குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிற
நமது முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால்
நேரு அவர்களின் பிறந்த தின நாளை முன்னிட்டு
நமது பதிவர் சைலஜா அவர்கள் துவக்கி வைத்த
தொடர் பதிவைத் தொடர்ந்து எழுதும் தொடர் பதிவிது
எந்தத் தலைவர் தனது பிறந்த நாளை தன்னுடைய
பிறந்த நாளாகக் கொள்ளாமல் பிறருக்கு
அர்ப்பணிக்கிறார்களோ அவர்களது பிறந்த நாளே
கோலாகலத்துடன் மக்கள் விரும்பும்
பிறந்த நாளாகக் கொண்டாடப் படுகிறது
அந்த வகையில் ஆசிரியர் தினமும் குழந்தைகள்
தினத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்
குறிப்பாக நான் பல ஆரம்பப் பள்ளி
ஆசிரியர்களைக்கவனித்திருக்கிறேன்.
அவர்கள் எவ்வளவு வயதானாலும் அதிக
வயதானவர்கள் போல்
காட்சி அளிக்காமல் இளமையுடனே
காட்சி அளிப்பார்கள்அதற்கான உண்மையான
காரணம் அவர்கள் அதிக நேரம்
குழந்தைகளுடன் இருப்பதே என் நினைக்கிறேன்
மகாத்மா காந்தி அவர்கள் கூட மாமா வயதிலேயே
தாத்தா வாக அழைக்கப் பட்டதும் பண்டிட்நேரு
அவர்கள்தாத்தாவான வயதிலே கூட
ஏன் இன்றுவரையில் கூடமாமா வாக
அழைக்கப் படக் காரணம் அவர்கள்
அதிகமாக குழந்தைகளை விரும்பியதும்
குழந்தைகளுடன் மனதளவில் அதிகநெருக்கமாக
இருப்பதை விரும்பியதும் கூட
காரணமாயிருக்கலாம் என நினைக்கிறேன்
ஏனெனில் குழந்தைகள் உலகம் ஒரு அற்புத உலகம்
அதனுள் கற்கள் மாணிக்கக் கற்களாகவும்
கல்லும் மண்ணும்கல்யாண சமையல்
சாதமாகவும் இயல்பாக மாறிப்போகும்
பூவுலகு வரும் தெய்வங்கள் பெருவாரியான
சமயங்களில்அவர்களுடனேயே அமர்ந்து
விளையாடத் துவங்கிவிடுகிறார்கள்
அங்கு எல்லாமே நம்பிக்கையே
நம்பிக்கையின்மை என்பது இல்லாத
ஒரே பிரதேசம் இது ஒன்றுதான்
ஒரே ஒரு குறை அந்தச் சமவெளிக்குச்
செல்லும் பாதைமிகக் குறுகியது.
உங்கள் கிரீடங்களையும்முகமூடிகளையும்
அவிழ்த்து வைத்து குழந்தைகளாக
தவழ்ந்து போகத் தெரிந்தால்மட்டுமே நீங்கள்
அந்த சொர்க்கபுரியின் வஸந்தத்தை
அனுபவிக்க இயலும்.இல்லையெனில் உங்களுக்கு
அதுவும் ஒரு வெறும் பிதற்றல் உலகு போலவே படும்
பதிவின் நீளம் கூடிப் போனதால் கவிதை குறித்து
யோசிக்கவே இயலவில்லை
புதிர்:தகுதியடையத் தேவையான மூன்று
முக்கிய குணங்கள்
தகுதி அடைந்தபின் நிச்சயம் உயரிய பதவி கிடைக்கும்
அப்போது இருக்க மூன்று முக்கிய குணங்கள்
குறிப்பிட்டு யாரையும் தொடர் பதிவுக்கு அழைக்கவில்லை
என் பதிவைத் தொடர்பவர்கள் யாரேனும் இஷ்டப்பட்டு
தொடர்வீர்கள் ஆயின் மிக்க மகிழ்ச்சி கொள்வேன்
89 comments:
அண்ணே பகிர்வுக்கு நன்றி!
//புதிர்:தகுதியடையத் தேவையான மூன்று
முக்கிய குணங்கள்
தகுதி அடைந்தபின் நிச்சயம் உயரிய பதவி கிடைக்கும்
அப்போது இருக்க மூன்று முக்கிய குணங்கள் //
??
உண்மை தான். குழந்தைகளை அதீதமாய் நேசிப்பவர்களும் குழந்தையாகவே ஆகி போகிறார்கள்.
ஏனெனில் குழந்தைகள் உலகம் ஒரு அற்புத உலகம்
அதனுள் கற்கள் மாணிக்கக் கற்களாகவும்
கல்லும் மண்ணும்கல்யாண சமையல்
சாதமாகவும் இயல்பாக மாறிப்போகும்//
ஆமாம் குரு அவர்கள் உலகமே வேறுதான், இப்ப ஊர் போனபோது என் மகள் மண்ணில் சமையல் செய்து, ஒவ்வொரு சாப்பாட்டுக்கு பெயர் சொல்லி சாப்பிடுப்பான்னு சொல்லி தந்தாள், அப்படி அவர்களோடு நானும் விளையாடிப்போனால் நாமும் குழந்தை ஆகிவிடுகிறோம், சூப்பர்ப் பதிவு குரு...!!!
உண்மையில் குழந்தைகள் உலகம் தான்... மிக அற்புத உலகம்... பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ!
குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டுப் பழகும் ஆசிரியர்களும் இளமையாகவே இருக்கிறார்கள் என்று நீங்கள் கூறியிருப்பது மெத்தச் சரி. அருமையாக எழுதி இருக்கிறீர்கள். படித்ததில் மகிழ்ந்தேன்.
அருமையான பதிவு...
////எந்தத் தலைவர் தனது பிறந்த நாளை தன்னுடைய
பிறந்த நாளாகக் கொள்ளாமல் பிறருக்கு
அர்ப்பணிக்கிறார்களோ அவர்களது பிறந்த நாளே
கோலாகலத்துடன் மக்கள் விரும்பும்
பிறந்த நாளாகக் கொண்டாடப் படுகிறது
அந்த வகையில் ஆசிரியர் தினமும் குழந்தைகள்
தினத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்////
சரியாகச்சொன்னீர்கள்
//இளமையுடனே
காட்சி அளிப்பார்கள்அதற்கான உண்மையான
காரணம் அவர்கள் அதிக நேரம்
குழந்தைகளுடன் இருப்பதே //
உண்மை தான் சார் ...
நாங்கள் கணிப்பொரியொடு வேலைசெய்து
இயந்திரம் ஆஹி விடுவோமோ என்ற பயம் ஏற்படுகிறது
அருமையான பதிவு ...
ஏனெனில் குழந்தைகள் உலகம் ஒரு அற்புத உலகம்
அதனுள் கற்கள் மாணிக்கக் கற்களாகவும்
கல்லும் மண்ணும்கல்யாண சமையல்
சாதமாகவும் இயல்பாக மாறிப்போகும்
பூவுலகு வரும் தெய்வங்கள் பெருவாரியான
சமயங்களில்அவர்களுடனேயே அமர்ந்து
விளையாடத் துவங்கிவிடுகிறார்கள்
அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் அன்பரே..
அருமை.
MANO நாஞ்சில் மனோ //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கணேஷ் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
K.s.s.Rajh //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
விக்கியுலகம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Madhavan Srinivasagopalan //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தமிழ் உதயம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மாய உலகம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அருமையான பதிவு.
வாழ்த்துகள்.
முனைவர்.இரா.குணசீலன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
jayaram thinagarapandian //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தமிழ்மணம்: 6
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
நேருவை தாத்தா வயதிலும் மாமா என்று அழைத்ததன் காரணம் குழந்தைகளுடன் பெரும்பாலான நேரம் செலவிட்டது என்பது நன்றாக இருந்தது.
ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் இளமையுடனே இருப்பதற்கான காரணம் அருமை.
குழந்தைகளுடன் இருக்கும்போது நாமும் நம் வயதை மறந்துவிடுகிறோம்.
அழகான பதிவு. நன்றி பகிர்வுக்கு.
குழந்தைகள் வாழும் வீடு தேவதைகள் வாழும் வீடு..
சபாஷ் சார்
Rathnavel //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கோவை2தில்லி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
RAMVI //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
வேடந்தாங்கல் - கருன் *! //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
குழந்தைகளுடன் பழகும் ஆசிரியர்கள் ....// நானும் ஒப்புக் கொள்கிறேன் சார். பகிர்விற்கு நன்றி.
suryajeeva //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அடடா..தொடர் பதிவையும் கவிதையாக்கி படைத்துவிட்டீர்கள்!வாழ்த்துக்கள்!
/பதிவின் நீளம் கூடிப் போனதால் கவிதை குறித்து
யோசிக்கவே இயலவில்லை
புதிர்:தகுதியடையத் தேவையான மூன்று
முக்கிய குணங்கள்
தகுதி அடைந்தபின் நிச்சயம் உயரிய பதவி கிடைக்கும்
அப்போது இருக்க மூன்று முக்கிய குணங்கள்/
என்னபுதிர்..?.புதிராகவே இருக்கிறது.!
சாகம்பரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
ராமலக்ஷ்மி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா //.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
உடலின் வயது மனதைப் பொறுத்தது என்பதை ஆசிரியர்-மாணவர் உதாரணத்தில் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி ரமணி சார்...
ஆனால் இன்றைய உலகில் குழந்தைகளோடு பழக பலரும் பயப்படுகின்றனர்...பாப் கிங் மைகேல் வாழ்க்கை தந்த பாடமோ என்னவோ...?
அழகாகச சொல்லியிருக்கிறீர்கள் ரமணி சார்...
ஸ்ரீராம். //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ரெவெரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
தங்கள் மேலான வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் நன்றி
புதிரை கடைசியில் விடுவித்தல்தானே சரி
நன்றி ரமணி தொடரை எழுதி சிறப்பித்தமைக்கு...
தொடர் பதிவினை அழகாய்த் தொடர்ந்து விட்டீர்கள்...
நல்ல கருத்தினைக் கொண்ட பதிவிற்கு நன்றி...
ஷைலஜா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இந்த தொடர்பதிவு எழுத எனக்கும் அழைப்பு வந்தது நானும் குழந்தையாகவே மாறி எழுதி இருக்கேன். இது ஒரு ரிலே ரேஸ்போல நிறையபேர் நிறைய எண்ணங்களை பகிர்ந்துகொள்ள முடிகிரது.
வணக்கமையா!
குழந்தைகள் உலகம் ஒரு அற்புதமான உலகம்.. என்ன நாங்கள் அதை இறங்கி போய் பார்கவேண்டும் நம்மில் பலர் இறங்கி வர தயங்குகிறார்கள்!! அழகான பகிர்வு...
வாழ்த்துக்கள்!!!
Lakshmi //
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று ! அதை உணர்த்தும் பதிவு ...
காட்டான் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ananthu //
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
’’’மகாத்மா காந்தி அவர்கள் கூட மாமா வயதிலேயே
தாத்தா வாக அழைக்கப் பட்டதும் பண்டிட்நேரு
அவர்கள்தாத்தாவான வயதிலே கூட
ஏன் இன்றுவரையில் கூடமாமா வாக
அழைக்கப் படக் காரணம் அவர்கள்
அதிகமாக குழந்தைகளை விரும்பியதும்
குழந்தைகளுடன் மனதளவில் அதிகநெருக்கமாக
இருப்பதை விரும்பியதும் கூட
காரணமாயிருக்கலாம் என நினைக்கிறேன்’’’
உண்மை, ஆஹா அருமையான கடினமான செய்தியை எத்தனை எளிமையாய் தந்து விட்டீர்கள் சார். அருமையான பதிவு. நன்றி
A.R.ராஜகோபாலன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி
த ம 15
ராஜி //
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
//அந்தச் சமவெளிக்குச்
செல்லும் பாதைமிகக் குறுகியது.
உங்கள் கிரீடங்களையும்முகமூடிகளையும்
அவிழ்த்து வைத்து குழந்தைகளாக
தவழ்ந்து போகத் தெரிந்தால்மட்டுமே நீங்கள்
அந்த சொர்க்கபுரியின் வஸந்தத்தை
அனுபவிக்க இயலும்//
அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..
Nalla pathivu.
TM 16.
அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் பகிர்ந்தமைக்கு நன்றி
கருத்தாழமிக்க பதிவு! நன்று!
அந்த மழலைகளின் கண்களை கண்டால் தான்
எத்தனை பொழிவு பாருங்கள்...
தீய எண்ணத்துடன் சென்று அவ்விழிகளை கண்டாலே போதும் அத்தனை தீயவையும் தவிடுபொடியாகி
நன்மைகள் விளையத் தொடங்கிவிடும்....
அத்தகைய மழலையை கொண்டாடுவோம்...
குழந்தைகளை ரசிப்பவர்கள் நிச்சயம் குழந்தைகளாகத்தான் இருப்பார்கள்.
கே. பி. ஜனா...
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
துரைடேனியல் //
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ராக்கெட் ராஜா //
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மகேந்திரன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
விச்சு //
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
//உங்கள் கிரீடங்களையும்முகமூடிகளையும்
அவிழ்த்து வைத்து குழந்தைகளாக
தவழ்ந்து போகத் தெரிந்தால்மட்டுமே நீங்கள்
அந்த சொர்க்கபுரியின் வஸந்தத்தை
அனுபவிக்க இயலும்.//
ரொம்பச் சரி.. நல்லதொரு பகிர்வு.
அமைதிச்சாரல் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நிறைவான பதிவு!
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சென்னை பித்தன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் நடத்தும் இலக்கிய போட்டிக்கும் உங்களது பதிவுகளை அனுப்பி வைக்கலாமே
http://www.tamilthottam.in/t20084-2011
தமிழ்தோட்டம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
குழந்தைகள் = வாழும் தெய்வங்கள்!
அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும், பெற்றுக்கொள்ளவும் ஏராளம் இருந்தும்
நாம் அவர்களுக்கு கற்பிக்க முயலும் அற்பத்தனத்தைக் கூட உட்கொண்டிருக்கிறது பதிவு.
வாழ்த்துக்கள்.
சத்ரியன் //
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
குழந்தைகளின் உலகத்தை அதன் வடிவம் மாறாமல் மிகவும் ரசிக்கும்படியாகவும்
சிறப்பாக ஒரு தரமான படைப்பை வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பல ...
அரசன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சார்! ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் இளமைக்கு நீங்கள் சொன்ன கருத்து முற்றிலும் உண்மையே!
நல்லதொரு பதிவு. நன்றி. :-)
RVS //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அற்புதமான கருத்து நண்பரே
ஏனெனில் குழந்தைகள் உலகம் ஒரு அற்புத உலகம்
உண்மைதான் நண்பரே
த.ம 20
M.R //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
காரணம் அவர்கள் அதிக நேரம்
குழந்தைகளுடன் இருப்பதே என் நினைக்கிறேன்/
வியப்பான உண்மை.
அருமையான பகிர்வு.
பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..
இராஜராஜேஸ்வரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
//அந்தச் சமவெளிக்குச்
செல்லும் பாதைமிகக் குறுகியது.
உங்கள் கிரீடங்களையும்முகமூடிகளையும்
அவிழ்த்து வைத்து குழந்தைகளாக
தவழ்ந்து போகத் தெரிந்தால்மட்டுமே நீங்கள்
அந்த சொர்க்கபுரியின் வஸந்தத்தை
அனுபவிக்க இயலும்.//
நீ! எதுவாக ஆகவேண்டுமென்று ஏங்கித்தவிக்கிராயோ! அதுவாகவே மாறுவாய்! என்ற வரிகளை நினைவூட்டுகிறது தங்களுடைய இந்த வரிகள். பதிவுக்கு நன்றி அய்யா.
வே.சுப்ரமணியன். //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
''...குறிப்பிட்டு யாரையும் தொடர் பதிவுக்கு அழைக்கவில்லை
என் பதிவைத் தொடர்பவர்கள் யாரேனும் இஷ்டப்பட்டு
தொடர்வீர்கள் ஆயின் மிக்க மகிழ்ச்சி கொள்வேன்..''
எனது இரட்டைக் கட்டிலில் என்பதிலும் இதே கொள்கையைiயே நானும் கொண்டுள்ளேன் மிகிழ்ச்சி.
தொடர் பதிவில் பெயரிடுதல்- நாம் மிக மதிக்கும் ஒருவர் நம்மை அலட்சியம் செய்தல் என்று , மனம் ரணமாக்கும் செயல் இது என்பது என் அபிப்பிராயம்.
Vetha. Elangathilakam.
kovaikkavi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment