Monday, July 8, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவோடி ( 19 )

வாழ்வில் சில சமயங்களில் நாம் எதிர்கொள்கின்ற
கேள்விகள் பதில்களை எதிர்பார்க்காதவைகளே
அதனுள்ளேயே மிகச் சரியான
பதில்களைக் கொண்டவைகளே

கணேசனின் கேள்வியும் அத்தகையதுதான்
என்பதால் நான் பதிலேதும் சொல்லவில்லை
அவனே தொடர்ந்தான்

"டாக்டர்கள் எவ்வளவுதான் மறைச்சும்
நம்பிக்கையூட்டும்படியாகப் பேசினாலும்
அவங்க என்னோட நோயின் தீவிர பாதிப்பை
மிகச் சரியாகக் கணித்துவிட்டார்கள் என்பதுல
எனக்கு சந்தேகமில்லடா.

முட்டாள்தனமான நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு
பின் அவதிப்படுவதற்குப் பதிலா அவநம்பிக்கையில்
முழுமையான நம்பிக்கை வைச்சு அதைத் தொடர்ந்து
செய்ய வேண்டியவைகளை மிகச் சரியாகச்
செய்றதாக முடிவெடுத்துவிட்டேன்

எனக்கே நான் மூன்று மாசத்தை டெட் லைனாக
வைச்சுக்கிட்டு எதை எதை அதுக்குள்ளே
நான்  இருந்து அவசியம் செய்ய வேண்டுமோ
அதையெல்லாம் தாமதம் செய்யாமல்
இன்று புதிதாய்ப் பிறந்தஉற்சாகத்தோடு மட்டுமில்லாம
இன்றே போய்ச்சேரப் போகிற மனோபாவத்தோடும்
செய்றதாக தீமானிச்சுட்டேன்

இப்படி ச் செய்யறதாலே
மூன்று மாசங்களுக்குப் பின்னால் நான் இருந்தா
எனக்கு நஷ்டம் ஏதும் இல்லை.லாபம்தான்
நான் இல்லையானா நிச்சயம் அதனால
இருக்கிறவங்களுக்கு லாபம்தான் "என்றான்

இப்படி அனைத்திலும் ஒரு தீர்மானமான முடிவுடன்
இருப்பவனிடன் நான் என்ன பேசுவது ?
கேட்டுக் கொண்டிருப்பதைவிட வேறு வழி எனக்குத்
தெரியவில்லை

சிறிது மௌனத்திற்குப் பின் அவனே தொடர்ந்தான்

"முதல் வேலையா டாக்டர்கிட்டே மூணு மாசத்துக்கு
மெடிகல் சர்டிஃபிகேட் வாங்கினேன். அதை ஆபீஸில்
கொடுத்துவிட்டு அப்படியே என்னுடய
 ரிட்டெயர்மெண்ட்டெத் பெனிஃபிட் நாமினேசனை
அப்பா பேரில் இருந்து மனைவி பேருக்கு மாத்திட்டு
 செர்விஸ் ரெஜிஸ்டரை தரோவா செக் பண்ணினேன்.
ரெண்டுசர்விஸ் வெரிஃபிகேசன் விட்டு இருந்தது
அ தைச்  சரி பண்ணினேன்

எதுக்கும் இருக்கட்டும்னும் ஜி பி எஃப் யில் ஒரு
முக்கால் சதவீத லோனுக்கு அப்பளை பண்ணினேன்
ஆபீஸைப் பொருத்தமட்டில் ஓரளவு எல்லாம் ஓ கே

அடுத்து வெளியே ஃபைனான்ஸ் விஷயம்
நான் அஞ்சும் பத்துமா வெளியே தர
வேண்டியவங்களுக்குஎல்லாம் தந்து முடிச்சிட்டேன்,
இனி எனக்கு வரவேண்டியதை
சரி செய்ய வேண்டியதுதான் பாக்கி.
சின்னத் தொகையைப்பத்திப் பிரச்சனையில்லை
.மூணு மாசத்திலே வாங்கிக்கலாம்
பெரிய தொகை ஒண்ணு என் நண்பன் கிட்டே இருக்கு
அவன் வீடு கட்டிக்கிட்டு இருக்கான்,அதுக்காக
 கைமாத்தாவட்டியில்லா கடனா வாங்கினான்
,நான் அடுத்த வருடம்வீடு கட்டும்போது
 டபுளா அவன் கடன் தருவதாப் பேச்சு
இப்பத்தான் இப்படி ஆகிப்போச்சே

ஆகையினாலே கிரஹப் பிரவேசம் முடிந்ததும்
கடன் கொடுத்த தொகையை உன்கிட்டே
கொடுக்கும்படியும்நான் இப்போது அவசரம்
என்பதால் உங்கிட்டே வாங்கிட்டதாகவும் சொல்லி
 உன் பேருக்கு ஒருபத்து ரூபா பத்திரத்திலே
எழுதிக் கொடுக்கும்படியா சொல்லி இருக்கேன்
.அவனும் சரின்னு சொல்லி இருக்கான்
இப்போ அதை வாங்கத் தான் போறோம் "என்றான்

நான் மௌனமாய் தலையாட்டினேன்

"ஆபீஸிலே கல்யாணம் ஆன உடனே நாமினேஷனை
மாத்தி இருக்கணும்,அப்ப அப்ப வருஷா வருஷம்
சர்விஸ் ரெஜிஸ்டெரை  செக் பண்ணி இருக்கணும்
எல்லாம் பாத்துக்கிரு வோம்ன்னுதா ன்பதினைந்து
வருஷமா எவ்வளவு அசால்ட்டா  இருந்திருக்கேன்

ஆபீஸில் கூடத் தேவலாம்டா இரண்டு நாளில்
சரி செய்துட்டேன், குடும்ப விஷயத்தில தான்
நிறைய விஷயங்களைச் செய்யாமல் விட்டு
எல்லோரையும் போல எவ்வளவோ
குழப்பி வைச்சுருக்கேன்.அதை இரண்டு மாசத்திலே
நோய் கடுமையாகறதுக்குள்ளேசரிப்படுத்தணும்டா
அதையும் ஆபீஸ் விஷயத்தைப்போல சரிபண்ணிட்டா
எனக்குப்  நிச்சயம் சாவுப்பயம்  இல்லாம போயிரும்டா

நானும் தைரியமா எமனோட விளையாட உறவாட
முடிஞ்சா மார்க்கண்டன் மாதிரி மல்லுக்கட்டக் கூட
தயாராயிருவேண்டா " என்றான்தைரியமாக

எனக்குத்தான்   உதறல்  கூட ஆரம்பித்தது

(தொடரும் )

30 comments:

Avargal Unmaigal said...

நண்பர் எடுத்த முடிவுகள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன. தான் போனாலும் தன்னை நம்பி இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற அவர் நினைப்புகள் ஆச்சிரியப்பட வைக்கின்றன. இதனை நம் அரசியல் தலைவர்கள் பின்பற்றினால் மிக சிறப்பாக இருக்குமல்லவா அவர்கள் செய்வார்களா?

வை.கோபாலகிருஷ்ணன் said...

நண்பர் எடுத்த முடிவுகள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன. தான் போனாலும் தன்னை நம்பி இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற அவர் நினைப்புகள் ஆச்சிரியப்பட வைக்கின்றன.

முடிவு காலம் நெருங்கிவிட்டது என்பது தெரிவதிலும் இதுபோன்ற ஓர் இலாபம் இருக்கவே செய்கிறது என்பதை அனைவரும் உணர முடிகிறது.

எல்லோருமே யோசிக்க வேண்டிய ஓர் விஷயம் தான் இவை. யாருக்கு எது எப்போது நடக்கும் என்பது தெரியாத விசித்திர உலகம். எதுவும் யாருக்கும் சாஸ்வதம் [நிரந்தரம்] இல்லை தான்.

தொடருங்கள்.

துளசி கோபால் said...

ரொம்ப அருமையா சிந்திச்சு ப்ளான் செஞ்சுருக்கார்!!!

mohan baroda said...

Tears in my eyes and I do not know the reason for the same.

ராஜி said...

அவர் தெளிவா இருக்கார், அவர் நண்பரைப் போல நமக்குதான் கலக்கமா இருக்கு.

Unknown said...

தொடருங்கள்!!!!!

Anonymous said...

''..எனக்குத்தான் உதறல் கூட ஆரம்பித்தது..''
Vetha.Elangathilakam.

sathishsangkavi.blogspot.com said...

நண்பரின் முடிவு நல்ல முடிவு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

-ரைட்டு....

தி.தமிழ் இளங்கோ said...

// நானும் தைரியமா எமனோட விளையாட உறவாட
முடிஞ்சா மார்க்கண்டன் மாதிரி மல்லுக்கட்டக் கூட
தயாராயிருவேண்டா " என்றான்தைரியமாக //

தாங்கள் இந்த தொடருக்கு தலைப்பை ” எமனோடு விளையாடி எமனோடு உறவோடி” – என்று ஏன் வைத்தீர்கள் என்பதற்கு, இப்போதுதான் விடை கிடைத்துள்ளது.

G.M Balasubramaniam said...


எனக்கு என் வாழ்வில் நடந்த விஷயம் , ஏற்கனவே பதிவில் பகிர்ந்திருக்கிறேன்.என் இள வயதில் தந்தை மறைந்த பின் ஒரு பெரிய குடும்பப் பொறுப்பு எனக்கு வந்தது,.அந்நேரத்தில் ஒருவர் என் கை பார்த்துக் குறி சொன்னவர் எனக்கு நாள் குறித்துவிட்டார். சொன்ன மற்ற விஷயங்கள் சரியாயிருந்ததால் நான் அந்த ஜோசியத்தை நம்பினேன். தந்தை போன நிலையில் நானும் போய்விட்டால்குடும்பம் அவதிக்குள்ளாகும் என்று அதை ஓரளவு சரிகட்ட ரூ.25000/ -( அப்போது அதுபெரிய தொகை )இன்சூரன்ஸ் எடுத்தேன்,சில மாதங்கள் ப்ரீமியம் செலுத்தி பிறகு முடியாமல் போய் அதுவும் லாப்ஸாகி விட்டது. நடந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. நான் இன்றும் நலமாய் இருக்கிறேன்.
ஒவ்வொரு நாளும் எல்லோரும் புதிதாகப் பிறக்கிறோம். இன்றைய பொழுதை நலமாகக் கழிப்போம்.

அருணா செல்வம் said...

உங்களின் நண்பருக்கு மனோதைரியம் அதிகம் இரமணி ஐயா.
தொடருகிறேன்.

மனோ சாமிநாதன் said...

இப்படித்தான் இருக்கும் முடிவு என்று தெரிந்து விட்டால் ஒரு வேலை இப்படிப்பட்ட ஞானோதயம் மனதில் ஏற்பட்டு விடுமோ என்னவோ!!

Unknown said...

ஹலோ அண்ணா,

ரொம்ப நாட்களுக்கு பிறகு இன்று உங்களுடைய
எமனோடு விளையாடி எமனோடு உறவோடி
ஐ தொடர்ந்து படித்தேன் . அருமை . ஒரு நல்ல முடிவை எதிர்பார்த்து கொன்டிருக்கும் உங்கள்
Jai

வெங்கட் நாகராஜ் said...

அவர் தெளிவாகவே இருக்காரு.......

தொடருங்கள் நானும் தொடர்கிறேன்...

நிலாமகள் said...

முட்டாள்தனமான நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு
பின் அவதிப்படுவதற்குப் பதிலா அவநம்பிக்கையில்
முழுமையான நம்பிக்கை வைச்சு //

இறப்பு என்று என்பது தெரிவது ஒருவிதத்தில் நல்லது தான். உங்க கதை நாயகன் போலவே எங்க அம்மா வீட்டு எதிரில் ஒரு அண்ணன் இருந்தார். நினைத்து நினைத்து அதிசயிப்பேன். இப்படியும் பலர் இருக்கின்றனர் போலும். விவேகமான மனிதர் தான்!

MANO நாஞ்சில் மனோ said...

நமக்குப் பிறகும் மற்றவர்கள் நல்லா இருக்க வேண்டும் என்ற மனசு, நல்லவொரு மனசு.....

கீதமஞ்சரி said...

திடீரென்று ஒரு குடும்பத்தலைவன் இறந்துவிட நேர்ந்தால் அந்தக் குடும்பம் தலைவனை இழந்து பரிதவிப்பதோடு, அடுத்தென்ன செய்வது என்று குழம்பிப்போயிருக்கும். அதை உணர்ந்து முன்கூட்டியே திட்டமிடும் நண்பரின் மன உறுதி அசாத்தியமானது.

கவியாழி said...

நானும் தைரியமா எமனோட விளையாட உறவாட
முடிஞ்சா மார்க்கண்டன் மாதிரி மல்லுக்கட்டக் கூட
தயாராயிருவேண்டா //எவ்வளவு நம்பிக்கை ? மனதைரியம்?

சக்தி கல்வி மையம் said...

எனக்கும் கொஞ்சம் உதரளாதான் இருக்கு ..

ADHI VENKAT said...

நண்பர் சரியாத்தான் செய்திருக்கிறார்.... ஒவ்வொருவரும் தனக்கு பிறகு தன் குடும்பத்தின் நிலையை நினைத்தால் நன்றாக இருக்கும்..

”தளிர் சுரேஷ்” said...

யோசித்து எடுக்கப்பட்ட சரியான முடிவுகள்! திடமான மனதுடன் சிறப்பான முடிவுகளை எடுத்துள்ளார்! பகிர்வுக்கு நன்றி!

தனிமரம் said...

தீர்க்கமான முடிவு எடுக்கும் திறமையான நணபர் கிடைத்து இருப்பது சந்தோஸம்! தொடர்கின்றேன்.

அப்பாதுரை said...

ஆரோக்கியமான சிந்தனையின் பலன் அவசியமான முடிவுகள். மேலுமறிய ஆவல்.
/அவநம்பிக்கையில் முழுமையான நம்பிக்கை வைச்சு
இதென்ன?

கரந்தை ஜெயக்குமார் said...

நண்பரின் வாழ்வியல் யதார்த்த சிந்தனை வியக்க வைக்கின்றது. என்னவொரு தெளிவான சிந்தனை. தொடருகிறேன் அய்யா

கோமதி அரசு said...

இப்படி ச் செய்யறதாலே
மூன்று மாசங்களுக்குப் பின்னால் நான் இருந்தா
எனக்கு நஷ்டம் ஏதும் இல்லை.லாபம்தான்
நான் இல்லையானா நிச்சயம் அதனால
இருக்கிறவங்களுக்கு லாபம்தான் "என்றான்//
உங்கள்நண்பர் சொல்வது உண்மை தான்.
நல்ல முடிவு எடுத்து இருக்கிறார்.
சில விஷயங்களை முடிவு எடுக்க வேண்டிய ஒரு கட்டம் எல்லோர் வாழ்விலும் வரும் என்பதை சொல்கிறது உங்கள் நண்பரின் தீர்மானம்.
எத்தனை குடும்பங்களில் திடீரென்று குடும்பதலைவன் இறந்து விட ,அந்த குடும்பம் மாலுமி இல்லாத கப்பலாய் தத்தளித்து இருக்கிறது.
அப்படி தன் குடும்பம் கஷ்டப்படக் கூடாது என்று உங்கள் நண்பர் நினைக்கும் நினைப்பு நல்லது தான்.

Ranjani Narayanan said...

எல்லாமே நல்லபடியாக முடிய வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

திண்டுக்கல் தனபாலன் said...

அவரின் நல்ல மனதிற்கு அனைத்தும் நல்லபடியாக நடக்கும்...

மாதேவி said...

அவரின் முன்செயல்பாடுகள் நன்று.

எங்கள் மனம்தான் திகைத்து நிற்கின்றது.

Seeni said...

kalanguthayyaa...

Post a Comment