Thursday, July 5, 2012

கோப்பெரும்சோழனும்பிசிராந்தையாரும்

மூன்றுவாய்கடந்த
சமுத்திரம்
சமூத்திரமாகி
முடிவாக
மூத்திரமாகிப்போவதைபோல்

சப்தமென
வார்த்தைகளென
உருமாற்றம்கொண்ட
உணர்வுகள்எல்லாம்
படைப்பிலயங்களில்
அர்த்தமற்றுத்தான்போகின்றன

ஒருகுயிலின் கூவல்  
ஒருகுழந்தையின்சிரிப்பு
நொந்தவளின்விசும்பல்
அபயம்வேண்டி
அலறுவோனின்கூக்குரல்
எந்தஉணர்வுகளின்வெளிப்பாடும்
சப்தங்களாய்இருக்கையில்
சங்கடப்படுத்துகிறஅ ளவு
வார்த்தைகளில்
 வசப்படுவதேஇல்லை

வாசகனின்அனுபவங்களோடு
ஒத்தஅலைவரிசையில்
ஒத்துப்போகையில்
உச்சம்தொடும்படைப்பு

அதுஅற்றுப்போகையில்
சவக்கிடங்கின்பிணஅடுக்களாய்
அசைவற்று த்தான்கிடககிறது

இருப்பினும்
எடுப்பதெல்லாம்
சிப்பி ஆகிப்போயினும்
என்றேனும் முத்தும்கிடைக்குமெனும்
நம்பிக்கையில்   
உயிர்ப்பயம் விடுத்து
கடல் மூழ்கும்  மனிதனாய்

கவிபடைத்துக் கொண்டிருக்கிறேன் நான்  

காடுமலைகடந்து
 நாடு கடந்து
எங்கோ
முத்தின்அருமைதெரிந்த
முகமறியாஒருவன்  இருப்பான்
என்கிறநம்பிககையில்

வார்த்தைமூடியஅநுபவங்களை
கவிதைகளாக்கி
நம்பிக்கையுடன்
காற்றில்விதைத்துப் போகிறேன் நான்

கோப்பெரும்சோழனும்
பிசிராந்தையாரும்
நம்பிக்கையூட்டிப்போகிறார்கள்எனக்கு    
 

60 comments:

பால கணேஷ் said...

அருமை. அருமை. வலைப்பதிவு எழுதுகையில் பல சமயங்களில் என் மனதில் தோன்றியது இது. எனக்கு இவ்வளவு அழகாய் யோசித்து சொல்லத் தெரியவில்லை என்பதே உண்மை. பிரமாதம் ஐயா.

Unknown said...

தலைப்பிற்கும் கவிதைக்கும் எங்கே சம்பந்தமிருக்கிறது என்றே யோசித்து வாசித்து வருகையில் நச்சென்று முடித்துவிட்டீர்கள்! அருமை.!

அவ்வப்போது என்மனதிலும் எழும் உணர்வு இருப்பினும் என்றாவது ஒருநாள் அங்கீகரிக்கபடுவோம் என்ற நம்பிக்கையுடன் பயணம் தொடர்கிறது!

கோவி said...

super sir..

அருணா செல்வம் said...

காடுமலைகடந்துஎங்கோ
முத்தின்அருமைதெரிந்த
முகமறியாஒருவன்
இருப்பான்என்கிறநம்பிககையில்
வார்த்தைமூடியஅநுபவங்களை
கவிதைகளாக்கிநம்பிக்கையுடன்
காற்றில்விதைத்துவைக்கிறேன்நான்

ரமணி ஐயா.... எந்த வாக்கியத்தை எடுத்துக்காட்டி
என் கருத்தைக் கூறுவது என்றே எனக்குத் தெரியவில்லைங்க.
ஒவ்வொரு வரியும் அற்புதம்.
வணங்குகிறேன் ஐயா.

Gobinath said...

"சப்தங்களாய்இருக்கையில்
சங்கடப்படுத்துகிறஅ ளவு
வார்த்தைகளில்
வசப்படுவதேஇல்லை"

உண்மைதான் பாஸ். நானும் பலமுறை சப்தங்களின் உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்கமுயன்றிருக்கிறேன். ஆனால் தோல்விதான் மிச்சம் :(

அருமையான படைப்பு

செய்தாலி said...

நச் ன்னு சொல்லிடீங்க சார்

Anonymous said...

முடிவு அழகு ரமணி சார்...

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கவிதை. தமிழ்மணம் என்ன ஆயிற்று ரமணிஜி!

கே. பி. ஜனா... said...

ரொம்ப அருமை சார்!

Unknown said...

tha ma 2

Seeni said...

sonnathu sarithaan ayya!

CS. Mohan Kumar said...

அடடா அணைத்து பதிவர்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்

Ganpat said...
This comment has been removed by the author.
Ganpat said...

ரமணி ஸார்,
உங்கள் எழுத்துக்கள வாசகர்கள் ரசனையை ஒரே சீராக உயர்த்தி வருகின்றன.மேலும் நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் அதற்கு ஆதரவு அதிகம் என்பதை இங்கு வந்து குவியும் பின்னூட்டங்கள் சொல்லாமல் சொல்கின்றன .முத்தின்அருமைதெரிந்த
முகமறியாஒருவன் என்பது நல்ல சொல்லாக்கம்.வாழ்த்துக்கள்..
பி.கு:சமீபத்தில் இன்னொரு தளத்தில் "விதி விலக்குகளை விலக்கி விடலாமே" எனும் உங்கள் பின்னூட்டத்தின் சொல்நயத்தை மிகவும் ரசித்தேன்.

சீனு said...

//ஒத்துப்போகையில்
உச்சம்தொடும்படைப்பு//

பதிவுலக நண்பர்களை கோப்பெரும்சோழனும்பிசிராந்தையாரும் என்று கூறியிருப்பது அருமை

படித்துப் பாருங்கள்

சென்னையின் சாலை வலிகள்

seenuguru.blogspot.com/2012/07/blog-post.html

சீனு said...

TM(4)

Unknown said...

//காடுமலைகடந்துஎங்கோ
முத்தின்அருமைதெரிந்த
முகமறியாஒருவன்
இருப்பான்என்கிறநம்பிககையில்
வார்த்தைமூடியஅநுபவங்களை
கவிதைகளாக்கிநம்பிக்கையுடன்
காற்றில்விதைத்துவைக்கிறேன்நான்

கோப்பெரும்சோழனும்பிசிராந்தையாரும்
நம்பிக்கையூட்டிப்போகிறார்கள்எனக்கு//


அருமை சகோ அருமை! இதுவரை நேரில்
காணாத நம் நட்புக்கு இதுவே எடுத்துக்காட்டு!

த ம ஓ 5
சா இராமாநுசம்

# * # சங்கப்பலகை அறிவன் # * # said...

ரமணி சார்..

நல்ல பொருள் நோக்கி எழுதி இருக்கிறீர்கள்..
முத்தாய்ப்பான இறுதி இரண்டு வரிகள்.

ஆனால் முதல் பத்தி கருத்துடனோ லயத்துடனோ இல்லாதிருப்பது போலத் தோன்றுகிறது..

நன்றி.(சுட்டுவதற்கு வருந்தினால் வருந்துகிறேன் :))

ஆத்மா said...

அருமையாகவுள்ளது சார்...... தம....7

சசிகலா said...

ஒருகுயிலின் கூவல்
ஒருகுழந்தையின்சிரிப்பு
நொந்தவளின்விசும்பல்
அபயம்வேண்டி
அலறுவோனின்கூக்குரல்
எந்தஉணர்வுகளின்வெளிப்பாடும்
சப்தங்களாய்இருக்கையில்
சங்கடப்படுத்துகிறஅ ளவு
வார்த்தைகளில்
வசப்படுவதேஇல்லை

ஆமாம் ஐயா எனக்கும் வசப்படுத்த தெரியவில்லை. அற்புதம் ஐயா .

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

அருமை

சென்னை பித்தன் said...

முற்றிலும் உண்மை.பதிவுலம்

சென்னை பித்தன் said...

பின்னூட்டம் முடியும் முன் பிரசுரமாகி விட்டது.பதிவுலகம் பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் நிறைந்ததுதான். இதைத்தான் நான் “வலைப்பூ தந்த வருமானம்” எனச் சொன்னேன்.அருமை
த.ம.9

Athisaya said...

காடுமலைகடந்துஎங்கோ
முத்தின்அருமைதெரிந்த
முகமறியாஒருவன்
இருப்பான்என்கிறநம்பிககையில்
வார்த்தைமூடியஅநுபவங்களை
கவிதைகளாக்கிநம்பிக்கையுடன்
காற்றில்விதைத்துவைக்கிறேன்நான்ஃஃஃஃஃ

மிக மிக அருமை ஐயா,இதை விட வேறேதும் சொல்ல இயலவில்லை.
வாழ்த்துக்கள் ஐயா..சந்திப்போம்.
ஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம். ..!!!!

திண்டுக்கல் தனபாலன் said...

முற்றிலும் உண்மை ! (TM 11)

குறையொன்றுமில்லை. said...

மிகவும் அருமையாக சொல்லிட்டீங்க.

Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ் //
.
அருமை. அருமை. வலைப்பதிவு எழுதுகையில் பல சமயங்களில் என் மனதில் தோன்றியது இது. எனக்கு இவ்வளவு அழகாய் யோசித்து சொல்லத் தெரியவில்லை என்பதே உண்மை. பிரமாதம் ஐயா.

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வரலாற்று சுவடுகள் //.

அவ்வப்போது என்மனதிலும் எழும் உணர்வு இருப்பினும் என்றாவது ஒருநாள் அங்கீகரிக்கபடுவோம் என்ற நம்பிக்கையுடன் பயணம் தொடர்கிறது!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவி //
.
super sir..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME

... எந்த வாக்கியத்தை எடுத்துக்காட்டி
என் கருத்தைக் கூறுவது என்றே எனக்குத் தெரியவில்லைங்க.
ஒவ்வொரு வரியும் அற்புதம்.
வணங்குகிறேன் ஐயா//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
.

Yaathoramani.blogspot.com said...

Gobinath /

உண்மைதான் பாஸ். நானும் பலமுறை சப்தங்களின் உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்கமுயன்றிருக்கிறேன்.
அருமையான படைப்பு//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

செய்தாலி //

நச் ன்னு சொல்லிடீங்க சார்//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //.

முடிவு அழகு ரமணி சார்.//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ்//

சிறப்பான கவிதை//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா...//

ரொம்ப அருமை சார்//!

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Preethy said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

வரலாற்று சுவடுகள் //.

தங்கள் வரவிற்கும்
வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

sonnathu sarithaan ayya!//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மோகன் குமார்/

.
அடடா அணைத்து பதிவர்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Ganpat //

நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் அதற்கு ஆதரவு அதிகம் என்பதை இங்கு வந்து குவியும் பின்னூட்டங்கள் சொல்லாமல் சொல்கின்றன //


.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Ganpat //

:சமீபத்தில் இன்னொரு தளத்தில் "விதி விலக்குகளை விலக்கி விடலாமே" எனும் உங்கள் பின்னூட்டத்தின் சொல்நயத்தை மிகவும் ரசித்தேன்.//


.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சீனு //.

பதிவுலக நண்பர்களை கோப்பெரும்சோழனும்பிசிராந்தையாரும் என்று கூறியிருப்பது அருமை//

என்னுடைய மன எண்ணத்தை
மிகச் சரியாக பிரதிபலித்தமைக்கு
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம்//

அருமை சகோ அருமை! இதுவரை நேரில்
காணாத நம் நட்புக்கு இதுவே எடுத்துக்காட்டு//

என்னுடைய மன ஓட்டத்தை
மிகச் சரியாக பிரதிபலித்தமைக்கு
மனமார்ந்த நன்றி!

G.M Balasubramaniam said...

என் எழுத்து சரியாகச் சென்றடைவதில்லையோ என்று பலமுறை எண்ணியதுண்டு. ஒரு வாசகனாவது சரியாகப் புரிந்து கொள்கிறான் என்றால் எழுதுவது வீணானது போல் தோன்றுவதில்லை. என் மன ஓட்டம் உங்கள் பதிவில். நம்மில் யார் பிசிராந்தையார், யார் சோழன்.......!

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

அருமை சகோ அருமை! இதுவரை நேரில்
காணாத நம் நட்புக்கு இதுவே எடுத்துக்காட்டு//

மனதை மகிழ்விக்கச் செய்த
அருமையான பின்னூட்டம்
தங்கள் வரவுக்கும் வாழ்த்திற்கும்
மனம்தொட்ட பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி!

Yaathoramani.blogspot.com said...

அறிவன்#11802717200764379909 //.

ஆனால் முதல் பத்தி கருத்துடனோ லயத்துடனோ இல்லாதிருப்பது போலத் தோன்றுகிறது..//


தங்கள் கருத்தும் சரியே
ஆயினும் யோசிக்கையில் மிக மிக அழகாகவும்
ஆழமாகவும் தோன்றுகிற கருத்து வார்த்தைகளின்
பலமின்மையால் எதிர்பாராத ஏதோ ஒன்றாய்
முற்றிலும் அர்த்தம் மாறிதாய் போய்விடுகிற
எரிச்சலில் அதை எழுதினேன்
எண்ணுவதை அப்படியே படிப்பவர்களும்
உணரக்கூடிய அளவு எழுதக்கூடிய பாண்டித்தியம்
இல்லாத ஆதங்கத்தில் எழுதியது அது
தங்கள் வரவுக்கும் மனம் திறந்த கருத்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிட்டுக்குருவி //
.
அருமையாகவுள்ளது சார்..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

ஆமாம் ஐயா எனக்கும் வசப்படுத்த தெரியவில்லை. அற்புதம் ஐயா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி//

அருமை//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.
.

Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் //

/பதிவுலகம் பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் நிறைந்ததுதான்.//

நான் சொல்ல நினைத்ததை மிகச் சரியாக
பின்னூட்டமாகக் கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Athisaya //

மிக மிக அருமை ஐயா,இதை விட வேறேதும் சொல்ல இயலவில்லை.வாழ்த்துக்கள் ஐயா..சந்திப்போம்//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி..

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி..

.

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

மிகவும் அருமையாக சொல்லிட்டீங்க.//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி..

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //
.
என் எழுத்து சரியாகச் சென்றடைவதில்லையோ என்று பலமுறை எண்ணியதுண்டு. ஒரு வாசகனாவது சரியாகப் புரிந்து கொள்கிறான் என்றால் எழுதுவது வீணானது போல் தோன்றுவதில்லை. என் மன ஓட்டம் உங்கள் பதிவில். நம்மில் யார் பிசிராந்தையார், யார் சோழன்.//..


எப்போதும் எழுதியவர் கோப்பெரும்சோழன்தான்
வாசிப்பவர் பிசிராந்தையார்தான்
ஒருவருக்குள்தான் இருவரும்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

r.v.saravanan said...

ரொம்ப அருமையா இருக்கு சார் கவிதை

Yaathoramani.blogspot.com said...

r.v.saravanan //

ரொம்ப அருமையா இருக்கு சார் கவிதை
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி..

கோமதி அரசு said...

காடுமலைகடந்துஎங்கோ
முத்தின்அருமைதெரிந்த
முகமறியாஒருவன்
இருப்பான்என்கிறநம்பிககையில்
வார்த்தைமூடியஅநுபவங்களை
கவிதைகளாக்கிநம்பிக்கையுடன்
காற்றில்விதைத்துவைக்கிறேன்நான்//

விதைத்து வையுங்கள், விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவது இல்லை. என்ற பழமொழி உள்ளது.
கவிதை அருமை.

இராஜராஜேஸ்வரி said...

கோப்பெரும்சோழனும் பிசிராந்தையாரும்
நம்பிக்கையூட்டிப்போகிறார்கள் அனைவருக்கும் !

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு//

விதைத்து வையுங்கள், விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவது இல்லை. என்ற பழமொழி உள்ளது.
கவிதை அருமை.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி..

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

கோப்பெரும்சோழனும் பிசிராந்தையாரும்
நம்பிக்கையூட்டிப்போகிறார்கள் அனைவருக்கும் !//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி..

Post a Comment