வளர்க்க ஜன நாயக முட்டை ஓடும், மற்ற கட்சிகளான ஊட்டச் சத்தும் பயன் படுவதும், தேவைப்படும் பொழுது ஊழல் என்ற நெருப்பை மூட்டி மொத்த முட்டையையும் அப்படியே சுவைப்பதும் முதலாளிகளே.
இந்த எடுத்துக்காட்டு புரியாதது போல் இருந்தாலும் சரியான ஒன்றுதான்.முதாலாளித்துவம் புரிவது எளிதல்ல.
மிக சிறப்பான பதிவு.
நண்பர் சூர்யஜீவாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்,
இன்றும் மனம்தளரா சிவப்புக்கொள்கையுடன்
வாழ்ந்துவரும் உண்மையான கம்யூனிச வாதிகள் இருக்கிறார்கள்...
ஆனாலும் ஒரு முட்டையை வைத்து ஜனநாயகத்தை
இப்படி புரட்டி எடுப்பதற்கு உங்களால் தான் முடியும்...
எப்படி நண்பரே உங்களுக்கு மட்டும் இப்படி தோன்றுகிறது...
அப்பப்பா..
ஒவ்வொரு படைப்பிலும் வித்தியாசம்..
தங்களின் திறமைக்கு தலை வணங்குகிறேன் ..
வித்யாசமா யோசிச்சு இருக்கீங்க கவிதை நல்லா இருக்கு.
suryajeeva //
இது கம்யூனிஸ்த்துக்கு ஆதரவாகத்தான் உள்ளது
அனைத்தையும் முடிவு செய்பவர்களாக இப்போது
முதலாளிகள்தான் இருக்கிறார்கள்
முட்டையைப் பார்க்காமல் கோழிகளைப்
பார்க்கச் சொன்னது அதற்காகத்தான்
இன்னும் சரியாகச் சொல்லி இருக்கலாமோ ?
தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சாகம்பரி //
எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது
தாங்கள் பல விஷயங்களில் கொண்டிருக்கிற கருத்து
எனக்கு மிகச் சரியாக உடன்பாடாக இருப்பது
தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நிரூபன் //
தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
M.R //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
rufina rajkumar //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மகேந்திரன் //
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி
தங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி
கம்யூனிஸ்ட்டுகள் என்பது கம்யூனிஸ்டுகளும் என
இருந்தால் மிகச் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்
வாழ்த்துக்களுடன்...
எனக்கும் புரியலே!ஆனால் புரிஞ்ச மாதிரியும் இருக்கு!வித்தியாசமான விளக்கம் .நன்று.
VENKAT //
தனது எழுத்து பிரபலமடைவதைவிட
மிகச் சரியாக புரிந்து கொள்ளப்படுவதையே
எப்போதும் படைப்பாளிகள் விரும்புவார்கள்
நானும் அதற்கு விதிவிலக்கல்ல
அந்த வகையில் தங்கள் பின்னூட்டங்கள் எப்போதுமே
படைப்பாளியின் கருத்தை ஆதரித்தோ மறுத்தோ இருந்தாலும்
மிகச் சரியாக புரியப்பட்டு எழுதப்பட்டிருக்கும்
இந்த பின்னூட்டமும் அதையே செய்கிறது
தங்கள் மேலான வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
பெரியவர் நீங்க அரசியல வைத்து ஏதோ ஒரு நல்ல செய்தி சொல்ல வந்திருப்பது புரிகிறது .வித்தியாசமான இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு ...........
சென்னை பித்தன் //
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அம்பாளடியாள் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
முட்டை பொரியல் சுவை
ஜ.ரா.ரமேஷ் பாபு //
தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
நல்ல விளக்கம்..
முனைவர்.இரா.குணசீலன் //
தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தமிழ்மணம்: 13
நல்லதொரு அலசல் தான்.
புரிந்து கொள்ளவே முடியாதவர்களைப் பற்றிய செய்தியை லேசில் புரிந்து கொள்ளவே முடியாதபடி
ஒரு கவிதையாக்கித் தந்துள்ளது அருமையாக உள்ளது.
புரிந்தும் புரியாதவனாக அன்புடன் தங்கள் vgk
யோசிக்க வைக்குது.. அருமையான பகிர்வு.
வை.கோபாலகிருஷ்ணன் //
தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அமைதிச்சாரல் //
தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
எப்படி சார், இந்த மாதிரிலாம் யோசிக்கறீங்க.. ?
Super & வாழ்த்துக்கள்.
ஆஹா கம்னியூஸ்ட் செம வாறல், குரு வித்தியாசமான சிந்தனை சூப்பர், அப்பிடியே திமுக அன்னாச்சிகளும் எந்த குட்டை ஸாரி எந்த முட்டைன்னும் சொல்லுங்க ஹா ஹா ஹா ஹா...!!!
தா பாண்டியன் அம்மாவுக்கு பணிஞ்சி கிடந்ததை உலகமே அறியும் ம்ஹும்...!!
தோழர் சூரியா பதிலை ஆவலோடு எதிர்பார்த்தேன் ரமணி சார்...
நீங்கள் கவிதை எழுதாத போது அதிகம் யோசிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்...
இல்லை உங்கள் துணைவியார் அடிக்கடி சமைத்து தரும் முட்டையில் தான் இது போன்ற கரு உதயமோ...
Madhavan Srinivasagopalan //
தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
MANO நாஞ்சில் மனோ //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரெவெரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்விரிவான பின்னூட்டத்திற்கும்மனமார்ந்த நன்றி
அந்தக் காலத்தில் கேள்விப்பட்ட கதை. இருப்பது அனைவருக்கும் சமமாகப் பங்கிட வேண்டும் என்பது கம்யூனிச சித்தாந்தம் .எந்த சொத்தும் இல்லாதவர்கள் இதை வரவேற்றார்கள். கொஞ்சம் நிலமுள்ளவன் கூட இதனை ஏற்க வரவில்லை. முட்டையின் மஞ்சளும் வெள்ளையும் ஓடும் காலத்துக்குத் தக்கபடி மாறும் போலும்..எடுத்துச் சொன்ன விதம் பாராட்டுக்குறியது.
G.M Balasubramaniam //
தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஜனநாயக முட்டையின் ரகசியத்தை இப்படி உடைத்துச் சொல்லிவிட்டீர்களே. மொத்தத்தில் மக்கள்தான் கூ(ழ்)முட்டைகள். பாராட்டுகள் ரமணி சார்.
களத்தில் இறங்கலாம் போலிருக்குதே..?
சைனாவில் வாயைத்திறந்தால் சுட்டுவிடுகிறார்களே? அந்த கம்யூனிஸ்டுகள் ஜனநாயகத்தை நம்பவில்லையோ ஒருவேளை?
எந்த விதமான வளர்ச்சிக் கொள்கையும் இல்லாதவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பது என் கருத்து. கடவுள் தொட்ட கண்மூடித்தனங்களை எதிர்ப்பது மட்டுமே கம்யூனிஸ்டுகளிடம் எனக்குப் பிடித்தது.
கீதா //
தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
எனக்கு அரசியலிலும் ஆர்வம் இல்லை. ஆயினும் பார்த்தேன் தொடருங்கள் வாழ்த்துகள் சகோதரா.
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com
kavithai (kovaikkavi) .. //
தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை //
தங்கள் பின்னூட்டத்துக்கு மட்டும்
சட்டென பதில் எழுதிவிட முடிவதில்லை
ரொம்ப யோசிக்கவேண்டியுள்ளது
ஊழலில் அவித்தலுக்கான விளக்கமும்
தொழிலாளிவர்க்க எதேச்சதிகாரத்திற்கான விளக்கமும்
தனிப் பதிவாக எழுதலாம் என நினைக்கிறேன்
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இந்தியாவில்
அரசியல் முட்டை ஒரு கூமுட்டை ...
அதனால் நம் வாழ்வும் நாறுகிறது ..
jayaram thinagarapandian //.
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
முட்டைத் தியரி நல்லதொரு படைப்பு. சில நேரங்களில் புரிந்தும் புரியாதது போல் இருப்பது கூட அவசியமாகிறது அல்லவா?
ShankarG //
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment