Thursday, January 31, 2013

பொருள் என்பதற்கான பொருள்

பொருட்களின்
 பயன்பொறு த்து
அதன் பயன்பாடுபொறு த்து
 புனிதம் பொறு த்து
அதனதன் இடத்தில்
அந்த  அந்தப் பொருட்களை
தன் செயல்களுக்கு  உதவும்படி
வைப்பதுவும்
தன் வளர்ச்சிக்கு  அதனை
முறையாகப் பயன்படுத்துவதுவே
புத்திசாலித்தனம்

 மாறாக
 இடம் மாற்றிவைப்பது
குழப்பத்தை மட்டுமல்ல
கால விரயத்தை மட்டுமல்ல
பொருட்களின் பயன்பாட்டை மட்டுமல்ல
அந்தப் பொருளையே கூட
அதிகம் பாதிக்கக் கூடும்
அதன் மதிப்பையே கூட
முற்றாக அழிக்கக் கூடும்

ஆயினும்
பொருட்களுக்கு
கூடுதல்  இடத்தையும்
 எல்லா  இடத்தையும்
கொடுத்துவிட்டு
இடமின்றித் திரிவதும்
தடுமாறித்  தவிப்பதுவும்
நிச்சயம் புத்திசாலித்தனமில்லை

பொருள் என்பதற்கான பொருள்
கார் சாவி, செருப்பு ,பேனா எனத்தான்
இருக்கவேண்டுமா என்ன ?
அது ஜாதி மதம் அரசியல்
எனக் கூட
இருக்கலாம்தானே !

20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படித்தான் நமக்காகவோ, பிறர் சொல்வதற்காகவோ விரும்பி பல பொருட்களை, அந்தந்த சமயத்தில் வாங்கி வைத்துக் கொண்டு, சுத்தம் செய்ய மறந்து விடுகிறோம்... (இடம் : மனம், பொருள் : குப்பைகள்)

உஷா அன்பரசு said...

//பொருள் என்பதற்கான பொருள்
கார் சாவி, செருப்பு ,பேனா எனத்தான்
இருக்கவேண்டுமா என்ன ?
அது ஜாதி மதம் அரசியல்
எனக் கூட
இருக்கலாம்தானே !// - நல்ல பொருள் ஐயா!

சசிகலா said...

பொருள் என்பதற்கான பொருள் விளங்கியது ஐயா.

Ranjani Narayanan said...

பொருள் என்பதற்கான புதிய 'பொருள்' விளங்கியது!
அர்த்தமுள்ள கவிதை ரமணி ஸார்!

ADHI VENKAT said...

கருத்துள்ள கவிதை.

G.M Balasubramaniam said...


எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. பதிவைப் படித்ததும் நினைவுக்கு வந்தது எழுதி விட்டேன்.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பொருள் பொதிந்த கவிதை! நன்றி!

Unknown said...

பொருள்' புதைந்த வரிகள் !

நன்று..வாழ்த்துக்கள்!

முனைவர் இரா.குணசீலன் said...

உண்மை

சேக்கனா M. நிஜாம் said...

பொருளின் பொருளா

விளக்கம் அருமை !

தொடர வாழ்த்துகள்...

vimalanperali said...

நல்ல கவிதை.கனம் உரைக்கிறது கவிதையில்/வாழ்த்துக்கள்.

கே. பி. ஜனா... said...

மிக நல்ல ரசித்தேன் கவிதையை.

Muruganandan M.K. said...

கனதியான கருத்துடன்
இனிய கவிதை

RajalakshmiParamasivam said...

அர்த்தம் பொதிந்த கவிதை , ரமணி சார்.

ராஜி

அருணா செல்வம் said...

அருமையான பொருள் பொதிந்த கவிதை இரமணி ஐயா.
த.ம.7

மாதேவி said...

"இடமின்றித் திரிவதும் தடுமாறித் தவிப்பதும்..... முடிவு அருமை.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பொருள் தான்.

அனைவரும் அறிந்து கொண்டால் சுகமே!

த.ம. 8

கவியாழி said...

பொருத்தமான பொருளா சொன்னீங்க

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் கருத்தினை கீழே கண்டவாறு பிரித்து பொருள் கொண்டேன்.

// கார் சாவி, செருப்பு ,பேனா, ஜாதி, மதம், அரசியல் பொருட்களுக்கு கூடுதல் இடத்தையும், எல்லா இடத்தையும் கொடுத்துவிட்டு, இடமின்றித் திரிவதும், தடுமாறித் தவிப்பதுவும் நிச்சயம் புத்திசாலித்தனமில்லை //

நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை என்பதுதான் உட்பொருள் என்று நினைக்கிறேன்.

Unknown said...

கடைசி வரி நச் சார்......சில நேரங்களில் மனிதர்கள் கூட பொருள் ஆகின்றனர் !!

Post a Comment