Friday, December 12, 2014

மூலம் அறிய முயல்வோம்

இயந்திரப் பராமரிப்புக்குச்
செய்யும் செலவினில்
பாதியளவு கூட
அதை இயக்குபவனுக்குச் செய்ய
மனமற்றுப்போகும் முதலாளி
நலிவடையவே அதிகச் சாத்தியம்

மூல நூலைப் படித்து
அதன் நுண்பொருள் அறிய முயலாது
விளக்கங்களைப் படித்தே
வித்துவானாகித் திரிபவன
அறிஞர்கள் சபையினில்
சறுக்கி விழவே சாத்தியம் அதிகம்

திரண்ட தோளும்
சிக்ஸ் பேக் உடற்கட்டும்
அழகென  மெனக்கெடுபவன்
மனப்பயிற்சி இல்லையெனில்
ஆரோக்கியம் இழக்கவே
நிச்சயம் அதிகச் சாத்தியம்

சடங்குகளில் சம்பிரதாயங்களில்
மனமதனை அடகுவைத்துவிட்டு
அதற்கான காரணம் அறியாது
அன்றாடம் தொடர்பவன்
பெறுவதனை விட
இழப்பதற்கே சாத்தியம் அதிகம்

காரணமற்ற காரியங்கள் மட்டும் அல்ல
மூலம் அறியாத காரியங்களுமே
மடத்தனம் என அறிவோம்
நடைபயணத்தில் காலடிக் கவனமாய்
செயல்பாடுகளின் மூலம் அறிய முயல்வோம்
பகுத்தறிவு மனிதனாய் நிலைத்து உயர்வோம் 

18 comments:

ப.கந்தசாமி said...

சிந்திக்கத் தூண்டுகிற கவிதை.

KILLERGEE Devakottai said...

நல்லதொரு கவிதைச்சாரல் மழை...
ஐயா வலைச்சரத்தில்.....

http://blogintamil.blogspot.ae/2014/12/blog-post_12.html

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

உண்மையான வரிகள் சொல்ல வேண்டிய விடயத்தை மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோவி said...

முயல்வோம் அய்யா..

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே!

காரணங்களை அறிந்து சிறப்பாக காரியங்களை முடிக்க உதவிடும் பயனுள்ள கவிதை!

ஒன்றினை முழுமையாக அறியாது செய்யும் செயல்களினால் பலனில்லை என்று ஒவ்வொன்றையும் முடித்த பாங்கு ரசிக்கும் விதமாய் இருந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!

தங்களுக்கு நேரமிருப்பின், என் புதிய பதிவை கண்டு கருத்திட்டால் மகிழ்ச்சியடைவேன்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

காரணமற்ற காரியங்களால் பயன் இல்லை என்று உணர்த்தும் கவிதை அருமை.

”தளிர் சுரேஷ்” said...

மிகச்சிறப்பான அறிவுரை! அழகாய் இருந்தாலும் வாசமில்லாத மலர் பூஜைக்கு உதவாது! அதுபோல மூலம் அறியாத காரணங்களும் என்று எளிமையாக புரியவைத்தமைக்கு நன்றி!

விச்சு said...

எதையுமே அதன் ஆரம்ப விடயத்தை அறிந்துகொண்டு செய்வது நன்று. அழகான கவிதை

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும் அழகான உயர்வான கருத்து! சொல்லியமைக்கு மிக்க நன்றி!

S.Venkatachalapathy said...

"மூலம் அறியாத காரியங்களுமே
மடத்தனம் என அறிவோம்"
ஜோதிடத்தை மட்டும் இந்தவகையில் சேர்க்க அதிகம் பேர் விரும்புவதில்லை. பயம் அல்லது பேராசை காரணமாக இருக்கலாம்.எனவே இதுவும் அறிவியல் என்று நியாயம் கற்பித்து இருக்கமாகப் பிடித்துக்கொண்டு பிறந்த குழைந்தைக்கு ஒரு மாதமாகியும் பெயர் அறிவிக்காமல் இருக்கும் ஒருவரை சமீபத்தில் பார்த்தேன்.
ஜோதிடம் ஒரு மூலம் தொலைந்த அறிவியல் தானே?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மிகவும் அருமையான சிந்தனை. இவ்வாறாக மூலம் அறியப்படும்போது பல தெளிவுகளைப் பெறலாம். அறியாத நிலையில் குழப்பங்களும், மூட நம்பிக்கைகளுமே அதிகம் காணப்படும்.

திண்டுக்கல் தனபாலன் said...

உணர வேண்டிய சிந்தனை ஐயா...

கரந்தை ஜெயக்குமார் said...

//நடைபயணத்தில் காலடிக் கவனமாய்
செயல்பாடுகளின் மூலம் அறிய முயல்வோம்
பகுத்தறிவு மனிதனாய் நிலைத்து உயர்வோம் //
பகுத்தறிவு மனிதனாய் நிலைத்து உயர்வோம்

கரந்தை ஜெயக்குமார் said...

தம 5

KILLERGEE Devakottai said...

ஐயா வலைச்சரத்தில்.....தாங்கள்,,,,

Unknown said...

நதி மூலம் .ரிஷி மூலம் மட்டுமல்ல ,பல மூலங்களைத் தெரிந்து கொண்டால் முட்டாள்தனமாகவே இருக்க வாய்ப்புண்டு !
த ம +1

Anonymous said...

நடைபயணத்தில் காலடிக் கவனமாய்
செயல்பாடுகளின் மூலம் அறிய முயல்வோம்
பகுத்தறிவு மனிதனாய் நிலைத்து உயர்வோம் ----
nanru...nanru....
Vetha.Langathilakam.

Yarlpavanan said...

"காரணம் அறியாது
அன்றாடம் தொடர்பவன்
பெறுவதனை விட
இழப்பதற்கே சாத்தியம் அதிகம்" என்பதில்
உண்மை இருக்கு
சிறந்த வழிகாட்டல்
நல்ல எடுத்துக்காட்டுகள்
தொடருங்கள்

Post a Comment