Wednesday, December 17, 2014

ஆடுகள் இடையில் சிங்கமென நாமும்.....

உழைத்துக் களைத்தவன்
மீண்டும் துள்ளி எழ
புத்துணர்ச்சி பெற
என இருந்த கலைகள் எல்லாம்

ஓய்ந்து கிடப்பவனுக்கும்
உளறித் திரிபவனுக்கும்
ஊன்றுகோல் ஆகிப் போய்
வெகு நாளாகிவிட்டது

மனத்தளவில்
பள்ளத்தில் கிடப்பவனை மேட்டுக்கும்
மேட்டில் இருப்பவனை உச்சத்திற்கும்
ஆற்றுப் படுத்திக் கொண்டிருந்த
கலைகள் எல்லாம்

நிற்பவனைத் தள்ளாடச் செய்யவும்
தள்ளாடுபவனை வீழச் செய்யவுமான
சதுப்பு நிலமாகிப் போய்
வெகு காலமாகிவிட்டது

தேவையான உணவுக்கும்
பசிக்கும் இடையினில்
நொறுக்குத் தீனியாய் இருந்த
கலைகள் எல்லாம்

துரித உணவாகி
அதுவே முழு உணவாகி
சக்திக்குப் பதில்
விஷமேற்றும் பொருளாகி
வெகு காலமாகிவிட்டது

இந்நிலையில் கவி முலம்
அறம் கூறி அறிவுரை கூறி
காணாமல் போகாதே
"ஐய்யோ பாவமென்னும்" பட்டமேற்று
பரிதவித்துப் போகாதே

"டைம் பாஸுக்கென "
தனிப்புத்தகமே வந்தபின்
காலத்தின் அருமையைச்
சொல்ல முயலும்
முட்டாள்  நிலை  நமக்கெதற்கு  ?

விஷத்தின் மீது தேன்தடவி
விற்கிற கலையினைப்பயின்று
கவிதைகள் புனைவோம் வா
ஆடுகள் இடையில் சிங்கமென நாமும்
சிலிர்த்துத் திரிவோம் வா

17 comments:

ஸ்ரீராம். said...

கோவணம் கட்டிய ஊரில்...


:))))))))

இராஜராஜேஸ்வரி said...

டைம் பாஸுக்கென "
தனிப்புத்தகமே வந்தபின்
காலத்தின் அருமையைச்
சொல்ல முயன்று
முட்டாள் பட்டம் எதுக்கு ?

கவிதை புனையும் சிங்கம்..

UmayalGayathri said...

உழைத்துக் களைத்தவன்
மீண்டும் துள்ளி எழ
புத்துணர்ச்சி பெற
என இருந்த கலைகள் எல்லாம்

ஓய்ந்து கிடப்பவனுக்கும்
உளறித் திரிபவனுக்கும்
ஊன்றுகோல் ஆகிப் போய்
வெகு நாளாகிவிட்டது //

ஆம் ஐயா
தம் 2

ADHI VENKAT said...

//விஷத்தின் மீது தேன்தடவி
விற்கிற கலையினைப்பயின்று
கவிதைகள் புனைவோம் வா
ஆடுகள் இடையில் சிங்கமென நாமும்
சிலிர்த்துத் திரிவோம் வா//

என்ன செய்வது....
த.ம +1

ShankarG said...

ஆடுகள் இடையே சிங்கமென நாமும் பெரும்பாலோரின் கருத்துக்களை பிரதிபளிப்பதாக உள்ளது. நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

"டைம் பாஸுக்கென "
தனிப்புத்தகமே வந்தபின்
காலத்தின் அருமையைச்
சொல்ல முயலும்
முட்டாள் நிலை நமக்கெதற்கு ?//

அருமையான வரிகள்! ஆதங்கம்???!!!

தி.தமிழ் இளங்கோ said...

நாட்டு நடப்பை நன்றாகவே சொன்னீர்கள்.
த.ம.4

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

கருத்து நிறைந்த கவிதை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

அருமையான உவமைகள்! சிறப்பான கவிதை! நன்றி!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அவ்வாறு சிங்கமென வரும்போது கண்டிப்பாக நாம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுத் தெரிவோம். அருமையான நேர்மறை எண்ணங்கள்.

yathavan64@gmail.com said...

நண்பரே!
உள்ளத்தில் உள்ளது கவிதை
உணர்ச்சி பொங்கி எதிரொலிப்பது கவிதை!
என்பார்கள். ஆனால்?
"விஷத்தின் மீது தேன்தடவி
விற்கிற கலையினைப்பயின்று
கவிதைகள் புனைவோம் வா"
இன்றைய(like POINT) கவிதை குறித்து
குமுறித் தான் போய் இருக்கிறீர்கள்!
எளிமை! எதார்த்தம். அருமை!
நன்றியுடன்,
புதுவை வேலு

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான வரிகள் ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

தம 6

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய நிலை - சரி தான் ஐயா...

கோமதி அரசு said...

விஷத்தின் மீது தேன்தடவி
விற்கிற கலையினைப்பயின்று
கவிதைகள் புனைவோம் //

காலத்துக்கு ஏற்றமாதிரி கவிதையை படைக்க வேண்டிய நிலைமையை சொல்லும் கவிதை அருமை.

அருணா செல்வம் said...

இன்றைய நிலையை அழகாகச் சொன்னீர்கள்.
இருந்தாலும்....
நல்லதையே சொல்லுங்கள் இரமணி ஐயா.

Post a Comment