Wednesday, October 22, 2014

சம நிலை

சம நிலை தவறுகையில்தான் எல்லாம்
தாறுமாறாய்ப் போய்த் தொலைக்கிறது

யாருக்காக யாரை இழப்பதில்
என்கிற குழப்பத்தில்
இழக்கக் கூடாதவரை இழந்து
இழக்கவேண்டியவரை
இழுத்து அணைத்துக் கொள்கிறோம்

எதனை எதற்காக இழப்பது
என்கிற குழப்பத்தில்
இழக்கக் கூடாததை இழந்து
இழக்கவேண்டியதை
இழுத்துப் பிடித்துக் கொள்கிறோம்

போதையில் காமப்பசியில்
கோபத்தில் அதீத ஆசையில்
ஜாதி மத அரசியல் வெறியில்
சம நிலை தவறும் சாத்தியக் கூறுகள்
மிக மிக அதிகம் என்பதால்..

சம நிலை தவறுகையில்தான் எல்லாம்
தாறுமாறாகத்தான் போய்த்
தொலைக்கிறது என்பதால்

சம நிலை தவறச் செய்பவைகளைக்
கொஞ்சம் தள்ளியே வைக்கப் பழகுவோம்

சமநிலை பராமரித்தலே வாழ்வை
அர்த்தப்படுத்தும் என் உணர்ந்து தெளிவோம்

13 comments:

இளமதி said...

சமநிலை தவறினால் சரிந்திடும் அத்தனையும்!..

அருமையான சிந்தனை! சிறப்பான வரிகள் ஐயா!

வாழ்த்துக்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

யாருக்காக யாரை இழப்பதில்
என்கிற குழப்பத்தில்
இழக்கக் கூடாதவரை இழந்து .............//

அருமை. மிகவும் உண்மை.

பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

Yarlpavanan said...

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

ஸ்ரீராம். said...

தேவை எதுவென்று முடிவு செய்வதில் குழப்பம்! :))

ரிஷபன் said...

இழக்கக் கூடாததை இழந்து
இழக்கவேண்டியதை
இழுத்துப் பிடித்துக் கொள்கிறோம்// உண்மை.

Anonymous said...

சமநிலை பராமரித்தலே வாழ்வை
அர்த்தப்படுத்தும் என் உணர்ந்து தெளிவோம்
Vetha.Langathilakam

தி.தமிழ் இளங்கோ said...

உலகம் சமநிலை பெற வேண்டும் என்ற தங்கள் எண்ணம் நிறைவேற வேண்டும்!
த.ம.4

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான கவிதை! கருத்து அருமை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா அற்புதம்
சமநிலையில் வாழ்வோம்
தம 5

Unknown said...

#போதையில் காமப்பசியில்
கோபத்தில் அதீத ஆசையில்
ஜாதி மத அரசியல் வெறியில்#
இந்த பட்டியலில் தீவிரவாதத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் !
த ம6

வெங்கட் நாகராஜ் said...

பல சமயங்களில் தேவை எது என்பதை முடிவு செய்வதில் குழப்பம் தான்.....

நல்ல கவிதை.

த.ம. +1

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல கருத்துள்ளக் கவிதை! அற்புதமான கருத்துக் கூட!

ஆம் பல சமயங்களில் நமது புத்தி தடுமாறத்தான் செய்கின்றது, சமநிலை தவறிக் குழப்பம் ஏற்படத்தான் செய்கின்றது!

நமக்கு எது தேவை என்று நிர்ணயம் செய்வதில் ஏற்படும் தடுமாற்றம்! பல சமயங்களில் வாழ்வையே புரட்டித்தான் போடுகின்றது!

மிக அருமை! சம நிலை பெறக் கற்போம்!

மோகன்ஜி said...

அருமையான சிந்தனை வரிகள் ரமணி சார்!
//சம நிலை தவறுகையில்தான் எல்லாம்
தாறுமாறாகத்தான் போய்த்
தொலைக்கிறது//
நிதர்சனமாய் எங்கெங்கும் இதற்கு எடுத்துக் காட்டுகள் காணக் கிடைக்கிறதே!

Post a Comment