Sunday, November 30, 2014

அம்மணமான ஊரில் ஆடை எதுக்கு ?

நல்லதை நீ
நல்லவிதமாகச் சொல்கிறாயா ?

நீ நிச்சயம் பத்தாம்பசலி

தீயதை நீ
எரிச்சலூட்டும்படியே சொல்கிறாயா

நீ நிச்சயம் அடிமுட்டாள்

பயனுள்ளதை நீ
சுவாரஸ்யமின்றிச் சொல்கிறாயா

நீ அரை வேக்காடு

பயனற்றதை நீ
ரசிக்கும்படிச் சொல்கிறாயா

நீயே இந்தயுகத்தில்
தலைசிறந்தப் படைப்பாளி

பொழுது போக்குதலே கடமையாகிப் போன
போதை ஒன்றே கொண்டாட்டம் என ஆகிப் போன
சேர்ந்து குடிப்பவனே நண்பன் என ஆகிப் போன
பிரபலமாவதே வெற்றியென ஆகிப் போன

இந்தச் சமூகச் சூழலில்

சமூகத்தைப் பிரதிபலிப்பதுதானே
ஜனரஞ்சக படைப்பாய் இருக்கச் சாத்தியம்

நூலைப் போலச் சேலை இருக்கத்தானே
நூற்றுக்கு நூறு  நிச்சயம் சாத்தியம்

Saturday, November 29, 2014

சீமைக் கருவேல மரங்களின் தீமைகள்

சகோதர சகோதரிகளே !

சீமையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல
பண்பாட்டு மற்றும் கலாச்சாரச் சீரழிவுகளை விட
அதிகமான சீரழிவுகளைத் தருவது
வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
இந்த விஷச் சீமைக்கருவேல மரங்களே

இந்தச் சீமைக் கருவேலமரங்கள் சுற்றுப் புறச்
சூழலுக்கு ஏற்படுத்தி வரும் அதிகமான
பாதிப்பைக் கொண்டேஅமெரிக்க தாவரவியல் பூங்கா
"வளர விடக் கூடாத நச்சு மரப் பட்டியலில் "
இந்த கருவேல மரத்தைப் பட்டியலிட்டதோடு
அதை ஒழிப்பதற்கான தீவிர பிரச்சாரத்தையும்
செய்து வருகிறது

அதன்படி

1 )இது எந்த வித வறட்சியான சூழலிலும்
  வளரவும் விரைந்து பரவவும் கூடிய விஷச் செடி

2 )பூமியின் அடி ஆழம் சென்று நிலத்தடி நீரை
  உறுஞ்சுவதோடு மட்டுமல்லாது,காற்றிலுள்ள
  ஈரப்பசையையும் உறிஞ்சி, தான் வளகிற
  பகுதியையே வறட்சிப் பகுதியாக
  மாற்றிவிடும் கொடூரத்தனமை கொண்டது

3 )இந்த மரத்தின் இலை காய் விதை எதுவும்
    எதற்கும் பயன்படாதவை மட்டுமல்ல
    பயன்படித்தினால் தீங்கு
    விளைவிக்கும் தன்மையும் கொண்டவை

4 )இதனை விறக்குக்காக எரிக்கையில் ஏற்படும் புகை
   ஆஸ்துமா மூச்சுத் திணறல் முதலான நோய்களை
   ஏற்படுத்தக் கூடியது

5 )இது மிகக் குறைந்த அளவு ஆக்ஸிஜனை
    உற்பத்தி செய்தாலும் அதிக அளவு கரிமில வாயுவை
    (கர்பன் டை ஆக்ஸைடை) வெளியேற்றுவதால்
    சுற்றுப் புறச் சூழல் அதிக விஷத்தன்மை
    உடையதாக மாறிப் போகிறது

6 )அதன் காரணமாக இதன் நிழலில் கட்டி வைக்கப் படும்
   கால் நடைகள் மலட்டுத் தனமை அடைவதோடு
   கரு அடைத்திருக்கும் பட்சத்தில் ஊனமான
   கன்றுகளை ஈனவும் செய்கின்றன்

இந்தத் தீமைகள் குறித்து மிகத் தெளிவா கப்
புரிந்துகொண்ட அதிக படிப்பறிவு விகிதத்தில் இருக்கிற
கேரள மாநில மக்கள்அரசின் ஒத்துழைப்போடு
அவர்கள் மா நிலத்தில்கருவேல மரங்களை
முற்றிலுமாக அழித்துவிட்டார்கள்
அதனாலயே அந்த மா நிலம் பசுமையான
இயற்கைச் சுழலை தொடர்ந்து பராமரிக்கமுடிகிறது

இந்தத் தீய விஷச் செடியின் தீமைகளை
முற்றிலும் அறிந்துஉச்ச நீதி மன்றமும் உடன் இந்த
கருவேல மரங்களைமுற்றிலும் அழிக்கும் படியான
அறிவுரையையும்உத்திரவையும் மா நில அரசுக்கும்
 உள்ளாட்சி அமைப்புகளுக்கும்வழங்கியுள்ளது

அதன் அடிப்படையில் நமது மாவட்ட ஆட்சித்தலைவர்
மதிப்பிற்குரிய  சுப்ரமணியம் அவர்கள் உலகின் சிறந்த
சேவை அமைப்பான அரிமா சங்கத்தின்
324 பி3 மாவட்டத்தின் ஆளுநர் லயன்.பி.ரகுவரன்
அவர்கள்ஏற்பாடு செய்திருந்த
மதுரை தல்லாகுளம் மாநகராட்சி நீச்சல் குளம் முதல்
 மா நகராட்சி வரை இருந்த கருவேலம்
புதர்களை முற்றிலுமாக வேரோடு அழிக்கும்
திட்டத்தைத் துவக்கிவைத்ததோடு மாவட்டத்தில்
இந்த விஷச் செடியை வேரோடு அழிப்பதற்கான
அனைத்து முயற்சிகளையும்
செய்து வருகிறார்

அதன் தொடர்சியாக மாவட்ட அரிமா சங்கமும்
தன் கிளை அமைப்புகள் மூலம் மதுரை திண்டுக்கல்
தேனி மற்றும் சிவகங்கை ரெவென்யூ மாவட்டங்களில்
பொது மக்களின் பூரண ஒத்துழைப்போடு
இதுவரை 10000 ஏக்கருக்கும் மேலாக இந்த கருவேலம்
மரத்தை வேரோடு அழித்ததோடு மட்டுமல்லாது
தொடர்ந்து அகற்றியும் வருகிறது

நமது வில்லாபுரம் புது நகர் குடியிருப்போர் சங்கமும்
தனது ஐந்து அம்சத் திட்டத்தில் முதல் திட்டமான
வாழ்விடங்களில் பாதுகாப்பை உறுதி செய்தல் என்கிற
அடிப்படையில் பகுதி முழுவதும்
கண்காணிப்புக் கேமிராக்களைப் பொருத்தி அதனை
காவல் துறையிடம் ஒப்படைக்க எடுத்துவரும்
நடவடிக்கையின் தொடர்சியாக..

தற்சமயம் சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்கும்
திட்டத்தின் அடிப்படையில் கருவேல மரங்களை
அடியோடு அழிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது

அதன் முதல் கட்டமாக சமூக விரோதிகளின்
கூடாரமாக இருந்த சமுதாயக் கூடம் மற்றும்
கட்டுமானக் கழக வெற்றிடங்களில் மண்டிக் கிடந்த
கருவேலம் புதர்களை பொது மக்களின் பங்களிப்போடும்
காவல்துறையின் முழுமையான ஒத்துழைப்போடும்
மிகக் குறிப்பாக ஆய்வாளர் திரு. சேதுமணிமாதவன்
அவர்களின் நல்வழிகாட்டுதலின் படியும்
முழுமையாக அகற்றி அவ்விடங்களை சீர்செய்துள்ளோம்




 


தாங்களும் இந்தச் சமுதாயப் பணியில் ஆத்மார்த்தமாக
முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வதோடு
தங்களால் முடிந்த பங்க்களிப்பையும் கொடுத்து
நம் பகுதியே மதுரை மாவட்டத்திலும்
அனைத்து நிலைகளிலும் நிம்மதியாக
வாழ்வதற்குகந்த பகுதி என்கிற தகுதியை அடைய
ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்

வாழ்த்துக்களுடன்

நிர்வாகிகள்
மதுரை வில்லாபுரம் புது நகர் குடியிருப்போர் நலச் சங்கம்

( இந்தக்  தீமையை அவரவர் பகுதிகளில் மக்களின்
ஒத்துழைப்போடு ஒழித்து தமிழகத்தையும்
ஒரு செழிப்பான பூமியாக மாற்ற
ஆவன செய்யவேண்டும் என்கிற அன்பான
கோரிக்கையோடு அதிகப் பட்சமாக
இந்தத் தகவலை அனைவரிடமும் கொண்டு செல்ல
எங்கள்  விழிப்புணர்வுப்   பேரணிக்கான நகலையே
தகவலுக்காக  பதிவு செய்திருக்கிறோம்

இதனை தங்கள் தளங்களில் பகிர்வு செய்ய வேணுமாய்
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் )

Friday, November 28, 2014

இதுவும் அதுவும் ஒன்னு தானே

ரோடெல்லாம்
துறுப்பிடித்த ஆனிகளைப்
பரப்புவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு

"ஜாக்கிரதையாக வண்டியோட்டுங்கள்
பாதையெல்லாம் துறுப்பிடித்த ஆனி "என
எச்சரிக்கைப் பலகை வைக்கும்
காவலர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?

ஊரெல்லாம்
மதுபானக் கடைகளைத் திறந்து
வைத்துவிட்டு

"குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு " என
எச்சரிக்கைப் பலகை வைத்து
பம்மாத்துக் காட்டும் அரசுக்கும்
இதற்கும் என்ன வேறுபாடாம் ?

குழந்தை தவழுமிடமெல்லாம்
விஷப்பாட்டில்களை திறந்து வைத்துவிட்டு
பாலையும் பிஸ்கெட்டையும்
எட்டத்தில் வைக்கிற தாயை
நீங்கள் பார்த்ததுண்டா ?

சந்து பொந்தெல்லாம்
சிகரெட்டும் குட்காவும்
கிடைக்கும்படியாக இருக்கவிட்டு

கல்வியையும் நீரையும்
விற்பனைக்கு என ஆக்கிவிட்டு
விட்டெத்தியாகத் திரியும்
அரசுக்கும் இதற்கும் என்ன மாறுபாடாம் ?

கரும் பலகையெல்லாம்
ஆபாசப் படங்களை
வரைந்து வைத்துவிட்டு

அதனைப் பார்த்துக்
கெட்டுப் போகாதே என எச்சரிக்கிற ஆசிரியரை
நீங்கள் சந்தித்ததுண்டா ?

ஊடகங்களிலெல்லாம்
ஆபாசங்கள் தலைவிரித்தாடுதலை
அனுமதித்து விட்டு

மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி
அறிவுறுத்தித் திரியும்
அரசுக்கும் இதற்கும் என்ன வித்தியாசமாம் ?

எது என்ன நடந்தாலும்
நடந்துவிட்டுப் போகட்டும் என
போதையில் வீதியில் கிடக்கும்
மனிதர்களை நீங்கள் பார்த்ததுண்டா ?

நாட்டில் எது நடந்தாலும்
நடந்துவிட்டுப் போகட்டும்
நாம் நம்மைக் காத்துக் கொள்வோம் என
சுயநலப் போதையில் திரியும்
பலருக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடாம் ?

Thursday, November 27, 2014

நதி மூலம் ரிஷி மூலம் ......

ஹோட்டலில் உணவை இரசித்து
உண்ணும் ஆசை இருக்கிறதா ?
தயவு செய்து  சமயலறையை
எட்டிப் பார்க்காதிருங்கள்
அதுதான் சாலச் சிறந்தது

ஒரு சிற் பத்தின் அற்புதத்தை
இரசித்து வியக்க ஆசை இருக்கிறதா ?
அதற்குச் சிற்பம் செதுக்குமிடம்
ஏற்ற இடமில்லை
கலைக் கூடமே சரியான இடம்

பெருக்கெடுத்தோடும் ஆற்றின்
அழகை இரசித்து மகிழ ஆசையா ?
அதற்கு உற்பத்தி ஸ்தானம்
சரிப்பட்டு வராது
விரிந்தோடும் மையப் பகுதியே அழகு

குழந்தையின் அழகை மென்மையை
தொட்டு ரசிக்க ஆசையா ?
அதற்குப் பிரசவ ஆஸ்பத்திரி
சரியான இடமில்லை
அது தவழத்துவங்குமிடமே மிகச் சரி

கவிதையின் பூரணச் செறிவை
ருசித்து மகிழ ஆசையா ?
அதற்கு கவிஞனின் அருகாமை
நிச்சயம் உசித மானதில்லை
தனிமையே அதற்கு யதாஸ்தானம்

நதி மூலம் ரிஷி மூலம் மட்டுமல்ல
எந்த மூலமுமே அழகானதுமில்லை
கற்பனை செய்தபடி நிஜமானதுமில்லை
அதனை அறிந்து தெளிந்தவனுக்கு
ஏமாற்றம் நேர்வதற்கு வாய்ப்பே இல்லை

( மனம் கவர்ந்த ஒரு படைப்பாளியை
நேரடியாகச் சந்திக்க விளைந்த ஏமாற்றம்
தந்த  சிந்தனை )

Wednesday, November 26, 2014

வரம்வேண்டா தவமாக

என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும் 
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை

வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணிகளும்
எனைப்பகையாய் நினைப்பதில்லை 

வரம்வேண்டா தவமாக
தினமெழுத்தில் கரைவதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

Tuesday, November 25, 2014

விளக்கம் கோரி ஒரு கேள்விக் கவிதை

நதியினுக்கு கரையிரண்டு உறவா பகையா ?
நாவினுக்கு பல்வரிசை உறவா பகையா ?
விழியினுக்கு இமையிரண்டு உறவா பகையா
விதியதற்கு மதியதுவே உறவா பகையா ?
மொழியினுக்கு சைகையது உறவா பகையா ?
கவியதற்கு இலக்கணமே உறவா பகையா ?
புரியாது புலம்புகிறேன் சொல்வாய் நண்பா

மனதிற்கு மறதியது அழகா குறையா ?
மங்கையர்க்கு இரக்ககுணம் அழகா குறையா ?
இனமதற்கு  தனித்தகுணம் அழகா குறையா ?
இயற்கைக்கு ஈகைக்குணம் அழகா குறையா ?
இளமைக்கு வேகமது அழகா குறையா ?
முதுமைக்கு நிதானமது அழகா குறையா ?
புலமைக்கு மிகைப்படுத்தல் அழகா குறையா ?
புரியாது தவிக்கின்றேன் புகல்வாய் நண்பா

அன்புக்கு அடிபணிதல் சரியா தவறா ?
அதிகாரம் தனைமறுத்தல் சரியா தவறா ?
பண்புக்கு துணைபோதல் சரியா தவறா ?
பகட்டுக்கு பகையாதல் சரியா தவறா ?
இன்பத்தில் மயங்காமை சரியா தவறா ?
துன்பத்தில் கலங்காமை சரியா தவறா ?
சந்தமதே இன்கவிதை சரியா தவறா ?
நல்லதொரு விளக்கமதை நவில்வாய் நண்பா?

Monday, November 24, 2014

ஆச்சாரியாரின் விபீஷண வேலையும் கலைஞரின் திருதராஷ்டிர அவஸ்தையும்

கலைஞர் அவர்களின்  இளமைக் காலம்

சமூகத்தில் புரையோடிக் கிடந்த
மூடத்தனங்களையும்முட்டாள்தனங்களையும்
தன் கூர்மிகு சொல்லாயுதங்களால்
வெட்டி வேரறுத்துக் கொண்டிருந்த காலம்

ஒரு சராசரி மனி தனைப்போல் குடும்பத்தின்
மீது மட்டும்அக்கறைகொள்ளாது சமூகத்தின் பால்
கூடுதல் அக்கறை கொண்டிருந்த
மிகச் சரியாகச் சொன்னால்
சமூகத்தின் மீதே அதிகஅக்கறை கொண்டிருந்த காலம்

அப்போது அவரின் மேடைப் பேச்சும் எழுத்தும்
மிகச் சரியாய்க்  குறிபார்த்து எய்யப்பட்ட ஈட்டியாய்
இலக்கைத் தாக்கி சின்னாபின்னப் படுத்திப் போன காலம்

அப்போது ஒரு திரைப்படத்தில் நயவஞ்சகம் குறித்துச்
சொல்லவேண்டிய இடத்தில்

 " அங்கேதான் மன்னா இருக்கிறது
ஆச்சாரியாரின் விபீஷண வேலை "

 என்கிற ஒருஅற்புதமான சொற்றொடரைப் பயன்படுத்துவார்

"கோயில்கள் கொடியோரின் கூடாரமாக
மாறிவிடக் கூடாதுஎன்பதற்காகத்தான்...

என்கிற அற்புதமான வாசகமும்

"எப்படி நோயுள்ளப் பெண்களைத் தொடுவதற்கு
டாக்டருக்கு உரிமை உண்டோ அதைப் போல
பக்தியுள்ளப் பெண்களைத் தொடுவதற்கு
பூசாரிக்கும் உண்டு"

என்கிற குயுக்தியான வாதமும் காலம்கடந்து என்றும்
பேசப்படக் கூடியது

என்ன செய்வது மாறுதல் ஒன்றே மாறாதது என்னும்
விஞ்ஞானப் பூர்வமான விதி அவரையும்
தலைகீழாக மாற்றிசமூகத்தின் பால்
கொண்டிருக்கவேண்டிய அக்கறையை
கூடுதலாக குடும்ப வாரிசுகளிடமும் மேலும்

தன் இனம் அழிந்தாலும் பதவியை கெட்டியாகப்
பிடித்துக் கொள்ளவேண்டி நடத்திய
உண்ணாவிரத நாடகமும்

எப்படியும் முதல் மற்றும் மூன்றாவது துணைவியாரின்
வாரீசுகள் மாட்டிக் கொண்டிருக்கிற
இடியாப்பச் சிக்கலில் இருந்துஅவர்களைக் காக்கவும்,
தனது இரண்டாவது மனைவியின்
வாரீசுகளின் பதவிப் போரை நிறுத்தி அவர்களை
எப்படியும்பதவிக் கட்டிலில் அமர்ந்திட வைத்திட
இந்தத் தள்ளாத வயதிலும்
ஓய்வெடுக்காது அவர் படுகிற பாடு நினைக்கையில்...

அவரைப் போலவே

"இந்தத் தள்ளாத வயதிலும் தன் குடும்ப வாரீசுகளை
பதவியில் அமர்த்தவும் தன் வாரீசுகளை இடியாப்பச்
சிக்கலில் இருந்து மாற்றவும் கலைஞர் படுகிற 
திருதராஸ்டிர அவஸ்தை.."

என்னும் புதிய சொற்றொடரை பயன்படுத்தலாமோ
எனப் படுகிறது

Sunday, November 23, 2014

முத்தப் போட்டியாளர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்

நல்லதோ கெட்டதோ பயனுள்ளதோ பயனற்றதோ
வித்தியாசமாக எதையும் செய்தால் உலகம்
தன்னை உற்றுப்பார்க்கும்  (எப்படி பார்க்கும்
என்பது குறித்து உங்களுக்கு அக்கறையில்லை என்பது
எங்களுக்கும் தெரியும்  ) என்னும் ஒரு பித்தல்லாட்ட
 எண்ணத்தில்நம்பிக்கை கொண்டவர்கள் செய்யும்
 அட்டகாசமே உங்களின்இந்த முத்தப் போட்டியென்பது பெரும்பாலோனோரின் அபிப்பிராயம்.

பேண்டுக்கு மேல் ஜட்டி போட்டால்  சூப்பர் மேன்
,சட்டைக்கு மேல் பிரா போட்டால் தேவதைகள்
என ஆவ போல

வீட்டுக்குள் செய்ய வேண்டியதை வெளியில் செய்தால்
தாங்கள் அறிவு ஜீவிகள் எனக் காட்டிக் கொள்ளலாம்
என நினைக்கும்  உங்களைப் போலுள்ள முட்டாள்களின்
மூளையில் விளைந்த விஷப்பயிரே இது

கார்த்திகை மாதத்தில் காம வெறிபிடித்து ரோட்டில்
ஒன்றுக்குப் பத்து என்கிற கணக்கில்
எச்சில் வழிந்தபடித் திரியும் தெரு நாய்களுக்கும்
இவர்களுக்கும் என்ன வித்தியாசம் எனபதும்
எனக்குப் புரியவில்லை

எனவே எனதருமை அறிவுஜீவிகளே !
நீங்கள் கவனிக்கப் படவேண்டும் தங்கள் குறித்த
செய்திகள் அதிகம் பரவ வேண்டும் என்பதே
உங்கள் தலையாய நோக்கம் என்பதால்...

நீங்கள் நின்றபடி மனிதர்களைப் போல
அதைச் செய்யாது கைகளையும்
கால்  முட்டியினையும் தரையில் ஊன்றி
நாலு கால் விலங்குகளைப் போல் நின்று செய்யுங்கள்
அது மற்றவர்கள் தங்கள் மனம் எந்த  இனம்
எனப் புரிந்து கொள்ளவும் ஏதுவாகும்

அதைப்போல் இந்தக் கண்றாவி தூரம் தொலைவு
உள்ளவர்கள்  கண்ணில்  தெரியாமலாவது
இருந்து தொலைக்கும்

Saturday, November 22, 2014

இவ்வுலகே சொர்க்கமாக ஒரு இலகு வழி

எவை எவை எல்லாம்
அவசியத் தேவையில்லையோ
எவை எவை எல்லாம் இல்லாது
சிறப்பாக வாழமுடியுமோ
எவை எவை எல்லாம் அதிகத்
தீங்கை விளைவிக்குமோ

அது அலங்காரப் பொருட்களோ
பொழுதுபோக்குச் சாதனங்களோ
அல்லது போதை வஸ்துக்களோ

அவைகளையெல்லாம்
உற்பத்தி செய்பவன்
விற்பனை செய்பவன்
அதற்குத் தன் பங்கையளிப்பவன் எல்லாம்

செல்வந்தனாய் வாழ
செல்வாக்கு உள்ளவனாய் வாழ
சமூகத் தலைவனாய் வாழ

எவை எவை  எல்லாம்
அவசியத் தேவையோ
எவை எவை இல்லாது
வாழவே முடியாதோ
எவை எவை எல்லாம்
நன்மை மட்டுமே விளைவிக்குமோ

அது ஆடையோ
அது உணவுப் பொருட்களோ
அல்லது கல்வி ஞானமே

அவைகளையெல்லாம்
உற்பத்தி செய்பவன்
விற்பனை செய்பவன்
அதற்குத் தன் பங்கையளிப்பவன் எல்லாம்

வறுமையில் வாட
அன்றாடம் சாக
சமூகத்தில் மதிப்பிழந்து வாழ

ஊழ்வினை காரணம் இல்லை என்னும்
உண்மையை ,முதலில் தெளிவோம்-இந்தச்
சூழ் நிலை மாற  வாழ்நிலை மாற
நம்மால்  ஆனதை   இன்றே செய்வோம்

நன்மை பயக்கும்
தேவையானவைகளை மட்டும் நுகர்ந்து
வாழப் பழகினால் போதும்

தீங்குப் பயக்கும்
தேவையற்றவைகளை அறவே விலக்கி
வாழத் துவங்கினால் போதும்

அரசியல்வாதியின் தயவு இன்றியும்
ஆன்மிக வழிகாட்டியின் அருட்பார்வை இன்றியும்
பொருளாதார மேதையின்  திட்டங்களின்றியும்

ஒவ்வொரு மனிதனும் மாறத் துவங்கினால் போதும்
அனைத்து தீமைக்கும்   இதுதான் ஆணிவேர் என
முதலில் அறியத் துவங்கினால் கூடப் போதும்

இப்புவியே மறுகணம் தன்மை   மாறும்
இப்புவியே  இனி    சொர்க்கம்  என்றே ஆகும்


( மாதம்   ஐந்தாறு கூட்டமாயினும்
ஒவ்வொரு கூட்டத்திலும்  ஒரு புதிய பயனுள்ள
சுவாரஸ்யமான  கருத்தைச் சொல்லி
வியக்கவைக்கும் அரிமா 324 பி 3
மாவட்டத்  துணை ஆளுநர்
A  .அறிவழகன் M J F அவர்கள் நேற்று
திண்டுக்கல்  கூட்டத்தில் சொல்லிய
ஒரு கருத்தை என் பாணியில் விரிவாக்கம்
செய்துள்ளேன்
கரு தந்த   துணை ஆளுநருக்கு மனமார்ந்த நன்றி )


Thursday, November 20, 2014

இளம் கன்றே நீ பயமறிவாய்

இளம் கன்றே நீ  பயமறிவாய்

குட்டிக்கும் பசுவுக்கும்
வேறுபாடறியும்
ஐந்தறிவுக் காளைகள்
உலவுகிற பூமியில்....

குழந்தைக்கும் பெண்ணுக்கும்
வேறு பாடறியா
ஆறறிவு எருமைகள்
அதிகமாகும் பூமியிலே....

இளம் கன்றே  நீ உலகறிவாய்

வெட்டவெளியில் மிருகங்கள்
கூண்டிலினிலே மனிதர்கள்
இருப்பதுவே காட்சிச் சாலை
என்றான  பூமியிலே

சுதந்திரமாய் காமுகர்கள்
பாதுகாப்பாய் குடும்பங்கள்
அதுவொன்றே சரியென்று
ஆகிவிட்ட ஊரினிலே...

இளங்கன்றே  நீ தெளிவடைவாய்

ஒளிந்திருந்து வாழ்ந்தாலும்
குணம் மறைக்காத
மிருகங்கள் வாழ்கின்ற
பரந்துபட்ட உலகினிலே...

மனமதனில் வெறிவைத்து
முகமதனில் இதம்வைத்து
உலவுகின்ற மிருகங்கள்
பெருத்துவிட்ட ஊரினிலே...

Wednesday, November 19, 2014

இலக்கியச் சோலையில் புத்தம் புதிய மலராய் ....

பொட்டு வைச்சுக் கோலம் போடும்
பருவப் பெண்ணைப் போல-பாத்திக்
கட்டி விட்டு நீரைப் பாய்ச்சும்-தெளிந்த
தோட்டக் காரன் போல

சந்தம் ஒண்ணு நெஞ்சில் கொண்டு
கவிதை எழுதிப் பாரு-உனக்குள்
விந்தை போல வார்த்தை நூறு
வந்து கொஞ்சும் பாரு

காய்ச்சீர் கனிச்சீர் போன்றுப் பெரிய
வார்த்தை எல்லாம் வேண்டாம்-புலிப்
பாய்ச்சல் போலப் பாய்ந்து பின்னே
பூனை யாக வேண்டாம்

புளிமா தேமா போன்று சிறிய
சீர்கள் இருந்தால் போதும்-அதிலே
எளிதாய் எந்தப் பெரிய கருத்தும்
சொல்லல்  எளிது  ஆகும்

புத்தம் புதிதாய் நித்தம் காலை
புலரும் கதிரோன் போல-தொடர்ந்து
நித்தம் ஒருகவி படைப்ப தென்ற
உறுதி நெஞ்சில் ஏற்று

நாளைய உலகில் தமிழில் நீதான்
சிறந்த கவியாய் இருப்பாய்-இலக்கியச்
சோலையில் புத்தம் புதிய மலராய்
மலர்ந்து என்றும் நிலைப்பாய்

ஒரு "ஏ "மட்டும் சேர்

அவர்கள் சரியாகச் சொல்லவில்லையா ?
நாம் சரியாகக் கேட்கவில்லையா ?
அது சரியாகத் தெரியவில்லை
ஆனால் புரிந்து கொண்டது எல்லாமே
மிகத் தவறாகவே இருக்கிறது

"அதிகம் படிச்ச மூஞ்சூரு
கழனிப் பானையிலே " என்றார்கள்
மூஞ்சூரு ஏன் படிக்கணும்
கழனிப் பானையிலே ஏன் விழணும்
குழம்பித் திரிந்தேன் பல நாள்

தோழன் ஒரு நாள் சொன்னான்
"அது அப்படியில்லை
அதிகம் படிந்த முன் சோறு
கழனிப் பானையிலே " என்றான்

அது சரியாகத் தான் இருந்தது

நான் தொடர்ந்து கேட்டேன்

"இன்னும் சில மொழிகள் குழப்புகிறது
உழைப்பு ஒன்றே உயர்வைத் தரும் என்கிறார்கள்
உழைப்பவன் எவனும்
முன்னேறியதாகத் தெரியவில்லை

மாற்றம் ஒன்றே மாறாதது என்கிறார்கள்
ஏழைகள் வாழ்வு
மாறியதாகவே தெரியவில்லையே "என்றேன்

நண்பன் அழகாகச் சொன்னான்

"இதிலும் வார்த்தை விளையாட்டிருக்கிறது
ஒரு எழுத்தை நாம்
மாற்றிப் புரிந்து கொண்டிருக்கிறோம் "என்றான்:

அதிக ஆர்வமாய்  "எப்படி " என்றேன்

அவன் அலட்சியமாய்ச் சொன்னான்

"முதல் மொழியில்
உயர்வில் உள்ள" உ  "என்பதற்குப் பதில்
" அ "போடு சரியாக இருக்கும்

இரண்டாவதில் மாற்றத்திற்கு முன்
ஒரு "ஏ "மட்டும்
 சேர் வாக்கியம் மட்டும் இல்லை
நடைமுறையிலும் சரியாக இருக்கும் " என்றான்

சேர்த்துப் பார்த்தேன்
எனக்கு அது சரியென்பது போலத்தான் படுகிறது

Tuesday, November 18, 2014

அத்தைப் பெத்த அழகுப் பொண்ணே தங்க ரத்தினமே

அத்தைப் பெத்த அழகுப் பொண்ணே
தங்க ரத்தினமே-என்
மொத்த மனசும் சுருட்டிப் போகும்
சொத்துப் பத்திரமே-என்
சித்த மெல்லாம் கலங்கிக் கிடக்கு
கொஞ்சம் கிட்டவா-நாம
செத்த நேரம்  நெருங்கி இருப்போம்
பக்கம் ஒட்டிவா

வித்தை நூறு கத்து வச்சு
ஆசை மச்சானே-என்னை
இச்சைக் கூட்டி மடக்க நினைக்கும்
அன்பு மச்சானே-நான்
பச்சைப் புள்ள இல்ல எந்தன்
அருமை மச்சானே-கொஞ்சம்
எட்டி நின்னே விவரம் சொல்லு
புரியும் மச்சானே

சினிமா நூறு பாத்தும் உனக்கு
விவர மில்லையா-தினமும்
தனியாய்த் தவிக்கும் மாமன் மனசு
புரிய வில்லையா
பனிபோல் லேசா பட்டுப் போனா
மனசு குளிருமே-அந்த
இனிய சுகத்தில் கொஞ்ச காலம்
வண்டி ஓடுமே

பஞ்சு கிட்ட வத்தி வச்சா
பத்திகிடும் மச்சான்-சுகம்
இஞ்சி அளவு கண்டா கூட
புத்திகெடும் மச்சான்-ஒரு
மஞ்சக் கயிறு மட்டும் கழுத்தில்
ஏறட்டும் மச்சான்-பின்னே
எந்தப் பொழுதும் உந்தன் மடிதான்
என்னிருப்பு மச்சான்

Monday, November 17, 2014

நரக வாசம்

நூறு தடவ வந்து போன பின்னும்-இந்த
ஊரின் போக்கு மட்டும் விளங்கவே இல்லை
காது கொடுத்து உற்றுக் கேட்ட போதும்-இவர்கள்
பேசும் பாஷை மட்டும் புரியவே இல்லை

கரண்டு ரெயில் ஏறிப் போனா கூட்டம்-நல்ல
காத்து வாங்க பீச்சு போனாக் கூட்டம்
மிரண்டு பார்க்க வைக்கும் மாலில் கூட்டம்-இங்கே
எப்ப எங்கப் பாத்தாலும் கூட்டம் கூட்டம்

மேகம் தொட்டு கோடி வீடு இருந்தும்-இங்கே
ரோடு ஒரம் கோடிக் குடும்பம் நடக்கும்
வேகம் இவர்கள் விவேகம் தன்னைக் காட்ட-நாறும்
கூவம் இவர்கள் விவேக மின்மைக் காட்டும்

கணவன் மனைவி குழந்தை எனினும் கூட -இவர்கள்
இருப்பு எல்லாம் ஒன்றாய் எனினும் கூட
உணவு ஒன்றாய் உண்ண ஞாயிறு வேணும்-இந்த
நிலையை நினைக்க நெஞ்சில் பாரம் கூடும்

இரத்த உறவு என்றா னாலும் கூட-விடுமுறை
அன்று வந்தால் இருந்து பேச முடியும்
அடுத்த வீட்டில் இழவு என்றால் கூட-அது
கிழமைப் பொறுத்தே துக்க கூட்டம் கூடும்

நிமிட முள்ளைக் காலில் கட்டி நாளும்-இவர்கள்
ஓடும் ஒட்டம் காண மனமே வாடும்
சபிக்கப் பட்ட மனிதர் போல நாளும்-இவர்கள்
வாழும் வாழ்க்கை நரகச் சாயல் காட்டும்

நரக வாழ்க்கை நகர வாழ்க்கை என்று-நாளும்
சொல்லக் கேட்டுப் புரியா திருப்போரெல்லாம்
சிலநாள் அங்கே இருக்க நேர்ந்தால் போதும்-இந்தக்
கூற்றின் உண்மை எளிதாய் விளங்கிப் போகும்

Sunday, November 16, 2014

அமரகாவியம்

ஒவ்வொரு படைப்பின் போதும்
"எதை" எனக் குழப்பிக்கொள்ளாதே
அது உன் சிந்தனையை
ஓரடி நகரவிடாது நிறுத்திவிடும்

"இதை"த்தான் என்பதில்
மிகத் தெளிவாய் இரு
சிந்தனைச் சரடின் நுனி
சட்டெனச் சிக்கிவிடும்

ஒவ்வொரு படைப்பின் போதும்
"எப்படி"எனக் கலங்கிப் போகாதே
அது போகாத ஊருக்கு அனுப்புவதில்
மிகக் குறியாய் இருக்கும்

ஒவ்வொரு படைப்பின் போதும்
"இப்படித்தான்"என்பதில் திண்ணமாய் இரு
நேர்வழியது தெரிவது மட்டுமின்றி
தெளிவாயும் தெரியத் துவங்கும்

ஒவ்வொரு படைப்பின் போதும்
"யாருக்கு" என குழம்பிச் சாகாதே
அது உன்னைச் செக்குமாடாக்கி
ஓரிடத்தினிலேயே சுழலச் செய்துவிடும்

ஒவ்வொரு படைப்பின் போதும்
"இவர்களுக்குத்" தான்என உறுதியாய் இரு
நேர்க்கோட்டுச் சிந்தனை
இயல்பாகவே அமையப் பெற்றுவிடும்

ஒவ்வொரு படைப்பின் போதும்
"ஏன் " என எண்ணி மாளாதே
அது அஸ்திவாரத்தை அசைப்பதோடு
உன்னையும் செல்லாக் காசாக்கிவிடும்

ஒவ்வொரு படைப்பின் போதும்
உன் இலக்கதனை மிகச் சரியாய் நேர்செய்து கொள்
உன் படைப்பு நிச்சயம் கவனிக்கத் தக்கதாகிவிடும்
காலம் கடக்கும் அமர காவியமாகியும் விடும்

Tuesday, November 11, 2014

நான் என்னைக் கடப்பதிலேயே

நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்

என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

சீரான வேகத்தில்
 நான் என்னைக் கடப்பதிலேயே
மிகக் கவனமாய்
தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறேன் 

Monday, November 10, 2014

நாளும் சவமாய் வாழ்ந்து ....

நாம்தான் சூட்சுமம் தெரியாது
செக்கு மாடாய்
சுற்றிச் சுற்றித் திரிகிறோமா  ?

அழகிய மலரினைப்போல
குழ்ந்தையின் சிரிப்பினைப்போல
அன்றாட விடியலைப்போல

அழகானவை
இனிமையானவை
உயர்வானவை எல்லாம்

மறைப்பின்றி
எளிமையாய்
மிக அருகாமையில்
நம்மைச் சுற்றியே
வலம் வருகையில்

நாம் தான்
கண்ணை மூடி
காட்சி தேடி
மூடனாகத் திரிகிறோமா  ?

நாம் தினம் எதிர் கொள்ளும்
சுனாமிச் சீற்றங்களும்
பூகம்ப அதிர்வுகளும்
எரிமலை குழம்புகளும் கூட
நம்முள்
எவ்வித சலனங்களையும்
ஏற்படுத்தாது போக....

வெகு சிலருக்கோ.....
...
முதலிரவில் மறுத்துச் சொன்ன
ஒரே ஒரு வார்த்தை.கூட..
கை மாறி மாறி வந்து சேர்ந்த
ஒரு சிறு கனி.கூட..
அலைந்து ஓய்ந்துச் சாய்ந்த
அடி மரத்து நிழல் கூட
விழிபடைதலுக்கு
போதுமானதாகிப் போக
போதி மரமாகி போக

நாம்தான்
கோடாலி கொண்டு
நகம் வெட்ட முயன்று
தினம் நொந்து வீழ்கிறோமா  ?

நாம்தான்
விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்தும்
சூட்சுமம் அறியும்  உபாயமறியாது ம்
 நாளும் சவமாய் வாழ்ந்தே சாகிறோமா ? 

Friday, November 7, 2014

மதிப்பிற்குரிய ரஜினி அவர்களே தங்கள் பிறந்த நாள் பரிசாக தமிழ் மண்ணை மீட்டுத் தாருங்கள்

உலகில் சரித்திரம் சிலரை தலைவராக்கி
தன் தேவையைப்பூர்த்தி செய்துகொண்டிருக்கிறது.
சில தலைவர்கள் தங்கள் அபரீதமான உழைப்பால்,
கடவுளின் அருட்பார்வையால்,மக்களின்
பூரண உழைப்பால்சரித்திரத்தை தலைகீழாய்ப்
புரட்டிப் போட்டிருக்கிறார்கள்

இதில் இரண்டாம் வகையைச் சார்ந்தவர் நீங்கள்

தங்களை அரசியலுக்கு இழுக்கும் முயற்சி என்பது கூட
ஒரு யானையை பானைக்குள் திணிக்க எடுக்கும்
அற்ப முயற்சியே.தமிழகத்தின் அனைத்து பிரிவினரும்
ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள தங்களை
ஒரு சிறு வட்டத்திற்குள் அடைக்க முயலும் முயற்சி
அற்பத்தனமானதே. அது வேண்டாம்
பெரும்பாலான மக்களுக்கும் இதில் உடன்பாடில்லை

ஆயினும் தங்கள் பாஷையில் சொன்னால்
ஒரு துளி வியர்வைக்கு நூறு கோடி தங்கக் காசை
அள்ளித் தந்த தமிழகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும்
என்கிற தீவிர எண்ணம் தங்களுக்கு இருப்பதால்
தங்களின் பிறந்த நாள் பரிசாக தமிழக மக்களுக்கு
இந்தப் பேருதவியை செய்து தந்தால் தமிழகம்
 இன்றுபோல்உங்களை என்றும் கொண்டாடும்

தமிழகத்தைச் சார்ந்த மதிப்பிற்குரிய
 சி.சுப்ரமணியம் அவர்கள்நிதியமைச்சராக
இருந்த காலத்தில் இந்தியாவில் ஏற்பட்டிருந்த
கடுமையான பஞ்சத்தை நீக்குவதற்காக எடுக்கப்பட்ட
பல்வேறு நடவடிக்கைகளில் விஷமாக
ஒட்டிக் கொண்டு வந்ததுதான் இந்த
நாசகாரச் சீமைக் கருவேலை

இதனுடைய  அபரீதமான பெருக்கம்
மண்வளம் கெடுத்துநீர்வளம் கெடுத்து
காற்றிலுள்ள ஈரப்பதத்தையும்
உறிஞ்சுவதன் மூலம் சுற்றுச் சூழலையும் கெடுத்து

இப்போது தமிழகத்தை நாசகாடாக்கிக் கொண்டிருக்கிறது

அண்டை மாநிலமான கேரளத்தில் அரசின் உதவியோடு
சீமைக் கருவேல முள்ளை முற்றிலும் அழித்து
தங்கள் மண்ணைச் சொர்க்க பூமியாக்கிவிட்டார்கள்
நாம்தான் நரகத்தின் இடையில் நிற்கிறோம்

இதன் தீமைகளை முற்றாக அறிந்து
நான் சார்ந்திருக்கிறஅரிமா சங்கத்தின் 324 பி3
 மாவட்டத்தின்ஆளுநர் திரு.ரகுவரன்  அவர்கள்
தனது ஆண்டுக்குரிய சேவைத் திட்டமாக
சீமைக் கருவேல முள்ளை அகற்றுதலைச்
செய்யமுனைய அனைவரின் ஒத்துழைப்போடு
இதுவரைமதுரை தேனி சிவகங்கை திண்டுக்கல்
முதலானமாவட்டங்க்களில்5000 ஏக்கருக்கு
மேற்பட்ட நிலப் பரப்பில்
இதனை அகற்றிவிட்டோம்.
இன்னும் அகற்றிக் கொண்டிருக்கிறோம்

ஆயினும் இதனை விழிப்புணர்வு இயக்கமாகத்தான்
செய்ய முடிகிறதே ஒழிய முற்றாக
ஒழிக்க இயலவில்லை

எங்கள் முயற்சி வானளவு வளர்ந்து நிற்கும் ஒரு
கொடிய அரக்கனை  சிறுகம்பு கொண்டு வெல்ல
முயல்வது போலத்தான் உள்ளது

தாங்கள் மனது வைத்தால் தங்கள் பிறந்த நாள்
கோரிக்கையாக மக்களிடன் இந்த கருத்தை மட்டும்
வலியுறுத்தினால் ,தமிழகத்தில் ஏதேனும் ஓரிடத்தில்
நீங்கள் ஒரு முள்ளை வெட்டினால்போதும்

நிச்சயம் தமிழகத்திலிருந்து இந்த கருவேல முள்
அடியோடுஒழிக்கப் பட்டுவிடும்

இதற்கான சேடலைட் மூலம் தமிழகத்தில் உள்ள
ஒட்டு மொத்தகருவேல முள் பரப்பையும் அதனை
விஞ்ஞானப் பூர்வமாக ஒழிப்பதற்கான
செயல் திட்ட முறைகளையும்
தருவதோடு உடன் இணைந்து பணியாற்றவும்
பல இயக்கங்கள் எங்களைப் போல தயாராக உள்ளன

தங்கள் பிறந்த நாள் பரிசாக தமிழக மக்களுக்கு
தமிழ் மண்ணின் வளத்தை மட்டும் மீட்டுத் தாருங்கள்

இதை அரசு செய்ய முடியாது.தாங்கள் நினைத்தால்
நிச்சயம் இதைஒரு மக்கள் இயக்கமாக்கி
சாதித்துக் காட்டமுடியும்

அதைத் தொடர்ந்து தமிழக மக்களின்
வாழ்வில் வளமும் நலமும் மாண்பும்
நிச்சயம் பல்கிப் பெருகும்

நிச்சயம் இது தமிழக மக்களுக்குச் செய்த வாழ்நாள்
பேருதவியாகவும் இருக்கும்

உங்கள் வாழ் நாள் சாதனையாகவும் இருக்கும்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Wednesday, November 5, 2014

காதலிலே காமமது உப்புப் போலத்தான்

ஆண் :முத்தத்துக்கும் சப்தத்துக்கும்
            ஏழாம் பொருத்தம்
            சித்தத்துக்கும் முத்தத்துக்கும்
            நூறு பொருத்தம்
           சப்தமின்றி மொத்தமாக கண்ணே வாடி -நாம
           சொர்க்கத்துக்கு குடிபோவோம் முன்னே வாடி

பெண் :சப்தமாகப் பேசாதே
             கேணக் கிறுக்கா
             மொத்தஊரும் கேட்குதடா
            ஸ்பீக்கர் கணக்கா
            நிச்சயம்தான் ஆகட்டும் அடுத்த மாசமே-நான்
            நம்பிஎன்னை தந்திடுறேன் மொத்த மாகவே

ஆண் :தவிக்கிறப்ப இல்லாட்டி
             தண்ணி எதுக்கு
             பசிக்கிறப்ப இல்லாட்டி
            சோறு எதுக்கு
            தவிக்கிறேண்டி தூக்கமின்றி
            நாளு நாளா-கொஞ்சம்
            சூடேத்திப் போயேண்டி சாயா கணக்கா

பெண்:வெத்துக்கஞ்சி ஆனாலும்
            ஆசை மச்சான்
            வக்கணையா தின்னவேணும்
            அழகு மச்சான்
            மெச்சுவீட்டுக் கறிக்கஞ்சி ஆனா கூட-கையில்
            வைச்சுத்தின்னா ருசித்திடுமா சொல்லு மச்சான்

ஆண் : மோகத்திலே வேகத்திலே
              பேசிப் புட்டேன்
              தாமதமா தவறுன்னும்
             புரிஞ்சுக் கிட்டே
             ஏகமனதா என்னைநீயும் மன்னிச்சுடுடி-என்றும்
             தவறாம கண்ணாலயே பேசிப் போடி

கோரஸாக :
           காதலிலே காமமது
           உப்புப் போலத்தான்
          கூடப்போனா வாழ்வதனை
          மாத்திப் போகும்தான்
         வேதமாக மனசிலிதை வைச்சுப் புட்டோம்-இனி
         எந்தநாளும் திருநாள்தான் புரிஞ்சுக் கிட்டோம்

        (பட்டுக்கோட்டையார் கவியரசு அவர்களுக்கு
        முந்திய காலங்களில் சினிமா காதல் பாடல்கள்
        பாணியில் ஒரு நிகழ்வுக்காக எழுத முயன்றது )

Tuesday, November 4, 2014

உலகத் தலைமை கொள்வோம்

உலகை வென்ற தமிழா -நீயும்
ஓய்ந்து கிடத்தல் முறையா ?-இமயச்
சிகரம் வென்ற தமிழா -நீயும்
சிதறிக் கிடத்தல் அழகா ?

சைகை மொழியை உலகே-மெத்தச்
சார்ந்தி ருந்த வேளை-பொங்கும்
வைகைக் கரையில் மொழிக்குச்- சங்கம்
நிறுவி நின்ற  தமிழா         (உலகை )

நிலத்தின் வகைகள் அறிந்து-அதனை
ஐந்து வகையாய் உணர்ந்து-நாளும்
இயற்கை யுடனே இணைந்து-வாழும்
முறையைத் தெளிந்த தமிழா    (உலகை )

காதல் வீரம் தன்னை-இரண்டு
கண்ணைப் போலக் கொண்டு-நமது
சீலம் தன்னை உலகு  -நன்கு
அறிய வாழ்ந்த தமிழா

சிதறிக் கிடத்தல் ஒன்றே -நம்மை
சிறுமைப் படுத்தும் சாபம்-அதனை
உதறி ஒன்றாய் எழுவோம்-நிலையாய்
உலகத் தலைமை கொள்வோம்

படைப்பிற்கும் எனக்கும் இடைப்பட்ட பிணைப்பு

இருளுக்கும் இரவுக்கும் 

இருக்கும் நெருக்கம் 

இருக்கும் வரைக்கும்


கடலுக்கும் அலைக்கும்
தொடரும்  பழக்கம்
தொடரும் வரைக்கும்

நிலவுக்கும் மலருக்கும்
நிலவும் உறவது
நிலவும் வரைக்கும்

இளமைக்கும் தமிழுக்கும்
இயைந்த இயக்கம்
இயங்கும் வரைக்கும்

நினைவுக்கும் மனதிற்கும்
நிகழ்ந்திடும் தொடர்பது
நிகழும் வரைக்கும்

படைப்பிற்கும் எனக்கும்
இடைப்பட்ட பிணைப்பது
இணைந்தே இருக்கும்

காற்றுக்கும் மூச்சுக்கும்
வாய்த்திட்ட  உறவுபோல்
சார்ந்தே நிலைக்கும்

Monday, November 3, 2014

ரோடு எல்லாம் "பாரு" நோக்கித் தானே போகுதா ?

ரோடு எல்லாம் "பாரு" நோக்கித்
தானே போகுதா ?-இல்லை
கூறு கெட்டுக் கால்கள் இரண்டும்
இழுத்துப் போகுதா ?

ராவு ஆனா இந்த ரவுசு
தாங்க முடியலே-இந்த
நோவு என்று தீரு மென்னு
எனக்கும் புரியலை

பொண்ணு ஒண்ணு டாவடிச்ச
குஷியில் ஒருத்தனும்-பின்னே
பொண்ணு ஒண்ணு நோகடிச்ச
வெறியில் ஒருத்தனும்

தள்ளிக் கொண்டு போயி எனக்கு
ஊத்தி விட்டானே-அந்த
லொள்ளுச் சனியன் பிடியில் இப்போ
சிக்கிப் புட்டேனே

ஊருக் கெல்லாம் பாதை ரெண்டு
இருந்திடக் கூடும்-ஒன்னு
சீரு கெட்டா அடுத்த ஒன்னில்
போயிடக் கூடும்

"பாருக்" கெல்லாம் பாதை ஒன்னு
தாண்டா தம்பி -அதில
போயிப் புட்டா அம்புட் டுத்தான்
தொலஞ்ச தம்பி


(சாலையில் போதையில் கிடந்த ஒருவனின் புலம்பல்
கேட்டு எழுதியது. இதில் நான் என்பது நான் இல்லை
எனச் சொல்லவும் வேண்டுமோ ? )

Sunday, November 2, 2014

பதிவுலகப் பிதாமகர் தந்த உற்சாக டானிக்

பதிவுலகப் பிதாமகர் தந்த  உற்சாக டானிக்கை தங்களுடன்  பகிர்வதில் பெருமை கொள்கிறேன் 

”ஜீவீ + வீஜீ விருது” - புதிய விருதுகள் [பரிசுகள்] அறிமுகம் ! [ Part-1 of 4 ]



அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

தங்கள் அனைவரின் 
ஒத்துழைப்பினாலும், உற்சாகமான 
ஈடுபாடுகளினாலும், நமது சிறுகதை 
விமர்சனப்போட்டிகள், திட்டமிட்டபடி 
வெகு அழகாக வெற்றிகரமாக 
நடைபெற்று முடிந்துள்ளன. 

இந்த மாபெரும் விழா வெகு அமர்க்களமாக 
நிறைவு பெற்றதில் எனக்கு மனதுக்கு 

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

இந்த மகிழ்ச்சியான என் மனநிலையில், 
புதிதாக மேலும் சில விருதுகளை [பரிசுகளை] 
அறிமுகப்படுத்தி இந்த மாபெரும் விழாவினை 
நிறைவுக்குக்கொண்டுவர 
விரும்புகிறேன்

.புதிதாகவும் கூடுதலாகவும் 
இப்போது அறிமுகப்படுத்தும் 
நான்கு விதமானவிருதுகளின் 
மொத்தப் பரிசுத்தொகை :ரூபாய்: 
                           
  V.G   
 


G.V








 VGK-01 முதல் VGK-40
 வரையிலான 
அனைத்துக்கதைகளுக்கும்
 விமர்சனம் 
 எழுதி அனுப்பியுள்ள  மூவருக்கும் 

மேலும் குறிப்பிட்ட இருவருக்கும் 
 இந்த விருது இப்போது வழங்கப்படுகிறது. 

பரிசுத்தொகை 
ரூ. 100 [ரூபாய் நூறு ]

பரிசுத்தொகை 
ரூ. 100 [ரூபாய் நூறு ]இந்த    ' ஜீவீ  + வீஜீ  '  

விருதினைப் பெற 
தகுதியுடையோர் 
பட்டியல் இதோ:

 

  

’மணிராஜ்’
திருமதி.
 இராஜராஜேஸ்வரி
அவர்கள்

 40 out of 40 


 


  

'மன அலைகள்’ 
முனைவர் திரு. 

 பழனி கந்தசாமி ஐயா 
அவர்கள்.

 40 out of 40 

 

   

’எண்ணங்கள்’
திருமதி.
 கீதா சாம்பசிவம்
அவர்கள்

 40 out of 40 

 



இதே ’ஜீவீ + வீஜீ’ விருதுக்கு 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
மற்றொருவர்

  

’தீதும் நன்றும் பிறர்தர வாரா ’
திரு. 
ரமணி 
அவர்கள்

இந்தப்போட்டியின் ஆரம்ப காலக்கட்டங்களில் எட்டு முறைகள் மட்டும் கலந்துகொண்டு அதில் ஏழு முறைகள் பரிசுகள் வாங்கியுள்ளார்கள். 


பரிசுக்குத் தேர்வாகாத அந்த ஒரே ஒரு விமர்சனத்தையும் பெருந்தன்மையுடன் தனது வலைப்பக்கத்தில் மிகச்சிறப்பாக மாற்றுச்சிந்தனையுடன் எழுதி http://yaathoramani.blogspot.in/2014/05/blog-post_8735.html மற்றவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார்கள்.

VGK-01 To VGK-04 ஆகிய முதல் நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக முதல் பரிசினை வென்று ஹாட்-ட்ரிக் அடித்ததுடன், சிறுகதைக்கு ஓர் விமர்சனம் என்றால் அது எப்படி எப்படியெல்லாம் வித்யாசமாக எழுதப்படலாம் என்பதற்கு ஓர் உதாரணமாகவும், மற்ற அனைவருக்கும் ஓர் வழிகாட்டியாகவும், ஆசானாகவும் இருந்துள்ளார்கள்.  

அதனால் இவருக்கு இந்தச் சிறப்பு விருதினை அளிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

 




Saturday, November 1, 2014

 
(உரையாற்றிக் கொண்டிருப்பவர்
பட்டிமண்டபப் பேச்சாளர் முத்து நிலவன் ஐயா அவர்கள்
இடது ஓரம் உணவு உலகம் சங்கரலிங்கம்  அவர்கள்
நடுவில் நான் வலது ஓரம் மதுரை சரவணன் அவர்கள் )

மதுரை வலைப்பதிவர் திருவிழாவைப் பற்றிய செய்திகளை 
 02/11/2014 மதுரைப்பதிப்பு தினமலர் இணைப்பில் ஒருபக்கம் 
வெளியிட்டு விழாவைப் பெருமைப் படுத்தியுள்ளது.