Saturday, July 21, 2012

கற்றுக் கொண்டவை-துணைப்பதிவு-5 (1)


கசாப்புக் கடைதேடும் வெள்ளாடுகள்

பணிச்சுமை தாளாது
என் நண்பன் பரிதவித்தபோது
"கொஞ்சம் மென்திறன் வளர்
மன இறுக்கம் குறையும்" என்றேன்

சில நாட்களில்..
கார்பரேட் நண்பன்
கார்பரேட் கவியாகிப் போனான்
கவிதைகளும் சிறப்பாக இருந்தன.
அதுவரை பிரச்சனை ஏதும் இல்லை.

சக கவிஞர் ஒருவர்
"வரலாறு முக்கியம் அமைச்சரே"என
வடிவேலு சொன்னதைப்போல
"கவிதையில்
முற்போக்கு முக்கியம் தம்பி"எனச் சொல்ல
ரொம்பக் குழம்பிப் போனான்
லேசாக தடம் மாறியும் போனான்

அடுத்தமுைற் அவனை சந்தித்த போது..
நேர்வழியில்
அலுவலகம் சென்றுகொண்டு இருந்தவன்
சுற்றுவழியில் சுற்றிப்போனான்
காரணம் கேட்டேன்
"ஏழ்மையை வறுமையை
தெளிவாகப் புரிந்துகொள்ள
சேரிகளைக் கண்டுபோவதாகச்" சொன்னான்

புழுதி தூசி தாங்காதவன்
பல சமயங்களில்
தன் கார் கண்ணாடி இறக்கி
சேரிச் சண்டைகளை ரசிக்கத் துவங்கினான்
காரணம் கேட்க
"அவர்கள் வார்த்தைகளை
அதே உச்சரிப்போடு
கவிதையில் பொருத்தினால்தான்
சுருதி கூடும்"என்றான்

வார வேலை நாட்களில்
எப்போதும் பரபரப்பாயிருந்தான்
காரணம் கேட்க
"சனிக்கிழமைக்குள் பதிவினைப் போட வேண்டும்.
அப்போது தான்பின்னூட்டம் அதிகம் வரும்"என்றான்

"மாதம் ஐந்துவீதம்
ஒரு வருடம் பதிவு போட்டால்
அறுபது வரும்
அதில் பத்து பதினைந்து போனாலும்
ஒரு புத்தகம் தேத்தலாமா"என
பார்க்கும்போதெல்லாம் புலம்பத் துவங்கினான்

சனி மாலைகளில்
அவனை தொடர்புகொள்ளவே இயலவில்லை.
காரணம் கேட்டபோது
பதிர்வர்களை பில்டப் செய்வது குறித்தும்
பங்காளிகளாகப் பிரிந்துகிடக்கும்
பதிர்வர்கள் குழு குறித்தும்
அதற்குள் இருக்கும் அரசியல் குறித்தும்
வகுப்பெடுக்கத் துவங்கினான்

தடம்மாறிப் போனவன
இப்போது
திசைமாறிப் போவதுபோல்
எனக்குப்பட்டது

நாட்கள் செல்லச் செல்ல
தோட்டதில் பாதி கிணறாகிப் போக
விளைச்சல் பாதியான கதைபோல
உளைச்சல் தீர
வழிதேடிப் போனவன்
வழியிலேயே உழன்று திரிய
அலுவலக உளைச்சல்
இன்னும் அதிகமாகிப்போனது

வெகு நாட்கள் கழித்து
அவனைச் சந்தித்தபோது
கொஞ்சம் மெலிந்திருந்தான்
தாடி மீசை யோடு
ஒரு சாமியாரைப் போலிருந்தான்
"உடல் சரியில்லையா"என்றேன்
அதற்கு பதில் சொல்லாமல்
ஒரு சாமியாரைப் பற்றி
மிக உயர்வாய்ச் சொன்னான்
"அவர் அப்படியெல்லாம் இல்லையாமே
உனக்குத் தெரியுமா" என்றான்

நான் பதிலேதும் சொல்லவில்லை
எனக்கென்னவோ முன்பு
ஆப்பசைத்து மாட்டிக்கொண்ட
முட்டாள் குரங்குககள் எல்லாம்
புத்தி தெளிந்துவிட்டதைப் போலவும்
புத்திசாலி வெள்ளாடுகள்தான்
கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு
கசாப்புக் கடைக்கே
வழி கேட்பது போலவும் பட்டது

36 comments:

சீனு said...

ஆமா அய்யா ஒரு பத்வனின் வாழ்கையை அழகாய் சொல்லி உள்ளீர்கள்... தலைப்பும் அது தாங்கி வந்த கருத்துக்களும் அருமை... பல வெள்ளாடுகள் இங்கே கசாப்புக் கடைக்கு வழி தேடுகின்றன

மோகன் குமார் said...

உண்மை கதை போல் தெரிகிறது சார்

Payana Priyan said...

Nitharsanamana Unmai Ramani Avargale
Kathaiyi kavithayai sollum ungalin nerthi enakku pidithirunthathu. nan tharpoothuthan blogspot padikka aarambithu erukkuren. Ithu ennoda muthal idugai. Thodarnthu padaikka vazthukkal.

Ganpat said...

தன் எழுத்து பிறருக்கு எதாவது ஒரு வகையில் பயனுள்ளதாக அமையவேண்டும் எனும் நோக்கத்தில் எழுதுபவன், நாளடைவில் போற்றப்படுகிறான்.
மாறாக
தன் எழுத்து பிறர் போற்றும்படி (விரும்பும்படி) அமையவேண்டும் எனும் நோக்கத்தில் எழுதுபவன், நாளடைவில் தோற்றுப்போகிறான்...

மாலதி said...

மிகசிறந்த வழிகாட்டலும் மிக சிறந்த கவிதையும் உள பூர்வ பாராட்டுகள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒருசிலப் பதிவர்களின் போக்கினை மிகச்சிறந்த முறையில், நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்.

தலைப்பும் [தலையும்] அருமை.
முடிவும் [வாலும்] அருமை.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.

Seeni said...

ayya sariyaa azhakaana muraiyil sollideenga....

s suresh said...

சிறப்பான கதை கவிதை! நன்றி!

பால கணேஷ் said...

நான் மனதில் நினைத்து வந்த கருத்தையே வேறு வரிகளில் நண்பர் கண்பத் கூறி விட்டார். அதையே என் கருத்தாகவும் கொள்ளவும் ரமணி ஸார்.

Avargal Unmaigal said...

உண்மை நிலமையை அழகாக எடுத்துரைத்த கவிதை...அருமை...

T.N.MURALIDHARAN said...

கட்டாயம் இந்தப் பதிவைப் பாத்து கத்துக்கணும்.
த.ம.4

மாதேவி said...

"கசாப்புக்கடை தேடும் வெள்ளாடுகள்" ஆகாமல் இருக்கவேண்டும். அருமை.

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools

நன்றி

வலையகம்
http://www.valaiyakam.com/

ayeshaFAROOK said...

யதார்த்தமான பதிவு... அருமை... அய்யா!

மகேந்திரன் said...

உங்கள் பதிவு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நண்பரே...

Lakshmi said...

மிகவும் நல்ல கவிதை வாழ்த்துகள்

AROUNA SELVAME said...

உங்கள் வலையில் நான் அதிக பாடங்கள் கற்றுக் கொள்கிறேன் ரமணி ஐயா.

Ramani said...

சீனு //
ஆமா அய்யா ஒரு பத்வனின் வாழ்கையை அழகாய் சொல்லி உள்ளீர்கள்... தலைப்பும் அது தாங்கி வந்த கருத்துக்களும் அருமை//


தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

வெங்கட் நாகராஜ் said...

இனிய பகிர்வு. மீள் பதிவாக இருந்தாலும் ரசிக்க வைத்த பகிர்வு.

Ramani said...

சீனு//.
ஆமா அய்யா ஒரு பத்வனின் வாழ்கையை அழகாய் சொல்லி உள்ளீர்கள்... தலைப்பும் அது தாங்கி வந்த கருத்துக்களும் அருமை.//

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிபோகும்அருமையான
பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Payana Priyan //

.Nitharsanamana Unmai Ramani Avargale
Kathaiyi kavithayai sollum ungalin nerthi enakku pidithirunthathu. nan tharpoothuthan blogspot padikka aarambithu erukkuren. Ithu ennoda muthal idugai. Thodarnthu padaikka vazthukkal.

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

மோகன் குமார் //
.
உண்மை கதை போல் தெரிகிறது சார்//

தங்கள் ஊகம் சரிதான்
என் கதையல்ல என நண்பனின் கதை
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Ganpat //
.
தன் எழுத்து பிறருக்கு எதாவது ஒரு வகையில் பயனுள்ளதாக அமையவேண்டும் எனும் நோக்கத்தில் எழுதுபவன், நாளடைவில் போற்றப்படுகிறான்.//

மிகச் சரியான என்னைக் கவர்ந்த கருத்து
தங்கள் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

மாலதி /
..
மிகசிறந்த வழிகாட்டலும் மிக சிறந்த கவிதையும் உள பூர்வ பாராட்டுகள்//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

வை.கோபாலகிருஷ்ணன்//

தலைப்பும் [தலையும்] அருமை.
முடிவும் [வாலும்] அருமை.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Seeni //

ayya sariyaa azhakaana muraiyil sollideenga....//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

s suresh //

சிறப்பான கதை கவிதை! நன்றி!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

பால கணேஷ்//
.
நான் மனதில் நினைத்து வந்த கருத்தையே வேறு வரிகளில் நண்பர் கண்பத் கூறி விட்டார். அதையே என் கருத்தாகவும் கொள்ளவும் ரமணி ஸார்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Avargal Unmaigal //

உண்மை நிலமையை அழகாக எடுத்துரைத்த கவிதை...அருமை...//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

T.N.MURALIDHARAN //
.
கட்டாயம் இந்தப் பதிவைப் பாத்து கத்துக்கணும்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

மாதேவி //

"கசாப்புக்கடை தேடும் வெள்ளாடுகள்" ஆகாமல் இருக்கவேண்டும். அருமை.//


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ayeshaFAROOK //

யதார்த்தமான பதிவு... அருமை... அய்யா!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

மகேந்திரன் //

உங்கள் பதிவு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நண்பரே...//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Lakshmi //

மிகவும் நல்ல கவிதை வாழ்த்துகள்//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

AROUNA SELVAME //

உங்கள் வலையில் நான் அதிக பாடங்கள் கற்றுக் கொள்கிறேன் ரமணி ஐயா.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

வெங்கட் நாகராஜ் //

இனிய பகிர்வு. மீள் பதிவாக இருந்தாலும் ரசிக்க வைத்த பகிர்வு.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment