Monday, July 2, 2012

முயலாததும் தொடராததும்...

குழப்பியது
புரியாதது
விரும்பாதது
அனைத்தையும்
ஒரு நாள் நேரடியாகச்
சந்திக்கத் துணிந்தேன்

ஆசிரியருக்குப் பயந்துத்
தூண் மறைவில் ஒதுங்கும்
மாணவனைப்போல போல்
அவைகள் என் கண்ணிலிருந்து
மறையவே முயன்றன

மெல்ல அவைகளை
அருகில் அழைத்து
அமரவைத்து
காரணம் கேட்டேன்

நீங்கள் ஒருமுறை கூட
என்னை இதுபோல்
நேராகப் பார்த்ததில்லை
என்றது ஒன்று

நீங்கள்ஒருமுறை கூட
என்னுடன் இதுபோல்
முகம் கொடுத்துப் பேசியதில்லை
என்றது ஒன்று

நீங்கள் ஒருமுறை கூட
என்னை இப்போதுபோல்
புரிந்து கொள்ள முயன்றதே இல்லை
என்றது ஒன்று

யோசித்துப் பார்க்கையில்
முயலாததும்
விடாமுயற்சியுடன்
தொடராததுமே
அனைத்திற்கும் காரணமெனத்
தெளிவாகப் புரிய
இப்போதெல்லாம்
முன்பு போல
வண்ணங்களை
கோளாறு சொல்லித் திரியாமல்
விழிகளை சரிசெய்ய முயல்கிறேன்
எல்லாம் சரியாகத்தான் தெரிகிறது

60 comments:

கே. பி. ஜனா... said...

ஆம். வண்ணங்கள் அப்படியே தாம் உள்ளன. மாறுவதில்லை. எண்ணங்களைத் தாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

கே. பி. ஜனா... said...

அருமை!

Seeni said...

arumai!
arumai!

nantri!
ayyaa!

Avargal Unmaigal said...

பார்க்கும் பார்வை தெளிவாக இருந்தால் எல்லாம் நன்றாக புரியும். சிவப்பு வர்ணத்தை பார்க்கும் போது அதை வர்ணம் என்று கருதி செல்லலாம் அதையே நல்ல தெளிவோடு பார்த்தால் அது ரத்தமாக கூட இருக்கலாம் .அதுனாலதான் பார்வையில் தெளிவு வேண்டும் என்பது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை, வெகு அருமை. எல்லாமே சரியாகத்தான் உள்ளது. நம் பார்வையில் தான் கோளாறு.

பார்வைகள் மாறட்டும்.

பாசமும் நேசமும் ப்ழையபடி மலரட்டும்.

நல்ல பகிர்வு.

வரலாற்று சுவடுகள் said...

அருமை அருமை

tha ma 3

Gobinath said...

சூப்பர்.
நிச்சயமாக எம் பார்வையில்தான் எல்லாமே.

ஸாதிகா said...

இப்போதெல்லாம்
முன்பு போல
வண்ணங்களை
கோளாறு சொல்லித் திரியாமல்
விழிகளை சரிசெய்ய முயல்கிறேன்
எல்லாம் சரியாகத்தான் தெரிகிறது//மிகச்சரி..அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்.

புலவர் சா இராமாநுசம் said...

த்த்துவங்கள தடையின்றி வழக்கம் போல் வருகின்றன காணுகின்ற காடசிகளும் வண்ணங்களும் அதனால் எழுகின்ற எண்ணங்களும் மனிதர்களுக்கு ஏற்ப மாறுபடும் த ம ஓ 4

சா இராமாநுசம்

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

மிக சரியாக சொல்லப்பட்ட ஒரு கவிதை. வாழ்த்துகள் சார்.

Lakshmi said...

ஆமா எல்லாமே நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கு. அதைச்சொல்லியவிதம் நல்லா இருக்கு

ரமேஷ் வெங்கடபதி said...

பொறுப்பில்லாதபோது குழம்பவில்லை..பயமில்லை..தொடர்கிறோம்..போராடுகிறோம்!
இருப்பதைப் பற்றி நினைக்கும்போதே இழப்பை எண்ணி குழம்புகிறோம்..தள்ளிப் போடுகிறோம்..ஏற்றுக்கொள்கிறோம்
சமாதானம் சொல்கிறோம்!

நன்கு எடுத்தாளப்பட்ட அர்த்தங்கள்! வாழ்த்துக்கள்!

பா.கணேஷ் said...

அர்த்தம் பொதிந்த அருமையான பகிர்வு. மிக ரசித்தேன். அருமை.

சிட்டுக்குருவி said...

ரசித்த கவிதை....ரசிக்கக் கூடிய கவிதை...

அருமையாகவுள்ளது சார்....த.ம.ஓ.7

Sasi Kala said...

யோசித்துப் பார்க்கையில்
முயலாததும்
விடாமுயற்சியுடன்
தொடராததுமே
அனைத்திற்கும் காரணமெனத்
தெளிவாகப் புரிய
உண்மை வரிகள் ஐயா.

கீதமஞ்சரி said...

பிரச்சனைகளைக் கண்டு விலகாமல் ஒளியாமல் நேருக்கு நேர் நின்று அலசலும், பிரச்சனையின் பின்புலத்தை ஆராய்ந்து தெளிதலும் எத்தனை விரைவில் பிரச்சனைகளைக் களைந்து மனம் தெளிவாக்குகின்றன! ஆசிரியரைக் கண்டு மிரளும் பள்ளிப்பிள்ளைகளை உதாரணம் சொன்னது மிகவும் பிரமாதமான ஒப்புமை. விழியை சரிசெய்தால் வண்ணங்கள் அழகு. வழியை சரிசெய்தால் எண்ணங்கள் அழகு. சீரிய சிந்தனையைத் தெளிவாகவும் மனந்தொடும் வகையிலும் பதிவிட்டமைக்குப் பாராட்டுகள் ரமணி சார்.

AROUNA SELVAME said...

அருமைங்க ரமணி ஐயா.

திண்டுக்கல் தனபாலன் said...

நம்பிக்கை தரும் வரிகள் ! நன்றி ! (TM 9)

சென்னை பித்தன் said...

//வண்ணங்களை
கோளாறு சொல்லித் திரியாமல்
விழிகளை சரிசெய்ய முயல்கிறேன்
எல்லாம் சரியாகத்தான் தெரிகிறது//
brilliant!
த.ம.10

ashok said...

sir, you write with so much depth...

வெங்கட் நாகராஜ் said...

//யோசித்துப் பார்க்கையில்
முயலாததும்
விடாமுயற்சியுடன்
தொடராததுமே
அனைத்திற்கும் காரணமெனத்
தெளிவாகப் புரிய//

மிகமிகச் சரி....

நல்ல கருத்துள்ள கவிதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி ரமணி ஜி.

த.ம. 11

Athisaya said...

முன்பு போல
வண்ணங்களை
கோளாறு சொல்லித் திரியாமல்
விழிகளை சரிசெய்ய முயல்கிறேன்
எல்லாம் சரியாகத்தான் தெரிகிறதுஃஃஃஃஃஃஃஃ
அருமை அருமை சொந்தமே..இதற்காக தான் நானும் முயல்கிறேன்...!

Ramani said...

கே. பி. ஜனா... //
.
ஆம். வண்ணங்கள் அப்படியே தாம் உள்ளன. மாறுவதில்லை. எண்ணங்களைத் தாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.//

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

Seeni //

arumai!
arumai!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

Avargal Unmaigal //

தங்கள் வரவுக்கும் சிந்திக்கத் தூண்டிப்போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

வை.கோபாலகிருஷ்ணன் //

அருமை, வெகு அருமை. எல்லாமே சரியாகத்தான் உள்ளது. நம் பார்வையில் தான் கோளாறு.
பார்வைகள் மாறட்டும். //

தங்கள் வரவுக்கும் சிந்திக்கத் தூண்டிப்போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

வரலாற்று சுவடுகள் //
.
அருமை அருமை //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

Gobinath //

சூப்பர்.
நிச்சயமாக எம் பார்வையில்தான் எல்லாமே.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

ஸாதிகா //


மிகச்சரி..அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

புலவர் சா இராமாநுசம் //
.
த்த்துவங்கள தடையின்றி வழக்கம் போல் வருகின்றன காணுகின்ற காடசிகளும் வண்ணங்களும் அதனால் எழுகின்ற எண்ணங்களும் மனிதர்களுக்கு ஏற்ப மாறுபடும் //

தங்கள் வரவுக்கும் சிந்திக்கத் தூண்டிப்போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி //
.
மிக சரியாக சொல்லப்பட்ட ஒரு கவிதை. வாழ்த்துகள் சார்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

Lakshmi //

ஆமா எல்லாமே நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கு. அதைச்சொல்லியவிதம் நல்லா இருக்கு//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

ரமேஷ் வெங்கடபதி //நன்கு எடுத்தாளப்பட்ட அர்த்தங்கள்! வாழ்த்துக்கள்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

பா.கணேஷ் //

அர்த்தம் பொதிந்த அருமையான பகிர்வு. மிக ரசித்தேன். அருமை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

சிட்டுக்குருவி //

ரசித்த கவிதை....ரசிக்கக் கூடிய கவிதை...
அருமையாகவுள்ளது சார்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

Sasi Kala //
.
உண்மை வரிகள் ஐயா.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

கீதமஞ்சரி //

சொன்னது மிகவும் பிரமாதமான ஒப்புமை. விழியை சரிசெய்தால் வண்ணங்கள் அழகு. வழியை சரிசெய்தால் எண்ணங்கள் அழகு. சீரிய சிந்தனையைத் தெளிவாகவும் மனந்தொடும் வகையிலும் பதிவிட்டமைக்குப் பாராட்டுகள் ரமணி //

தங்கள் வரவுக்கும்
விரிவான
அருமையான
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

AROUNA SELVAME s//

அருமைங்க ரமணி ஐயா.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

திண்டுக்கல் தனபாலன் //
.
நம்பிக்கை தரும் வரிகள் !//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

சென்னை பித்தன்//

brilliant!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

ashok //

sir, you write with so much depth..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

வெங்கட் நாகராஜ் //

நல்ல கருத்துள்ள கவிதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி ரமணி ஜி.//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

Athisaya //

அருமை அருமை சொந்தமே..இதற்காக தான் நானும் முயல்கிறேன்...!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

T.N.MURALIDHARAN said...

//வண்ணங்களை கோளாறு சொல்லித் திரியாமல்
விழிகளை சரிசெய்ய முயல்கிறேன் எல்லாம் சரியாகத்தான் தெரிகிறது//
எதை சரி செய்யனும்னு இதைவிட அழகா சொல்ல முடியாது.

மகேந்திரன் said...

வாழ்வில் இடமாறு தோற்றப் பிழைகளாய்
தோன்றும் சந்தர்ப்பங்களை அழகாய்
சம்பவங்களை காட்டி விளக்கிய பதிவு
மிக அருமை நண்பரே...

விச்சு said...

பார்க்கும் பார்வை சரியாக இருந்தால் அனைத்தும் சரியே!

Ramani said...

T.N.MURALIDHARAN

எதை சரி செய்யனும்னு இதைவிட அழகா சொல்ல முடியாது.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

மகேந்திரன் //
..
வாழ்வில் இடமாறு தோற்றப் பிழைகளாய்
தோன்றும் சந்தர்ப்பங்களை அழகாய்
சம்பவங்களை காட்டி விளக்கிய பதிவு
மிக அருமை நண்பரே..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

விச்சு//

பார்க்கும் பார்வை சரியாக இருந்தால் அனைத்தும் சரியே!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

ராமலக்ஷ்மி said...

/வண்ணங்களை
கோளாறு சொல்லித் திரியாமல்/

சரியாகச் சொன்னீர்கள்.

அருமை.

Ramani said...

ராமலக்ஷ்மி //.

சரியாகச் சொன்னீர்கள்.
அருமை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Anonymous said...

...இப்போதெல்லாம்
முன்பு போல
வண்ணங்களை
கோளாறு சொல்லித் திரியாமல்
விழிகளை சரிசெய்ய முயல்கிறேன்
எல்லாம் சரியாகத்தான் தெரிகிறது...

ம்...ம்...குளப்பமின்றி யிருந்தால் சரியே. புரிதலிலேயே தெளிவு உண்டு. சிலரிற்குக் குழுப்புதலே வேலையாகவும் உள்ளது. நல்ல தெளிவாக உள்ளது இந்தக் கருத்து.
வேதா. இலங்காதிலகம்.

Preethy said...

kovaikkavi //

தெளிவாக உள்ளது இந்தக் கருத்து//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

G.M Balasubramaniam said...

குழம்பியது புரியாதது போன்றவற்றை நேரடியாக சந்திக்கலாம்.விரும்பாததை சந்திக்கும்போதுதான், வண்ணக்குருடாய் இருப்பதே தெரியாமல் போகிறது. விழிகளை சரிசெய்தால் மட்டும் போதாது. சிந்திக்க வைக்கும் பதிவு. வாழ்த்துக்கள்.

radhakrishnan said...

அருமையான பதிவு. விடாமுயற்சியின் பெருமையை
இதைவிடச் சிறப்பாக விளக்க முடியுமா?
தொடர வாழ்த்துக்கள் ரமணிசார்

Ramani said...

kovaikkavi //

ம்...ம்...குளப்பமின்றி யிருந்தால் சரியே. புரிதலிலேயே தெளிவு உண்டு. சிலரிற்குக் குழுப்புதலே வேலையாகவும் உள்ளது. நல்ல தெளிவாக உள்ளது இந்தக் கருத்து.//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

//G.M Balasubramaniam
//

சிந்திக்க வைக்கும் பதிவு. வாழ்த்துக்கள்//.

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

radhakrishnan //

அருமையான பதிவு. விடாமுயற்சியின் பெருமையை
இதைவிடச் சிறப்பாக விளக்க முடியுமா?
தொடர வாழ்த்துக்கள் ரமணிசார்//


.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

கோமதி அரசு said...

கோளாறு சொல்லித் திரியாமல்
விழிகளை சரிசெய்ய முயல்கிறேன்
எல்லாம் சரியாகத்தான் தெரிகிறது//

குறை குற்றங்களுடன் ஏற்றுக் கொள்ள பழகி விட்டால் எல்லாம் சரியாக தெரியும்.

அருமையான கவிதை.

Ramani said...

கோமதி அரசு //

குறை குற்றங்களுடன் ஏற்றுக் கொள்ள பழகி விட்டால் எல்லாம் சரியாக தெரியும்.
அருமையான கவிதை.//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Post a Comment