Monday, December 1, 2014

உலகுக்கு ஒரு நாள் புரியும் எங்கள் அதீத அசுர பலமே

எம் படைப்புகள் எல்லாம்...
ஆற்று நீரை எதிர்த்துநிற்கும்  எனும்
அதீத  எண்ணம் ஏதும்
எங்களில் எவருக்குமில்லை

தீயில் தூக்கி எறிந்தால்
புத்தம் புதிய மலராய்
மலர்ந்து சிரிக்கும் என்கிற
கற்பனையும் எங்களுக்கில்லை

எண்ணையில்லா தீபத்தை
எரியச்  செய்யவோ
அமாவாசை வானில்
முழு நிலவை ஒளிரச் செய்யவோ
 எம் படைப்புகளுக்கு
நிச்சயமாய்  சக்தியில்லைஎன்பது
எங்களுக்கும் தெரியும்

 சராசரித்  தேவைகளை அடையவே
 திணறும்அல்லல்  கதைகளை
நியாயமாக  நேர்மையாக வாழ
எதிர்படும்  பெரும்  துயர் களை
எமக்குத் தெரிந்த வகையில்
ஒருவருக்கொருவர் சொல்லி
ஆறுதல் பெற்றுக் கொள்கிறோம்

அன்றாட அவசர வாழ்வில்
நாங்கள் எதிர்கொள்ளும்
சிறு சிறு சந்தோஷங்களை
உல்லாச அனுபவங்களை
கொஞ்சம் மசாலாக் கலந்து
விருந்தாக்கி   மகிழ்கிறோம்

எமது எல்லைக்கு  எட்டிய வகையில் புனைவு
எங்கள் வசதிக்கு ஏற்றவகையில்
நாங்கள் சமைத்த விருந்தினை
எங்களுக்குள் நாங்களே
ஒருவருக்கொருவர் பரிமாறி
மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம்

உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
 "யாது ஊரே யாவரும் கேளீர்  "என
பண்புடன் வாழ முயலும்
 பதிவர்கள்  நாங்களெல்லாம்
இன்றைய  நோக்கில்
ஒரு சிறிய குழுவே

ஆயினும்
உலகுக்கு ஒரு நாள் புரியும்
எங்கள் அதீத அசுர  பலமே 

20 comments:

Sethuraman Anandakrishnan said...

முகம்மதுவுக்கும் கல்லடி,ஏசுவுக்கும் ஆணியடி
ஹரிஷ்ச்ந்திரனுக்கும் சுடலை அடி,காந்திக்கும் துப்பாக்கிச் ச்சூடு எங்கள் நினைவலைகள் இந்த
அராஜகங்களை நினைவுகளாக்கி ஒரு எச்சரஈக்கை /ஒரு சிந்தனைத் தூண்டல் ,அவ்வளவே. ஒருநாள் நினைத்தால் நாங்களும் ஒரு அஸ்திவாரக் கூலாங்கல்லாக கூட இருப்போம்.

Anonymous said...

aam..உலகுக்கு ஒரு நாள் புரியும்
எங்கள் அதீத அசுர பலமே ....
good...sure.....
Vetha.Langathilakam.

அருணா செல்வம் said...

சிறு உளியால் கல்லைப் பிளக்க வைக்கவும் முடியும்.
அதே கல்லில் சிலை வடிக்கவும் முடியும்....
சிற்பியின் கையில் தான் எதுவும் உள்ளது இரமணி ஐயா.

கோமதி அரசு said...

உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
"யாது ஊரே யாவரும் கேளீர் "என
பண்புடன் வாழ முயலும்
பதிவர்கள் நாங்களெல்லாம்//

அருமை.
வாழ்த்துக்கள்.

Avargal Unmaigal said...

இப்போது இருக்கும் பதிவர்கள் ஆலமரக் கன்றுகள் இவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள் நன்கு வளர்ந்த பின் யாராலும் எளிதில் அசைக்க முடியாத ஆலமரமாக ஆகிவிடுவார்கள் என்பது உண்மையே

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை.... உண்மை ஐயா...

ஸ்ரீராம். said...

கடமையைச் செய்வோமே..... பலனை எதிர்பார்க்க மாட்டோமே...!

கரந்தை ஜெயக்குமார் said...

உலகுக்கு ஒரு நாள் புரியும்
எங்கள் அதீத அசுர பலமே
அவசியம் புரிந்தே தீரும்
தம +1

கவியாழி கண்ணதாசன் said...

சரியாக சொன்னீர்கள்

KILLERGEE Devakottai said...

உலகுக்கு ஒருநாள் புரியும்

இராஜராஜேஸ்வரி said...

"யாது ஊரே யாவரும் கேளீர் "என
பண்புடன் வாழ முயலும்
பதிவர்கள் நாங்களெல்லாம்
அருமை.
வாழ்த்துக்கள்.

புலவர் இராமாநுசம் said...

ஆகா! அருமை இரமணி! இதைவிட விளக்கமாக நம்மைப்(பதிவர்) பற்றி எவரும் தெளிவாக சொல்லிவிட இயலாது! நன்றி!

G.M Balasubramaniam said...

உலகுக்கு என்ன பதிவுலகத்துக்கே புரிந்தால் மகிழ்ச்சியே. வாழ்த்துக்கள்.

Sasi Kala said...

ஐயா .. இதைவிடத் தெளிவாக . நறுக்கென யாராலும் நம்மைப் பற்றி சொல்ல முடியாது. நாளொரு நற்சிந்தனை.. தங்களுடையது. தினம் பருகக் காத்திருக்கிறோம். நன்றிங்க ஐயா.

Manjubashini Sampathkumar said...

படைக்கும் ஒவ்வொரு படைப்புமே கண்டிப்பா ஏதாவது ஒரு கருத்தை தாங்கி தான் வரும் என்பதில் எனக்கு எப்போதுமே அசைக்க முடியாத நம்பிக்கை ரமணி சார். இப்பவும் அப்படியே...

அக்‌ஷயப்பாத்திரம் பார்க்கும்போது காலியா தான் தெரியும்.. ஆனா தேவை என்று வரும்போது அக்‌ஷயத்தில் இருந்து பெருகும் நமக்கு வேண்டியவை எல்லாமே.

இந்த கவிதை சொல்லும் கருத்தும் அதுவே தான் ரமணி சார்...

நம் காலத்துக்கு பிறகு சந்ததிகள் சௌக்கியமாக இருக்க நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற சொத்துக்கள் போல , உங்க கருத்து சொல்லும் வரிகளும் பொக்கிஷமே எதிர்க்கால சந்ததியருக்கு..

ஸ்பைடர் மேன் போல கதாநாயகன் போல எல்லாம் கிடையாது எங்க வரிகள் என்று சொல்லி, அனுபவங்களையே பாடங்களாக்கி எங்களுக்கு தந்திருக்கீங்க...

எப்படி இருக்கவேண்டும் எப்படி இருக்கக்கூடாது, வாழ்க்கையில் பட்ட அவலங்கள் எல்லாம் எங்களுக்கு பாடங்களாக சொல்லி, சின்ன சந்தோஷங்களை கூட துளி கூட குறைக்காமல் எங்களோடு பகிர்ந்து...

இத்தனையும் செய்துவிட்டு...இத்தனையும் சொல்லிவிட்டு..

இது ஒன்றுமில்லை என்ற வரியையும் சேர்த்தால் எப்படி ஒப்புக்கொள்வோம் ரமணி சார்?

செய்பவை யாவும் நன்மையே.... அது தான் அசுர பலம் என்று என்றாவது அறியும் காலம் வரும் என்ற நம்பிக்கையோடு கவிதையை முடித்த விதம் சிறப்பு ரமணி சார்..

உங்க வரிகளில் எப்போதுமே எளிமை மட்டுமல்ல, ஜோஷ் இருக்கும்...

உத்வேகம்....

மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணி சார் பகிர்வுக்கு..

த ம 8

Dr B Jambulingam said...

தங்களின் நம்பிக்கை விரைவில் வடிவம் பெறும். வலைச்சரத்தில் தங்களது பதிவுஅறிமுகம் கண்டேன். வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையாகச் சொன்னீர்கள் ஐயா. த.ம. +1

சிவகுமாரன் said...

புரிய வைப்போம்

Sri chandra said...

வலைப்பதிவர்களுக்கு நல்ல விளக்கம் எந்த ஒரு ஆக்கமும் நல்லவைகளை நோக்கியே பதிவு அருமை வாழ்த்துக்கள்

Bagawanjee KA said...

#உலகுக்கு ஒரு நாள் புரியும்#
இருக்கும் போது யாரைத்தான் கௌரவித்தது இந்த உலகு ?
த ம 10

Post a Comment