Monday, May 25, 2015

ஸ்பான்ஸர் ( 2 )

டாக்டரின் பையன் அவனா இவன் என்று
ஆச்சரியப்படும்படியாக மிகவும்
மாறிப் போயிருந்தான்

மிக உயர்ந்த பதவியில் இருப்பதற்கான
மிடுக்கும் செல்வச் செழிப்பின் பூச்சும்
என்னையும் அறியாது எழுந்து நிற்கச்செய்தது

உள்ளே நுழைந்து என்னைப் பார்த்ததும்
சட்டென ஆச்சரியமுற்று என் பெயருடன்
அங்கிள் என்கிற வாரத்தையையும் சேர்த்து
" என்ன ஆச்சரியம். நானே உங்கள் வீட்டிற்கு
நாளை வரலாம் என இருந்தேன்
நீங்கள் வந்திருப்பது ரொம்பச் சந்தோஷம்
இருங்கள் ஒரு நொடியில் உடை மாற்றிக்
கொண்டு வந்து விடுகிறேன் " எனச் சொல்லி
உள்ளே போனான்

அவனுடைய கல்லூரி நாட்களில்
எங்கள் வீட்டின் முன்பு உள்ள சாலையில்
தினமும் மாலையில் நடக்கும் கிரிக்கெட்
விளையாட்டில் தினமும் இவனும்
கலந்து கொள்வான்

சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் இந்த
விளையாட்டு காலை ஆறு மணி முதல்
பத்து மணி வரையும் மாலையில்
நான்கு மணி தொடங்கி இருட்டும்
வரையும் தொடரும்

எனக்கும் கிரிகெட்டில் அதிகம் ஆர்வம் உண்டு
என்பதாலும் சிறு வயதில் போட்டிகளில்
கலந்து கொண்டு விளையாடும் அளவு
கிரிக்கெட்டில் தேர்ச்சி இருந்ததாலும்
நான் நடு வயதுக் கடப்பவனாக
அப்போது இருந்தாலும் ஆர்வமாக அவர்களுடன்
விளையாட்டில் கலந்து கொள்வேன்

எங்கள் சாலை கொஞ்சம் போக்குவரத்து
இருந்த சாலையாக இருந்தது

பஸ் லாரிபோக வழிவிட்டு ,.....

யாரும் வந்தால் கொஞ்சம் பௌலிங்கை நிறுத்தி ....
.
தப்பித் தவறி யார் மீது பந்து விழுந்து விட்டால்
( இரப்பர் பந்துதான் ஆனாலும் )
அவர்களைச் சமாதானப் படுத்தி..

அவ்வப்போது வீட்டு ஜன்னலை பதம் பார்க்கிற
அல்லது வீட்டினுள் போகிற நிலையில்
ஏற்படுகிற கோபதாபங்களை சரிப்படுத்தி...

இவர்கள் தொடர்ந்து விளையாடுவார்கள்

இரண்டு அணிகளாகப் பிரிகையில் ஆட்கள்
குறைந்தால் ஒரு பக்கம் சேர்ந்தும்
மிகச் சரியாகப் பிரியுமானால நடுவராகவும்
எல்லாம் சரியாக இருந்தால் வாசல் பெஞ்சில்
பார்வையாளராகவும் இந்தத் தெரு விளையாட்டில்
என்னை  நானும் முழுமையாக இணைத்துக்
கொள்வேன்

ஜென்ரேஷன் கேப் என்பதாலோ அல்லது
இயல்பாக வெளியில் அமர முடியவில்லை
என்பதாலோ எனது தெருவில் இவர்கள்
விளையாடுவதற்கு கொஞ்சம் அதிருப்தி இருந்தது

பேட் ஸ்டம்புகளை வாங்கி வீட்டில் வைத்திருப்பது..

வாசலில் குடத்தில் தண்ணீர் வைத்திருப்பது..

இடையிடையே விளையாட்டில் கலந்து கொள்வது
பந்து உடைந்து போனாலோ அல்லது
சிக்ஸரில் பக்கத்தில் இருந்த ஒரு காலி மனை
முள் புதருக்குள் காணாமல் போனாலோ
உடன் வீட்டில் ஸ்டாக் வைத்திருக்கிற பந்திலிருந்து
விளையாட்டு நிற்காமல் எடுத்துக் கொடுப்பது..

இப்படி பலவகைகளிலும் நானும் இந்த விளையாட்டில்
என்னை ஈடுபடுத்திக் கொண்டதாலும்

இந்த தெருவிலுள்ள சங்கத்தில் நான் நிர்வாகியாக
இருந்ததால் இங்கு விளையாடுவ்து பலருக்கு
பிடிக்கவில்லையென்றாலும் எனக்காக கொஞ்சம்
சகித்துக் கொண்டுதான் இருப்பார்கள்

நான் ஊரில் இல்லாத நாட்களில் கொஞ்சம்
தள்ளியிருந்த விளையாட்டுத் திடலில் விளையாடப்
போவார்களே ஒழிய இங்கு விளையாட மாட்டார்கள்

அந்த அளவு இந்தத் தெரு விளையாட்டுக்கு நான்
பக்க பலமாக இருந்திருக்கிறேன்

அந்த விளையாட்டுக் குழுவில் இந்த
டாகடர் பையனும் இருந்திருக்கிறேனே ஒழிய
வேறு எந்த வகையிலும் எனக்கும் அவனுக்கும்
அதிக நெருக்கமில்லை

அதனால் அவன் என்னை ஞாபகம் வைத்திருப்பது
ஆச்சரியமளிக்க வில்லையென்றாலும் அவசியம்
வீடு தேடி வந்து பார்க்கவேண்டும்  என்று
சொல்லி இருந்ததும் பரிசுப் பொருள் எனக்கென
வாங்கி வந்திருக்கிறேன் எனச் சொல்லி இருந்ததும்
எதற்காக என்பது விளங்காததால் வந்த குழப்பம்
தீராமல் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தேன்

(தொடரும் )

11 comments:

ப.கந்தசாமி said...

இன்னும் சஸ்பென்ஸ்?

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இப்படி பலவகைகளிலும் நானும் இந்த விளையாட்டில் என்னை ஈடுபடுத்திக் கொண்டதாலும்//

ஒவ்வொரு மிகச்சிறிய விஷயங்களையும் மிக அழகாக தங்களுக்கே உரிய பாணியில் எடுத்துச்சொல்லியுள்ளது, படிக்கும்போது எனக்கு பரம திருப்தியாக உள்ளது. பாராட்டுகள். மேலும் தொடரட்டும் ....... :)

G.M Balasubramaniam said...

தொடரென்றால் அடுத்தடுத்து வெளியிடக் கோருகிறேன் வாழ்த்துக்கள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
தங்களின் தொடர் பதிவை படித்தேன் மிக நேர்த்தியாக செல்லுகிறது நன்றாக உள்ளது படிப்பதற்கு.. தொடருங்கள் அடுத்த பதிவை. பகிர்வுக்கு நன்றி த.ம 2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

UmayalGayathri said...

ஆவலுடன் அடுத்த பதிவிற்கு...தம +1

ezhil said...

சுவாரசியமான இடத்தில் தொடரும் போட்டுட்டீங்களே சார்...

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
சஸ்பென்ஸ் தொடருகிறதா

சென்னை பித்தன் said...

காத்திருக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

தொடரும் சஸ்பென்ஸ்... இரண்டு பகுதிகளையும் ஒன்றாக படித்து விட்டேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

காத்திருக்கிறேன்...

தி.தமிழ் இளங்கோ said...

// இங்கு விளையாடுவ்து பலருக்கு பிடிக்கவில்லையென்றாலும் எனக்காக கொஞ்சம் சகித்துக் கொண்டுதான் இருப்பார்கள் //

அதானே பார்த்தேன். எல்லா ஊரிலும் இப்படித்தான் இருக்கிறார்கள்.

த.ம.7

(அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்ததால், இன்றுதான் படிக்க முடிந்தது. தாமதத்திற்கு மன்னிக்கவும்)

Post a Comment