காக்க வைத்து தவிக்க விட்டுப்
பார்த்து ரசிப்பதில்-பின்பு
சேர்த்து நிறையக் கொடுத்து நம்மைக்
கிறங்க வைப்பதில்
தூக்கம் கெடுத்து விழித்து நம்மை
நினைக்க வைப்பதில்-எதிர்
பார்ப்பு இல்லா நேரம் நம்முள்
தானாய் நிறைவதில்
கைக்கு எட்டும் தூரம் இருந்தும்
எட்டித் திரிவதில்-கண்கள்
பார்க்க இயலா இடம் இருந்தும்
தெளிவாய்த் தெரிவதில்
ஈர்க்க வைத்துப் பித்தன் போல
அலைய வைப்பதில்-தானே
தேர்ந்த நல்ல அடிமைப் போலப்
பணிந்து நிற்பதில்
பார்க்கும் எதையும் தன்னைப் போல
தெரியச் செய்வதில்-நாம்
பார்க்கும் போது மட்டும் தன்னை
மறைக்க முயல்வதில்
கூர்மை யாக எண்ணிப் பார்க்க
கவிதைப் பெண்ணுமே -நாம்
தேர்ந் தெடுத்த நண்பி(மனைவி ) தன்னை
நினைவில் நிறுத்துமே
பார்த்து ரசிப்பதில்-பின்பு
சேர்த்து நிறையக் கொடுத்து நம்மைக்
கிறங்க வைப்பதில்
தூக்கம் கெடுத்து விழித்து நம்மை
நினைக்க வைப்பதில்-எதிர்
பார்ப்பு இல்லா நேரம் நம்முள்
தானாய் நிறைவதில்
கைக்கு எட்டும் தூரம் இருந்தும்
எட்டித் திரிவதில்-கண்கள்
பார்க்க இயலா இடம் இருந்தும்
தெளிவாய்த் தெரிவதில்
ஈர்க்க வைத்துப் பித்தன் போல
அலைய வைப்பதில்-தானே
தேர்ந்த நல்ல அடிமைப் போலப்
பணிந்து நிற்பதில்
பார்க்கும் எதையும் தன்னைப் போல
தெரியச் செய்வதில்-நாம்
பார்க்கும் போது மட்டும் தன்னை
மறைக்க முயல்வதில்
கூர்மை யாக எண்ணிப் பார்க்க
கவிதைப் பெண்ணுமே -நாம்
தேர்ந் தெடுத்த நண்பி(மனைவி ) தன்னை
நினைவில் நிறுத்துமே
23 comments:
வணக்கம்
ஐயா.
கவிதையின் ஒவ்வொரு வரிகளும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
த.ம 2வது வாக்கு
-நன்றி--
-அன்புடன்-
-ரூபன்-
கவிதைப் பெண்ணை கண்டு ரசித்தேன் ,காதல் நண்பியையும் பார்த்தால்தான் எனக்கு ராத்திரி நல்லாத் தூக்கம் வரும் !
த ம 3
அருமை.
அருமை.
Bagawanjee KA said...//
கவிதைப் பெண்ணை கண்டு ரசித்தேன் ,காதல் நண்பியையும் பார்த்தால்தான் எனக்கு ராத்திரி நல்லாத் தூக்கம் வரும் !
இப்போது தூக்கம் வரும் என நினைக்கிறேன்
ரசித்தேன் ஐயா...
அருமையான உணர்வுகளின் அழகான வார்த்தைப் படப்பிடிப்பு அய்யா.
“நாம் பார்க்கும் போது மட்டும் தன்னை
மறைக்க முயல்வதில்“ இதைத்தானே வள்ளுவர், ஏதிலார் போலப் பொதுநோக்கு என்றும், யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் என்றும் சொல்லிவச்சாரு.. எத்தனை யுகத்து நாடகமிது!
மிகவும் ரசித்தோம் சார்!
tha.ma.
கவிதையைக் காதலி போல நேசித்தால்
இ்ப்படி தான் தோன்றும் போல.....
அருமையான உள்ளார்ந்த கரு இரமணி ஐயா. மிகவும் இரசித்தேன்.
ரசித்தேன்
ஐயா
நன்றி
தம 8
//பார்க்கும் எதையும் தன்னைப் போல
தெரியச் செய்வதில்-நாம்
பார்க்கும் போது மட்டும் தன்னை
மறைக்க முயல்வதில்
.//
அருமை! அருமை! நன்றி ஐயா!
அருமையான கவிதை. ரசித்தேன்.
Both cases similar in many qualities/
ஈர்க்க வைத்துப் பித்தன் போல
அலைய வைப்பதில்#
கொஞ்சம் ஏமாந்தால் பித்தனாக அலையவிட்டுவிடும் ....ஓ! பெண்ணும் கவிதையும் ஒன்று தானோ ? இது என்ன சிலேடை நயமா?...
கனவும் நினைவும் ஒன்றேதான் -நல்
கவிதைப் பெண்ணவள் நன்றேதான்
தினமும் வருவாள் உம்மிடமே-உடன்
தேடித் தருவீர் எம்மிடமே!
மனமே ஏங்கிட வழிபார்த்து -எம்
மயக்கம் நீங்கிட உளமார்த்து
நினைவில் என்றும் வாழ்வாளே-எழில்
நிலவின் ஒளியாய் சூழ்வாளே!
கனவும் நினைவும் ஒன்றேதான் -நல்
கவிதைப் பெண்ணவள் நன்றேதான்//ஆமோதிக்கிறேன் அய்யா
கவிதை பெண் - அவள்
நடை கொண்டு - தங்கள்
பாவழகில் தலைநீட்டுகிறாள்!
அருமை! வாழ்த்துக்கள் ஐயா!
கனவு நினைவாகும்போதும், நினைவு கனவாகும்போதும் அதன் தாக்கம் சூழலைப் பொறுத்தே அமையும். அதற்கு மனம் உறுதுணையாக இருக்கவேண்டும். இல்லையேல் பாதிப்பு நமக்குத்தான்.
Arumai sir..... netru ungalai santhithathil magilchi !
கவிதை பெண் அருமை.
Post a Comment