சில மாதங்களுக்கு முன்பு
ஒரு சனிக்கிழமை மதிய வேளை
சில அவசர வேலைகளை முடித்துவிட்டு
இரண்டு சக்கர வாகனத்தில்
வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்
பழங்கானத்தம் தாண்டி
ஜெய்கிந்த்புரம் மார்கெட் அருகில் வந்து
கொண்டிருக்கும்போது ரோட்டில் ஒரு சிறுகும்பல்
ரோட்டை மறைத்து எதையோ
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது
சாலை ஒரத்தில் கிடைத்த இடைவெளியில்
நான் வண்டியை உருட்டியபடி
என்ன நடந்து கொண்டிருக்கிறது
என எட்டிப் பார்த்தேன்
கூட்டத்தின் மத்தியில் இரண்டு பேர் கத்தியை
கையில் தூக்கியபடி ஒருவரைஒருவர் குத்த
ஆக்ரோஷமாய் முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்
நிச்சயம் இன்னும் சிறிது நேரத்தில் ஒரு
கொலை விழும் என உறுதியாய்த் தெரிந்தது
நமக்கு எதுக்கு வம்பு இடத்தைக் காலிசெய்வோம்
என முடிவு செய்து வண்டியை உருட்டியபடி
கூட்டத்தைவிட்டு மறுபுறம் வெளீயேறி
வண்டியை ஸ்டார்ட் செய்தேன்
வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பத் துவங்குகையில்
யாரோ வேகமாய் பின்னிருக்கையில் உட்கார
முயற்சிக்க , யாரெனஅறிந்து கொள்ளத் திரும்பினேன்
அதற்குள் என் கழுத்தில் கத்தியை வைத்தபடி
"வேகமாய் வண்டியை போலீஸ் ஸ்டேஸனுக்கு விடு
இல்லையேல் குத்திவிடுவேன் " எனக் கத்தினான்
சண்டையிட்ட இருவரில் ஒருவன்
நான் அதிர்ந்து போய் வண்டியைக் கிளப்பினேன்
அதற்குள் கைலி அவிழ்வதைக் கூட கவனியாது
கத்தியைத் தூக்கியபடி " வண்டியை நிறுத்து
இல்லையேல் குத்திப்புடுவேன் " எனக் கத்தியபடி
என்னை துரத்த ஆரம்பித்தான் அடுத்தவன்
அந்தச் சாலை அதிக போக்குவரத்து
நெருக்கடி உள்ள சாலை.மார்கெட் பகுதி ஆதலால்
ஜன நடமாட்டமும் அதிகம் இருக்கும்.
கழுத்தில் கத்திவைத்தபடி ஒருவன்
கத்தியுடன் வெறிபிடித்துத் துரத்தும் ஒருவன்
என்ன செய்கிறேன் என எனக்கேத் தெரியவில்லை
ஆனது ஆகட்டும் என நான் வாழ்வில் இதுவரை
ஓட்டியே அறியாதவேகத்தில் வண்டியை ஓட்டி
போலீஸ் ஸ்டேசன் வாசத்தில் நிறுத்தினேன்
அதுவரை என் உயிர் என்னுடலில்இல்லை
அவன் அவசரமாக இறங்கி ஸ்டேசனுக்குள்
தஞ்சம் புகுந்து கொண்டான்.
நானும் தப்பித்தேன் பிழைத்தேன் என்று வீடு
வந்து சேர்ந்தேன்.எனக்கு வெகு நேரம் வரை
பேச்சே வரவில்லை
வண்டியை எடுக்காவிட்டால் இவ்ன் குத்தி இருப்பான்
மக்கர் செய்திருந்தாலோ வேகமாக வராவிட்டாலோ
இவன் குத்தி இருப்பான்.அவசரத்தில்
வந்த வேகத்தில் எதன் மீதாவது மோதிப் போய்ச்
சேர்ந்திருக்கவும் அதிக வாய்ப்புள்ள
நெருக்கடியான சாலை
நினைக்க நினைக்க சம நிலை திரும்ப
வெகு நேரம் ஆனது
நான் ஏன அந்தப் பக்கம் வந்தேன்
எல்லோரையும் போல நானும்
வேடிக்கைப் பார்க்காது
ஏன் கடந்து போக நினைத்தேன்
சிறிது தூரம் போய் வண்டியை
ஸ்டார்ட் செய்திருந்தால்
நிச்சயம் பிரச்சனை இல்லை
ஏன் அங்கே ஸ்டார்ட் செய்தேன்
எனக்கேதும் புரியவில்லை
நமக்கு நேரம் சரியில்லையெனில் அது
எந்த ரூபத்திலாவது வரும்
.நமக்கு நேரம் சரியாக இருந்தால் எந்தப்
பெரிய துயரையும் வெல்லும் சக்தி
நம்முள் இருந்து தானாகவே வரும்
இதுநமக்கு அறிவுக்கும் சக்திக்கும்
அப்பாற்பட்டது எனமுடிவு செய்து கொண்டேன்
அதற்குப் பின் இப்போதெல்லாம் அவ்வளவாக
எதற்கும் அலட்டிக் கொள்வதில்லை
அது மிக மிக நல்லதாயினும் சரி
மிக மிக மோசமானதாயினும் சரி
72 comments:
//நமக்கு நேரம் சரியில்லையெனில் அது
எந்த ரூபத்திலாவது வரும்
.நமக்கு நேரம் சரியாக இருந்தால் எந்தப்
பெரிய துயரையும் வெல்லும் சக்தி
நம்முள் இருந்து தானாகவே வரும்
இதுநமக்கு அறிவுக்கும் சக்திக்கும்
அப்பாற்பட்டது// மிகவும் சரி.
எதற்கும் நாம் அலட்டிக் கொள்வதால் மட்டும் நம்மால் சில விஷயங்களில் எதுவும் செய்ய இயலப் போவதில்லை.எது நடக்குமோ அது நடந்தே தீரும்.எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. நடுவில் நாம் யார் அலட்டிக் கொள்ள?
நல்ல பகிர்வு. நன்றி.
உமக்கு அனுபவ பாடம்... எமக்கு எச்சரிக்கை பாடம். பகிர்வுக்கு நன்றி.
கத்தி எங்க தோள் மேல் வச்ச மாதிரி இருந்தது
பரவாயில்லையே....ஜெய்ஹிந்துபுரம் மார்க்கட் பகுதியில் அவ்வளவு வேகமாய் நிற்காமல் பிரேக் பிடிக்காமல் ஓட்டியது சாதனைதான். அந்த சமயத்தில் போலிஸ்ஸ்டேசன் இருப்பிடம் கூட மறந்துடும் அந்த பதட்டத்தில். உங்க மைன்ட் ரொம்ப நிதானமாய் அந்த அவசரத்திலும வேலை செய்திருக்கு பாருங்க அது பெரிய விஷயம்.
த்ரிலிங் சேஸ் நேரில் பார்த்த எஃபக்ட் உங்க எழுத்து நடையில். நல்ல பகிர்வு.
படபடப்பைத் தந்த அனுபவம். படிக்கும் போது எனக்கும் அப்படித்தான் இருந்தது. கடம்பவனக்குயில் சொன்னது போல ஜெய்ஹிந்த் புரம் ஏரியாவில் மக்களைத் தாண்டி நீங்கள் வண்டி ஓட்டியதே சாதனை தான். நல்லவர்களுக்கு எந்த சோதனை வந்தாலும் விலகி விடும் என்பது இதிலிருந்து அறியும் நீதி.
இப்படியெல்லாம் செய்வாங்களா?
இதைத்தான் பெரியவர்கள் நரி இடம் போனால் என்னா வலம் போனால் என்ன, நம் மீது விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்று சொல்லிப் போனார்களோ. வாழ்த்துக்கள்.Somehow I could post my views. Thank God.
படிக்க மிகவும் சுவாரஸ்யமான நல்ல சுவையான சூடான தகவலாக இருந்தது.
//நமக்கு நேரம் சரியில்லையெனில் அது
எந்த ரூபத்திலாவது வரும்
.நமக்கு நேரம் சரியாக இருந்தால் எந்தப்
பெரிய துயரையும் வெல்லும் சக்தி
நம்முள் இருந்து தானாகவே வரும்
இதுநமக்கு அறிவுக்கும் சக்திக்கும்
அப்பாற்பட்டது எனமுடிவு செய்து கொண்டேன்//
மிக நல்ல பதிவு, பகிர்வு. பாராட்டுக்கள்.
படிக்கும் போதே நல்ல சூடாக சுவையாக சுவாரஸ்யமாக இருந்தது.
நமக்கு நேரம் சரியில்லையெனில் அது
எந்த ரூபத்திலாவது வரும்.
நமக்கு நேரம் சரியாக இருந்தால் எந்தப்
பெரிய துயரையும் வெல்லும் சக்தி
நம்முள் இருந்து தானாகவே வரும்
இதுநமக்கு அறிவுக்கும் சக்திக்கும்
அப்பாற்பட்டது எனமுடிவு செய்து கொண்டேன்//
நல்ல பதிவு/பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ஐயோ.. நமக்கு துன்பம் நேரமோ என
நினைத்தவுடன் துன்பம் வருமாம்....
அதுபோல...
மனம் போல் வாழ்வு..
நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையோடு
வாழ்வை நகர்த்துவோம் என அழகாக
சொல்லியிருக்கும் பதிவு அருமை..
படிக்கவே திரில்லிங்கா இருக்கு...
அதற்குப் பின் இப்போதெல்லாம் அவ்வளவாக
எதற்கும் அலட்டிக் கொள்வதில்லை
அது மிக மிக நல்லதாயினும் சரி
மிக மிக மோசமானதாயினும் சரி//
தங்களின் அனுபவம் நிகழ்வை உணர்த்துகிறது .
//நமக்கு நேரம் சரியில்லையெனில் அது
எந்த ரூபத்திலாவது வரும்
.நமக்கு நேரம் சரியாக இருந்தால் எந்தப்
பெரிய துயரையும் வெல்லும் சக்தி
நம்முள் இருந்து தானாகவே வரும்
இதுநமக்கு அறிவுக்கும் சக்திக்கும்
அப்பாற்பட்டது எனமுடிவு செய்து கொண்டேன்//
இது உண்மை தான். அந்த சமயத்தில் நீங்கள் செயல்பட்ட விதம் ஆச்சரியம் தான். திகிலூட்டும் பதிவு சார்.
இந் நிகழ்ச்சியை காரணம் வைத்து போலிஸ் காரர்கள் எதுவும் தொந்தரவு பண்ணவில்லையே....
அதுவரை சந்தோசம் பட்டுக்கொள்ளுங்கள்.
அனுபவப் பதிவு. அருமை. நன்றி.
நமக்கு நேரம் சரியில்லையெனில் அது
எந்த ரூபத்திலாவது வரும்
.நமக்கு நேரம் சரியாக இருந்தால் எந்தப்
பெரிய துயரையும் வெல்லும் சக்தி
நம்முள் இருந்து தானாகவே வரும்
இதுநமக்கு அறிவுக்கும் சக்திக்கும்
அப்பாற்பட்டது
இது என்ன எப்போ என்ன நடக்கும்னே சொல்லமுடியல்லியே?
//நமக்கு நேரம் சரியில்லையெனில் அது
எந்த ரூபத்திலாவது வரும்
.நமக்கு நேரம் சரியாக இருந்தால் எந்தப்
பெரிய துயரையும் வெல்லும் சக்தி
நம்முள் இருந்து தானாகவே வரும்
இதுநமக்கு அறிவுக்கும் சக்திக்கும்
அப்பாற்பட்டது //
அந்த நேரத்தில் என்ன செய்வது என்று புரியப் போவதில்லை... நிச்சயம் நீங்கள் சொல்வது போல அறிவுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட விஷயம் தான்..
எப்படியோ நல்லபடியாக திரும்பினீர்களே அதற்கு நன்றி சொல்வோம்!
சம்பவம் ஒரு நல்ல அனுபவப்பாடமாகின்றது . இப்படிக் காட்ச்சிகளை திரைப்படங்களில் பார்த்திருக்கின்றேன்.ஆனால் படத்திற்காக மிகைப்படுத்தி உள்ளார்கள் என்று நினைப்பேன் . வெட்டுக் குத்துக்காட்சிகள் திரைப்படங்களில் வரும்போது இப்படியும்நடக்குமா என்று கருதுவேன் . ஆனால் இது உண்மை என்பது வெளிச்சமாகின்றது .உங்கள் அனுபவத்தை எமக்குத் தந்து மன நிறைவு கண்டுள்ளீர்கள் .நாமும் உண்மை நிலைமைகள் புரிகின்றோம்
அந்த நேரத்து உங்கள் அவஸ்தை கண்ணுக்குள் வந்து போனது ஒரு நிமிஷம்.அப்பாடி !
GMB சார் சொல்வது பொருந்துகிறது.
உங்கள் பார்வையில் இப்படி. போலீசில் சரணடைந்தவர் பார்வையில் எப்படியோ?
இப்போதான் தமிழ் மணத்துல இணைச்சிருக்கீங்களா... என் ஓட்டை பதிவு பண்ணிட்டேன்.
''...நமக்கு நேரம் சரியாக இருந்தால் எந்தப்
பெரிய துயரையும் வெல்லும் சக்தி
நம்முள் இருந்து தானாகவே வரும்
இதுநமக்கு அறிவுக்கும் சக்திக்கும்
அப்பாற்பட்டது...''
இது தான் உண்மை. பயங்கர அனுபவம். திறில் தான். தப்பியது ஆண்டவன் செயல். எழுதியதற்கு நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
அது மிக மிக நல்லதாயினும் சரி
மிக மிக மோசமானதாயினும் சரி
எதற்கும் அலட்டிக் கொள்வதில்லை
நடப்பதுதானே நட்க்கும் !
'இதுக்குப் போய் அலட்டிக்கலாமா என்னடா பொல்லாத வாழ்க்கை' என்ற பாலிசி நல்ல பாலிசிதான்! :)))
unmai thaan!
sariyaa sonneenga..!
இந்தளவில் தப்பிச்சது போதும். விறு விறுப்பாக இருந்தது படிக்கும் போது.
மிக மோசமான அனுபவம்.
இப்படித்தான் சில மாதங்களுக்கு முன் வில்லாபுரம் பகுதியில் காலை வாக்கிங் செல்லும்போது ஒரு பெண்ணின் தாலியை அறுத்துக்கொண்டு பைக்கில் இரண்டு பேர் ஓடினார்கள். பிடிங்க பிடிங்க என்று கத்தினார்கள். நானும் ஓடினேன் யாரை பிடிப்பது என்று தெரியாமல்.
நம்ம மதுரை நல்ல மதுரை
உங்களால் ஒரு உயிர் காப்பாற்ற பட்டிருக்கிறது அது போல ஒரு குற்றமும் தவிர்க்க பட்டிருக்கிறது. அது போல கடவுளின் ஆசிர்வாதத்தால் எங்களுக்க்காக ஒரு "நல்ல பதிவரின்" உயிரும் காப்பாற்ற பட்டு இருக்கிறது.
கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என்றும் கிடைக்க எனது பிரார்தனைகளும் வாழ்த்துகளும்
போதி மரத்தடியில் புத்தனுக்கு கிடைத்த ஞானம் உங்களுக்கு கத்தி முனையில் கிடைத்துள்ளது.
இது போன்ற எதிர்பாராத விபரீத நேரங்களில் எது சரி, எது தவறு என்று எவராலுமே சட்டென்று ஒரு முடிவுக்கு வர இயலாது. சந்தர்ப்ப சூழலே நம் முடிவுகளை நிர்ணயிக்கிறது. எதையும் எதிர்கொள்ள மனத்தைப் பழக்கிவிட்டாலே போதுமானது. நம்மால் செய்யக்கூடியதும் அது ஒன்றுதான். மிகவும் அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனாலும் படிக்கும்போது நெஞ்சம் பதைக்கவே செய்தது. உடலும் மனமும் மீண்டு வந்ததற்கு வாழ்த்துகள் ரமணி சார்.
சிக்கலில் மாட்டாமல் தப்பித்தீர்களே அது நல்ல விசயம்தான், இதை வைத்து ஒரு குறும்படம் இயக்கலாம் போலவே!
அதற்குப் பின் இப்போதெல்லாம் அவ்வளவாக
எதற்கும் அலட்டிக் கொள்வதில்லை
அது மிக மிக நல்லதாயினும் சரி
மிக மிக மோசமானதாயினும் சரி//மனதினை கடுபடுத்திக்கொண்டு இப்படி இருந்தால்த்தான் வாழ்முடியும் போலும்...:(
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
சசிகலா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா //.
அது மிக மிக நல்லதாயினும் சரி
மிக மிக மோசமானதாயினும் சரி//மனதினை கடுபடுத்திக்கொண்டு இப்படி இருந்தால்த்தான் வாழ்முடியும் போலும்...:(
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நம்பிக்கைபாண்டியன் //.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கீதமஞ்சரி //
படிக்கும்போது நெஞ்சம் பதைக்கவே செய்தது. உடலும் மனமும் மீண்டு வந்ததற்கு வாழ்த்துகள் ரமணி சார்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தி.தமிழ் இளங்கோ //
போதி மரத்தடியில் புத்தனுக்கு கிடைத்த ஞானம் உங்களுக்கு கத்தி முனையில் கிடைத்துள்ளது.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என்றும் கிடைக்க எனது பிரார்தனைகளும் வாழ்த்துகளும் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சிவகுமாரன் //
.
மிக மோசமான அனுபவம்.
நம்ம மதுரை நல்ல மதுரை //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Seeni //
.
unmai thaan!
sariyaa sonneenga..//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
vanathy //
இந்தளவில் தப்பிச்சது போதும். விறு விறுப்பாக இருந்தது படிக்கும் போது.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம். //
'இதுக்குப் போய் அலட்டிக்கலாமா என்னடா பொல்லாத வாழ்க்கை' என்ற பாலிசி நல்ல பாலிசிதான்! :)))//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
kovaikkavi //
பயங்கர அனுபவம். திறில் தான். தப்பியது ஆண்டவன் செயல். எழுதியதற்கு நன்றி.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை //
GMB சார் சொல்வது பொருந்துகிறது.
உங்கள் பார்வையில் இப்படி. போலீசில் சரணடைந்தவர் பார்வையில் எப்படியோ? //
அது குறித்து யோசிக்க மனம் வரவில்லை
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
.
சந்திரகௌரி //
உங்கள் அனுபவத்தை எமக்குத் தந்து மன நிறைவு கண்டுள்ளீர்கள் .நாமும் உண்மை நிலைமைகள் புரிகின்றோம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //.
எப்படியோ நல்லபடியாக திரும்பினீர்களே அதற்கு நன்றி சொல்வோம்!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஹேமா //
அந்த நேரத்து உங்கள் அவஸ்தை கண்ணுக்குள் வந்து போனது ஒரு நிமிஷம்.அப்பாடி !
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //s
இது என்ன எப்போ என்ன நடக்கும்னே சொல்லமுடியல்லியே?//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
AROUNA SELVAME //.
இந் நிகழ்ச்சியை காரணம் வைத்து போலிஸ் காரர்கள் எதுவும் தொந்தரவு பண்ணவில்லையே....
அதுவரை சந்தோசம் பட்டுக்கொள்ளுங்கள்.
அனுபவப் பதிவு. அருமை. நன்றி//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோவை2தில்லி //
. அந்த சமயத்தில் நீங்கள் செயல்பட்ட விதம் ஆச்சரியம் தான். திகிலூட்டும் பதிவு சார்.//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சசிகலா //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கே. பி. ஜனா... //
படிக்கவே திரில்லிங்கா இருக்கு...//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மகேந்திரன் //
நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையோடு
வாழ்வை நகர்த்துவோம் என அழகாக
சொல்லியிருக்கும் பதிவு அருமை..//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
raji //
எதற்கும் நாம் அலட்டிக் கொள்வதால் மட்டும் நம்மால் சில விஷயங்களில் எதுவும் செய்ய இயலப் போவதில்லை.எது நடக்குமோ அது நடந்தே தீரும்.எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. நடுவில் நாம் யார் அலட்டிக் கொள்ள?
நல்ல பகிர்வு. நன்றி.//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மனசாட்சி™ //
.
உமக்கு அனுபவ பாடம்... எமக்கு எச்சரிக்கை பாடம். பகிர்வுக்கு நன்றி.//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மோகன் குமார் //
..
கத்தி எங்க தோள் மேல் வச்ச மாதிரி இருந்தது //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கடம்பவன குயில் //
த்ரிலிங் சேஸ் நேரில் பார்த்த எஃபக்ட் உங்க எழுத்து நடையில். நல்ல பகிர்வு.//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கணேஷ் //
.
வண்டி ஓட்டியதே சாதனை தான். நல்லவர்களுக்கு எந்த சோதனை வந்தாலும் விலகி விடும் என்பது இதிலிருந்து அறியும் நீதி.//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Vairai Sathish //
.
இப்படியெல்லாம் செய்வாங்களா? //
இங்கு இது பெரிய விஷ்யமில்லை
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
இதைத்தான் பெரியவர்கள் நரி இடம் போனால் என்னா வலம் போனால் என்ன, நம் மீது விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்று சொல்லிப் போனார்களோ. வாழ்த்துக்கள்.Somehow I could post my views. Thank God.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் //
படிக்க மிகவும் சுவாரஸ்யமான நல்ல சுவையான சூடான தகவலாக இருந்தது.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா
சினிமாவுல வர்ற மாதிரி இருக்கே. அதிகபட்ச படபடப்புல இருந்திருக்குமே உங்க இருதயம்.
வித்தியாசமான அனுபவம்தான்
T.N.MURALIDHARAN //
வித்தியாசமான அனுபவம்தான் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ராஜி //...
சினிமாவுல வர்ற மாதிரி இருக்கே. அதிகபட்ச படபடப்புல இருந்திருக்குமே உங்க இருதயம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சில சமயம் நிஜம் சினிமாவை வென்று விடுகிறது. படிக்கிற எங்களுக்கே 'திக்' 'திக்' கென்று இருக்கிறதே. உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
Vetha.Elangathilakam
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
துரைடேனியல் //
சில சமயம் நிஜம் சினிமாவை வென்று விடுகிறது. படிக்கிற எங்களுக்கே 'திக்' 'திக்' கென்று இருக்கிறதே. உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
kovaikkavi //
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மாதேவி //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment