Wednesday, December 31, 2014

உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்
தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்  
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே 

26 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே //

அருமை. இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Mythily kasthuri rengan said...

அய்யா! வாழ்த்திற்கு நன்றி. தங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

அம்பாளடியாள் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா ! மலரும் ஆண்டு மகிழ்வு தரும் ஆண்டாக மலர்ந்திட வாழ்த்துக்கள் .

KILLERGEE Devakottai said...

வாழ்க வளமுடன்
இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்

இளமதி said...

வணக்கம் ஐயா!

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

பழனி. கந்தசாமி said...

புது வருட வாழ்த்துக்கள்.

கவிதையின் பொருளைப் புரிந்து கொள்ள அவகாசம் தேவை.

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
தம 3

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

ADHI VENKAT said...

தங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

டும் டும் டும் கொட்டி புத்தாண்டை வரவேற்கும் வாழ்த்துக் கவிதை அருமை அற்புதம் அட்டகாசம்

Mathu S said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ரூபன் said...

வணக்கம்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவியாழி கண்ணதாசன் said...

புதுவருடத்தில் வசந்தம் பிறக்கட்டும்

ஆறுமுகம் அய்யாசாமி said...

தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா

Ramani S said...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
டும் டும் டும் கொட்டி புத்தாண்டை வரவேற்கும் வாழ்த்துக் கவிதை அருமை அற்புதம் அட்டகாசம்//

படைப்பின் மிகச் சரியான நோக்கமறிந்து
பின்னூட்டமிடப்படுவதை விட
அதிக மகிழ்வளிப்பது வேறேதும் இல்லை
மிக்க நன்றி.வாழ்த்துக்களுடன்...

Yarlpavanan Kasirajalingam said...

தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Sasi Kala said...

கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே ..அற்புதமான ஆக்கம். முரசு அடித்து பாடலாம்.

yathavan nambi said...

எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

"புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

என்றும் நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr

கவிஞா் கி. பாரதிதாசன் said...


வணக்கம்!

பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
நானுாறும் வண்ணம் நடந்து!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

தி.தமிழ் இளங்கோ said...

கவிஞர் எஸ்.ரமணி அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.

த.ம.9

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

G.M Balasubramaniam said...

எதிர்பார்ப்புகள் கூடவே இருந்தாலும் நிறைவேற கூடவே வழி மொழிகிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

‘தளிர்’ சுரேஷ் said...

நன்மை சிறந்து தீமைவிலகட்டும்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

‘தளிர்’ சுரேஷ் said...

நன்மை சிறந்து தீமைவிலகட்டும்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Thulasidharan V Thillaiakathu said...

வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே //

அருமை அருமை!! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்!

Post a Comment