நல்லதை நீ
நல்லவிதமாகச் சொல்கிறாயா ?
நீ நிச்சயம் பத்தாம்பசலி
தீயதை நீ
எரிச்சலூட்டும்படியே சொல்கிறாயா
நீ நிச்சயம் அடிமுட்டாள்
பயனுள்ளதை நீ
சுவாரஸ்யமின்றிச் சொல்கிறாயா
நீ அரை வேக்காடு
பயனற்றதை நீ
ரசிக்கும்படிச் சொல்கிறாயா
நீயே இந்தயுகத்தில்
தலைசிறந்தப் படைப்பாளி
பொழுது போக்குதலே கடமையாகிப் போன
போதை ஒன்றே கொண்டாட்டம் என ஆகிப் போன
சேர்ந்து குடிப்பவனே நண்பன் என ஆகிப் போன
பிரபலமாவதே வெற்றியென ஆகிப் போன
இந்தச் சமூகச் சூழலில்
சமூகத்தைப் பிரதிபலிப்பதுதானே
ஜனரஞ்சக படைப்பாய் இருக்கச் சாத்தியம்
நூலைப் போலச் சேலை இருக்கத்தானே
நூற்றுக்கு நூறு நிச்சயம் சாத்தியம்
நல்லவிதமாகச் சொல்கிறாயா ?
நீ நிச்சயம் பத்தாம்பசலி
தீயதை நீ
எரிச்சலூட்டும்படியே சொல்கிறாயா
நீ நிச்சயம் அடிமுட்டாள்
பயனுள்ளதை நீ
சுவாரஸ்யமின்றிச் சொல்கிறாயா
நீ அரை வேக்காடு
பயனற்றதை நீ
ரசிக்கும்படிச் சொல்கிறாயா
நீயே இந்தயுகத்தில்
தலைசிறந்தப் படைப்பாளி
பொழுது போக்குதலே கடமையாகிப் போன
போதை ஒன்றே கொண்டாட்டம் என ஆகிப் போன
சேர்ந்து குடிப்பவனே நண்பன் என ஆகிப் போன
பிரபலமாவதே வெற்றியென ஆகிப் போன
இந்தச் சமூகச் சூழலில்
சமூகத்தைப் பிரதிபலிப்பதுதானே
ஜனரஞ்சக படைப்பாய் இருக்கச் சாத்தியம்
நூலைப் போலச் சேலை இருக்கத்தானே
நூற்றுக்கு நூறு நிச்சயம் சாத்தியம்
17 comments:
சேர்ந்து குடிப்பவனே நண்பன்- உண்மை ஐயா
ஏன் இந்த ஆதங்கம்?
நாம் நல்லதையே நினைப்போம்.
நூலைப் போலச் சேலை இருக்கத்தானே
நூற்றுக்கு நூறு நிச்சயம் சாத்தியம்//
வாஸ்தவம்... தம3
//சமூகத்தைப் பிரதிபலிப்பதுதானே
ஜனரஞ்சக படைப்பாய் இருக்கச் சாத்தியம்// உண்மை. நல்லதையே நினைப்போம்
உண்மை தான். த.ம +1
வாசித்தேன்.
என்ன குளப்பம்?
புரியவில்லை.
வேதா. இலங்காதிலகம்.
குழப்பம் எங்கே தெரிகிறது
நாட்டு நடப்பினைத் தெளிவாகத்தானே
சொல்லி இருக்கிறேன் இல்லையா
என்ன கொஞ்சம் எதிர்மறையாகச்
சொல்லி இருக்கிறேன் அவ்வளவே
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
சமூகத்தைப் பிரதிபலிப்பதுதானே
ஜனரஞ்சக படைப்பாய் இருக்கச் சாத்தியம்.
கேள்வியும் பதிலுமாய் சாத்தியத்தை உணர்த்திய விதம் சிறப்பு. நல்லதையே நினைப்போம்.
நாட்டு நடப்பை நன்றாகவே சொன்னீர்கள்.
த.ம.6
யதார்த்தமான உண்மை கவிஞரே....
த.ம.7
திரைப்பட பாதிப்போ?போக்கிரி நான் போலீஸ் அல்ல.
போலீசை அடித்தால் ஹீரோ.சட்டத்தை தன கையில் எடுத்து ஹீரோ ஆவதே அனைத்துப்படங்களும். காவல் துறை .ஒரு பெரும் கூட்டம் ,மந்திரி எதிர்ப்பது ஒரு பொறுக்கி. இந்த தாக்கம் தான் உண்மை.
#சமூகத்தைப் பிரதிபலிப்பதுதானே
ஜனரஞ்சக படைப்பாய் இருக்கச் சாத்தியம்#
அதனால்தான் எல்லா படங்களிலும் டாஸ்மாக் வருகிறது .கூத்திகளோடு டான்ஸ் வருகிறது .படத்தின் தலைப்பு கூட சமூக விரோதியின் பெயராய் இருந்தால் அந்த படம் ஓஹோதான் !
த ம 8
என்னைச் சொல்லவில்லையே....?
:)))))))))))
யதார்த்தம்!
த.ம. +1
நாட்டு நடப்பை நச்சென்று பதிந்துவிட்டீர்கள் நறுக்கான கவிதையாக. நன்றி.
அம்மணமான ஊரில் ஆடை தேவையில்லையே இரமணி ஐயா.
அருமை ஐயா! ஆதங்கத்தை சரியாக வெளிப்படுத்திவிட்டீர்கள்!
Post a Comment