Saturday, July 21, 2012

கற்றுக் கொண்டவைகள்- பிரதானப் பதிவு 6 (தொடர்ச்சி )

இதில்  இவ்வளவு இருக்கா (2)

தனது இயக்கத்தில் வெளிவந்த ஆண்டவன் கட்டளைத்
திரைப்படத்தில்   தனது பெயரை
போக்குவரத்து போலீசின் கையில் இருக்கும்
ஸ்டாப் என்கிற காட்டியில் போட்ட காரணம்
எதுவாக இருக்கும் என இயக்குனர் சங்கர் அவர்கள்
 கேட்ட கேள்விக்கு நானும் பல நிமிடங்கள்
யோசித்துப் பார்த்தேன்.உண்மையில்காரணம்
விளங்கவே இல்லை
பின் அவரே விளக்கத் துவங்கினார்

"இந்தப் படத்தில் ஒவ்வொரு துறையிலும்
சிறந்து விளங்கும் ஜாம்பவான்களுடன் நான்
இயக்கு நராகப் பணியாற்றினேன்

ஒரு ப்ரொஃபஸரின் நடை உடை பாவனைகள்
எப்படி இருக்கும் என நடிகர் திலகம் அவர்களுக்கு
நான்  விளக்கவேண்டியதில்லை
அவருக்கு என்னைவிட நிறையத் தெரியும்
ஆனால் என் கதாபாத்திரத்திற்கு எவ்வளவு வேண்டும்
எவ்வளவு போதும் எனபது எனக்குத்தான் தெரியும்

அதேபோலத்தான் இசை பாடல் குறித்தும்
விஸ்வனாதன் அவர்களைப் போல எனக்கு
இசை அறிவும் கிடையாது
கண்ணதாசன் அவர்களைப் போல
தமிழறிவும் கிடையாது
ஆனாலும் இந்தப் படத்திற்கு இந்த மாதிரி
பாடல் இருந்தால் இந்த உணர்வைக் கூட்டிச்
சொல்லும்படியாக இசை இருந்தால்
சரியாக இருக்கும்என்பது எனக்குத் தான் தெரியும்
இப்படித்தான் கேமராமென்,எடிட்டிங் என
எல்லா துறைக்கும்.

எப்படிச் சாலையைக் கடந்து செல்லுகிற
எத்தனையோ வகையான வண்டிகளில்
ஒரு போக்குவரத்துப் போலீஸுக்கு
எதையுமே ஓட்டத் தெரியாது போனாலும் கூட
சுகமாய்ப் போய்ச் சேர எல்லோரும்
எப்படிப் போகவேண்டும் எப்படிப் போகக் கூடாது
என்பதை மிகச் சரியாகச் சொல்லத் தெரியுமோ
அப்படித்தான் இயக்கு நர் பணியும்

எப்படிப்பட்ட ஜாம்பவன்களாக இருந்தாலும்
அவர்களின் திறமைகளில் சிறிதும்
நம்மிடம் இல்லையென்றாலும் கூட
அவர்களது திறமையை எப்படி சில
இடங்களில் கூடுதலாக பயன்படுத்த வேண்டும்
சில இடங்க்களில் குறைவாகப்
பயன்படுத்த வேண்டும் என்பது
இயக்கு நருக்குத்தான் தெரியும்

அதை ஒரு குறியீடாகச் சொல்லத்தான்
அப்படி அந்த போக்குவரத்துப் போலீஸின்
ஸ்டாப் காட்டியில் குறிப்பிட்டேன் "என்றார்

உண்மையில்  படத்தில் ஒரு நிமிடத்தில்
கடந்து போகும் ஒரு சாதாரண காட்சிக்குள்
இத்தனை அர்த்தம் இருப்பதை அவர்
சொல்லிப் போனதும் உண்மையில்
நான் மிரண்டுதான் போனேன்

இவ்வளவுக்குள் இவ்வளவா  என்கிற மலைப்பு
இன்றுவரை என்னைவிட்டு நீங்கவே இல்லை


16 comments:

vimalanperali said...

இவ்வளவுக்குள் இவ்வளவா என்பது நம் வாழ்க்கை முழுவது எல்லாவிஷயங்களிலும் நெசவிட்டிருக்கிற ஒன்றாக/நல்ல் உவமானம்.நல்ல கருத்து.அச்சாணிகள் என்று எல்லா விஷயங்களிலும் உறங்குவதில்லை.நல்ல பதிவு .வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

ஆமா அவர் சொல்வது உண்மைதானே. சொன்ன பிறகுதானே புரிஞ்சுக்க முடியுது.

திண்டுக்கல் தனபாலன் said...

கற்றது கையளவு தானே சார் !
பகிர்வுக்கு நன்றி...

(த.ம. 2)

CS. Mohan Kumar said...

Thodarungal Nandri

MANO நாஞ்சில் மனோ said...

அவர்களது திறமையை எப்படி சில
இடங்களில் கூடுதலாக பயன்படுத்த வேண்டும்
சில இடங்க்களில் குறைவாகப்
பயன்படுத்த வேண்டும் என்பது
இயக்கு நருக்குத்தான் தெரியும்//

படைப்பாளிகளின் கற்பனை திறனே வியக்க வைக்கிறது...! ஆனால் காலம் மாறிப்போச்சு இப்போ, ஹீரோ என்ன சொல்றாங்களோ அது போலவே செய்யும் இயக்குனர்கள் அதிகரித்து விட்டார்கள் என்பதும் உண்மை...!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒரு காட்சிக்குள் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா? இப்படி காட்சிக்குக் காட்சி அர்த்தம் உள்ளபடி அமைப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இன்றைய இயக்குனர்களும் இதிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்
த.ம.5

Unknown said...

படத்தில் சில நிமிட காட்சிக்கு இத்தனை அர்த்தமா !! அப்போ நமது வாழ்க்கைக்கு எவ்வளவு அர்த்தம் இருக்க வேண்டும் !! நல்ல பதிவிற்கு நன்றிகள் !

தி.தமிழ் இளங்கோ said...

தன்னையும், தனது டைரக்‌ஷன் திறமையையும் வியந்து கொண்ட அவர், உங்கள் சினிமாப் பட உலக ஆர்வத்திற்கு என்ன சொன்னார் என்பதனை தெரியப்படுத்தவே இல்லை.

Avargal Unmaigal said...

//இதில் இவ்வளவு இருக்கா///

இவ்வளவுக்குள் இவ்வளவா என்கிற மலைப்பு
இன்றுவரை என்னைவிட்டு நீங்கவே இல்லை

எனக்கும்தான்......அதனால்தான் பழைய படங்கள் என்றும் நினைவில் நிற்கின்றன.

ananthu said...

தமிழ்மணத்தில் நட்சத்திர பதிவராக இடம் பெற்றதற்கும் , உங்களின் நட்சத்திர பதிவு தொடருவதற்கும் வாழ்த்துக்க

சசிகலா said...

ஆமாம் ஐயா எனக்கும் அந்த பிரமிப்பு இருந்தவண்ணமே உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எப்படிச் சாலையைக் கடந்து செல்லுகிற
எத்தனையோ வகையான வண்டிகளில்
ஒரு போக்குவரத்துப் போலீஸுக்கு
எதையுமே ஓட்டத் தெரியாது போனாலும் கூட
சுகமாய்ப் போய்ச் சேர எல்லோரும்
எப்படிப் போகவேண்டும் எப்படிப் போகக் கூடாது
என்பதை மிகச் சரியாகச் சொல்லத் தெரியுமோ
அப்படித்தான் இயக்கு நர் பணியும்//

மிகவும் அருமையான உதாரணம். பாராட்டுக்கள்.
நல்ல பகிர்வுக்கு நன்றிகள்.

ஸ்ரீராம். said...

அதற்குள் அடுத்தடுத்த பதிவா... அத்தனையும் வாசித்தேன்.

அருணா செல்வம் said...

சிறிய விதைக்குள் தான்
பெரிய விருட்சகம் இருக்கிறது!!

உணரவைத்தீர்கள்.
நன்றி ஐயா.

”தளிர் சுரேஷ்” said...

ஒரு ஸ்டாப்புக்குள் இவ்வளவு கதையா? வியந்தேன் ரசித்தேன்! உணர்ந்தேன்! பகிர்வுக்கு நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

//இவ்வளவுக்குள் இவ்வளவா என்கிற மலைப்பு
இன்றுவரை என்னைவிட்டு நீங்கவே இல்லை//

எனக்கும் அதே ஆச்சரியம்....

அசத்தறீங்க ஜி!

Post a Comment