Monday, January 19, 2015

வ(வி)சன கவிதை

பேருந்து நிலையங்களில்
விற்கப்படும் பொட்டலங்களில் இருக்கும்
அவித்த கடலை போலவும்..

அடுக்கு மொழிக்காரரின்
நீண்ட சொற்தொடருக்குள் இருக்கும்
சிறு விஷயம் போலவும்...

தடித்துக் கனத்தத்
தோள் நீக்கக் கிடைக்கும்
சிறு பலாச் சுளைப்  போலவும் 

மாதாந்திர கடனையெல்லாம்
அடைத்தப்பின் மிஞ்சும்
மாதச் சம்பளம் போலவும்....

விளம்பரங்களுக்கு இடையிடையே
வந்து போகும்
தொலைக்காட்சித் தொடர்போலவும்

ஆடம்பர அலங்காரங்களுக்குள்
மூச்சுத் திணறும்
உண்மை அழகு போலவும்

இசையின் இரைச்சலுக்குள்
புதைந்துத் தவிக்கும்
சினிமாக் கவிதை போலவும்
...
இலக்கண விதிகளுக்குள்
கருவையும்  கருத்தையும்
ஒண்டிக்கிடக்க விரும்பாதுதான்..

மரபின் மாண்பினை
நன்கு அறிந்தும்
ஒதுங்கிச் செல்கின்றோம்

காலச் சூழலில்
துரித உணவே
சாத்தியம் என்பதாலேயே

பந்தியைத் தவிர்த்து
கையேயேந்தி பவனில்
"கொட்டிக் " கொள்கின்றோம்

16 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மரபுகளைத் தொலைப்பதோடு நம் சுயத்தையும் இழக்கிறோம் என்பதே உண்மை.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
உண்மையான வரிகள்.. மிக அருமையான கருத்தாடல் எல்லாம் அறியாமை...பகிர்வுக்கு நன்றி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

"மரபு என்பது என்ன விலை...?" இன்றைய நிலை...!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை.

ஆத்மா said...

காலத்துக்கேற்றமாதிரி மாறிக்கிட்டேயிருக்கனும் சார் :)

ப.கந்தசாமி said...

நல்ல கருத்துகள், ரசித்தேன்.

பால கணேஷ் said...

கடினமான பாதையை விலக்கி எளிய பாதையில் நடைபோடத்தான் எல்லாரும் விரும்புகின்றனர். என்ன செய்வது?

இளமதி said...

மரபை மறக்கவில்லை!.. மறந்ததும் இல்லை...!
இன்றைய வாழ்வியலுடன் தொட்டுக் காட்டிச்
சிறப்பித்தீர்கள் ஐயா!
வாழ்த்துக்கள்!

UmayalGayathri said...

காலச் சூழலில்
துரித உணவே
சாத்தியம் என்பதாலேயே

பந்தியைத் தவிர்த்து
கையேயேந்தி பவனில்
"கொட்டிக் " கொள்கின்றோம்//

வாஸ்தவம் ஐயா.

”தளிர் சுரேஷ்” said...

அருமை! கையேந்தி பவனிலும் சுவையிருப்பதால்தானே கூட்டம் கூடுகிறது ஐயா? நன்றி!

சென்னை பித்தன் said...

புதுக்கவிதைன் வீச்சூ அதிகம்தான் ரமணி!
தம+1

Thulasidharan V Thillaiakathu said...

மரபின் மாண்பினை
நன்கு அறிந்தும்
ஒதுங்கிச் செல்கின்றோம்//

ஆம் உண்மையே! எல்லோருக்கும் கை சொடுக்கும் நேரத்தில் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று துரிதமாக நினைப்பதால்...மரபு சற்று ஒதுங்கித் தொலைந்து தான் போகும்...ஆனால் கையேந்திபவனிலும் சுவை இருக்கதான் செய்கின்றது....அதையும் மறுக்க இயலவில்லையே

Yarlpavanan said...

வ(வி)சன கவிதை பற்றிய
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

V. Chandra, B.COM,MBA., said...

கவிதை அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

வ(வி)சன கவிதையின் ஒப்பீடுகள் அபாரம் :) பாராட்டுக்கள்.

Post a Comment