ஒரு பேச்சாளர் மேடையேறி
மைக் பிடிக்கும் தன்னம்பிக்கையை வைத்தே
இவர் சிறந்த பேச்சாளரா இல்லையா என்பதை
பெரும்பாலும் அனுமானித்துவிடமுடியும்
அதைப்போலவே ஒரு பெரும் நிகழ்ச்சிக்கு
பொறுப்பேற்கிறவர் நிச்சயம் அவர் மிகச் சிறப்பாகச்
செய்து முடித்துவிடுவார் என்பதை அவர்
செய்கின்ற பூர்வாங்க ஏற்பாடுகளை வைத்தே
மிகச் சரியாக அனுமானித்துவிடமுடியும்
அந்த வகையில் முத்து நிலவன் ஐயா அவர்கள்
தலைமையில் புதுகை பதிவர் திருவிழா
ஏற்பாடுகளைச்செய்யத் துவங்கி இருக்கிற
புதுகை பதிவர்கள் பதிவர் சந்திப்பினை
மிகச் சிறப்பாகச் செய்து முடிக்க பல்வேறு
புதிய முயற்சியினை மேற்கொண்டுவருகிறார்கள்
இருந்தாலும் கூட பதிவர்கள் இதுவரை முடிந்த
பதிவர் சந்திப்பை விட இந்தச் சந்திப்பை
மிகச் சிறப்பான சந்திப்பாக்க ஏதேனும் ஆலோசனைகள்
இருப்பின் அதைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்
என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பது
இன்று மதுரையில் அந்தத் துடிப்பு மிக்க பதிவர்கள்
சிலரைப் பார்த்துப் பேசுகையில் புரிந்தது
முதலாவதாக
எப்போதும் பதிவர் சந்திப்பில் மிகச் சரியாகவும்
முறையாகவும் விரைவாகவும் பதிவர்கள்
அனைவரையும் அறிமுகம் செய்வது
ஒரு சவாலான விசயமாகவே இருக்கிறது
என்னுடைய ஆலோசனையாக பதிவர்கள்
தங்களைக் குறித்து அவர்களே அறிமுகம் செய்யாது
மாவட்ட வாரியாக பதிவர்களை மேடையேற்றி
மாவட்டத்தின் சார்பாக யாரேனும் ஒருவர் வரிசையாக
அறிமுகம் செய்தால் சரியாக இருக்கும் என்பது
என்னுடைய கருத்து
ஏனெனில் எப்படித்தான் வலியுறுத்திச் சொல்லியும்
மிக நன்றாகப் பேசவும் தெரிந்த பதிவர்கள்
அவர்களையும் அறியாது கொஞ்சம் கூடுதல் நேரம்
எடுத்துக் கொண்டுவிடுகிறார்கள்
அது குறித்து பதிவர்கள் தங்கள் கருத்துக்களைப்
பதிவு செய்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்
என நினைக்கிறேன்
தொடர்புக்கு
bloggersmeet2015@gmail.com
(தொடரும் )
மைக் பிடிக்கும் தன்னம்பிக்கையை வைத்தே
இவர் சிறந்த பேச்சாளரா இல்லையா என்பதை
பெரும்பாலும் அனுமானித்துவிடமுடியும்
அதைப்போலவே ஒரு பெரும் நிகழ்ச்சிக்கு
பொறுப்பேற்கிறவர் நிச்சயம் அவர் மிகச் சிறப்பாகச்
செய்து முடித்துவிடுவார் என்பதை அவர்
செய்கின்ற பூர்வாங்க ஏற்பாடுகளை வைத்தே
மிகச் சரியாக அனுமானித்துவிடமுடியும்
அந்த வகையில் முத்து நிலவன் ஐயா அவர்கள்
தலைமையில் புதுகை பதிவர் திருவிழா
ஏற்பாடுகளைச்செய்யத் துவங்கி இருக்கிற
புதுகை பதிவர்கள் பதிவர் சந்திப்பினை
மிகச் சிறப்பாகச் செய்து முடிக்க பல்வேறு
புதிய முயற்சியினை மேற்கொண்டுவருகிறார்கள்
இருந்தாலும் கூட பதிவர்கள் இதுவரை முடிந்த
பதிவர் சந்திப்பை விட இந்தச் சந்திப்பை
மிகச் சிறப்பான சந்திப்பாக்க ஏதேனும் ஆலோசனைகள்
இருப்பின் அதைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்
என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பது
இன்று மதுரையில் அந்தத் துடிப்பு மிக்க பதிவர்கள்
சிலரைப் பார்த்துப் பேசுகையில் புரிந்தது
முதலாவதாக
எப்போதும் பதிவர் சந்திப்பில் மிகச் சரியாகவும்
முறையாகவும் விரைவாகவும் பதிவர்கள்
அனைவரையும் அறிமுகம் செய்வது
ஒரு சவாலான விசயமாகவே இருக்கிறது
என்னுடைய ஆலோசனையாக பதிவர்கள்
தங்களைக் குறித்து அவர்களே அறிமுகம் செய்யாது
மாவட்ட வாரியாக பதிவர்களை மேடையேற்றி
மாவட்டத்தின் சார்பாக யாரேனும் ஒருவர் வரிசையாக
அறிமுகம் செய்தால் சரியாக இருக்கும் என்பது
என்னுடைய கருத்து
ஏனெனில் எப்படித்தான் வலியுறுத்திச் சொல்லியும்
மிக நன்றாகப் பேசவும் தெரிந்த பதிவர்கள்
அவர்களையும் அறியாது கொஞ்சம் கூடுதல் நேரம்
எடுத்துக் கொண்டுவிடுகிறார்கள்
அது குறித்து பதிவர்கள் தங்கள் கருத்துக்களைப்
பதிவு செய்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்
என நினைக்கிறேன்
தொடர்புக்கு
bloggersmeet2015@gmail.com
(தொடரும் )
19 comments:
பிற பதிவர்களி் கருத்துரைகள் கேட்பது நல்ல செயலே....
தமிழ் மணம் 2
நன்றி அய்யா
நல்ல ஆலோசை !அனைவரும் ஒன்று கூடி இவ் விழாவினைச் சிறப்பாகக்
கொண்டாட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா .
//என்னுடைய ஆலோசனையாக பதிவர்கள்
தங்களைக் குறித்து அவர்களே அறிமுகம் செய்யாது மாவட்ட வாரியாக பதிவர்களை மேடையேற்றி மாவட்டத்தின் சார்பாக யாரேனும் ஒருவர் வரிசையாக அறிமுகம் செய்தால் சரியாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து//
நல்ல யோசனை. நேரம் மிச்சமாகும். வேறு நிகழ்ச்சிகளுக்கு நேரம் கிடைக்கும்.
//என்னுடைய ஆலோசனையாக பதிவர்கள்
தங்களைக் குறித்து அவர்களே அறிமுகம் செய்யாது மாவட்ட வாரியாக பதிவர்களை மேடையேற்றி மாவட்டத்தின் சார்பாக யாரேனும் ஒருவர் வரிசையாக அறிமுகம் செய்தால் சரியாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து//
ஒவ்வொருவரையும் தனித்தனியே மேடையேற்றி அவர்களாக தங்களை அறிமுகம் செய்வதே நல்லது. அவர்களுக்கு அதுவே ஒரு பெருமையாக இருக்கும். பதிவர் அறிமுகமே விழாவில் பிரதானமாக இருக்க வேண்டும். அறிமுகத்தைக் கருத்தில் கொண்டு மற்ற நிகழ்சிகளின் நேரத்தை சுருக்கிக் கொள்ள வேண்டும்.
இது என் கருத்து ஐயா...
தமிழ்வாசி பிரகாஷ் //
பதிவர் ஒவ்வொருவரைக் குறித்தும் தொடர்ந்து
அவரது பதிவுகளைப் படிப்பதன் மூலம்
மிகத் தெளிவாகத் தெரிந்தும்
புரிந்தும் வைத்திருக்கிறோம்
எனவே அவர் குறித்து அவர் மீண்டும்
தன்னை அறிமுகம் செய்து கொள்வதை விட
அவர்தான் இவர் என பெயரையும் அவருடைய
வலைத்தள முகவரியையும் அறிமுகம் செய்தாலே போதும்
சிலருடைய எழுத்துக்கு சிலர் மானசீக
இரசிகர்களாகவே இருக்கிறார்கள்
அவரை சந்தித்து உரையாடி மகிழவேண்டும் என்கிற
ஆவலோடு சந்திப்புக்கு வருகிறார்கள்
அப்படிபட்டவர்களுக்கு அந்தக் கூட்டத்தில்
அவர்தான் இவர் என்பது தெரியாததால்
தேடிக் கொண்டிருக்கவேண்டியதாய் இருக்கிறது
அவரை மேடையில் அறிமுகம் செய்துவிட்டால்
சந்திக்க விரும்புவர்கள் அவரை உடன் தொடர்பு
கொள்ள வசதியாக இருக்கும்
மற்றபடி பதிவர் தன் பதிவுகள் மற்றும்
பதிவராய் இருப்பதன் நோக்கம்
அதன் மூலம் தான் பெற்ற இன்பம்
மற்றும் நண்பர்கள் என விலாவாரியாகப் பேசத்தான்
வலைத்தளமே இருக்கிறதே
மீண்டும் அதையே சந்திப்பிலும் தொடர்தல்
"கூறியது கூறல் "என்பது மட்டுமல்லாது
பிற நிகழ்வுகளுக்கு குறிப்பாக புத்தக வெளியீடு
சிறப்பு விருந்தினரின் சிறப்புரை
தொழில் நுட்பப் பகிர்தல்
முதலானவைகளுக்கு போதுமான
நேரமில்லாது போய்விடுகிறது
என்பதாலேயே இப்படிச் செய்யலாமே
என ஒரு ஆலோஸ்னையைப் பதிவு செய்திருக்கிறேன்
மாறுபட்ட கருத்தையும் பதிவு செய்தது சிறப்பு
ஏனெனில் அதைப் பொருத்தே எப்படிச் செய்தால்
நல்லது என்பதை விழா ஏற்பாட்டாளர்கள்
முடிவு செய்ய வசதியாக இருக்கும்
பதிவர் அனைவரையும் மேடையேற்றி ஒரு சில வார்த்தைகள் பேச அனுமதிப்போமேயானால் , பதிவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றே எண்ணுகின்றேன் ஐயா
தம +1
என் அறிமுகம் எப்படியிருக்க வேண்டுமென்று என்னிடமே எழுதி வாங்கிக் கொண்டால் நல்லது :)
பதிவர் சந்திப்பில் ஒவ்வொரு பதிவரும் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளசந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அதைத் தலைவர் கட்டுக்குள் கொண்டுவருவதே சிறப்பாக அமையும். தொழில் நுட்ப அறிமுகம் எல்லோர் புரிதலுக்கும் அப்பாற்பட்டது. அதே போல் நூல் வெளியீட்டு விழா ஆசிரியர்களது பொறுப்பாக வேண்டும் சிறப்புப் பேச்சாளர் என்பது தவிர்க்கப் படவேண்டும் பதிவர்களில் பேச விரும்புபவர் முதலிலேயே அனுமதியும் நேரமும் பெற வேண்டும் பதிவர்களிடையே பழக நேரம் ஒதுக்கப் பட வேண்டும் அந்த நேரத்தில் யார் யாரிடம் பேசபழக விரும்புகிறார்களோ அதன் படி செய்யலாம்.
ஒவ்வொருவரும் தம்மை (மிகச் சுருக்கமாக) அறிமுகப்படுத்துவதே சிறந்த முறையாக இருக்கும் என நான் கருதுகிறேன்.
மேடையில் ஏறினால் பல நண்பர்கள் அதிக நேரம் எடுத்துக் கொண்டு பல பதிவர்களுக்கு பேச நேரம் இல்லாமல் செய்து விடுகின்றனர். எனவே கவிஞர் ரமணி அவர்களின் கருத்தே எனது கருத்தும் ஆகும். அதில் ஒரு திருத்தம். மேடையில் (வெளியிடப் போகும் வலைப்பதிவர் கையேட்டில் உள்ளபடி) பதிவரை அறிமுகப்படுத்தும் பொறுப்பை இரண்டு அல்லது மூன்று வலைப்பதிவர்கள் எடுத்துக் கொள்ளலாம். (ஒருவரே தொடர்ந்து செய்ய முடியாது என்பதால்)
உங்கள் கருத்தோடு ஒத்து போகின்றேன் ஐயா! பதிவர் அறிமுகத்தோடு கலந்துரையாடலும் முக்கியம்! நன்றி!
உங்களது இந்த பங்களிப்பால் விழா மேலும் சிறப்படையும் அய்யா! புதுகை பதிவர் வட்டம் சார்பாக எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்:)
தங்கை மைதிலியை வழிமொழிந்து நானும் தங்களின் ஆலோசனைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
தங்களைப் பின்பற்றி நமது வலைப்பதிவர் விழாவைச் சிறப்பாக நடத்துவதற்கான யோசனைக்ளை எதிர்பார்க்கிறோம் அய்யா. நன்றிகள் பல.
மதுரையில் தங்களைச் சந்தித்ததை நாங்கள் மறக்க முடியாதவாறு தங்களின் அன்பான விருந்தோம்பல் இருந்தது ஐயா. அதோடு தாங்கள் அன்புடன் வழங்கிய
ரூ.2,000 நன்கொடையும் பற்றிச் சொன்னபோது எம்து விழாக் குழுவினர் அடைந்த மகிழ்சசிக்கு அளவில்லை அய்யா.
த.ம.10
வலைப்பதிவர் சந்திப்பு விவாதங்கள் மூலம் கலைக்கட்டத் தொடங்கி விட்டது. சுருக்கமாக தங்களை பதிவர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டால் விழா சிறக்கும். அதற்கான நேரத்தை கடுமையாக பின்பற்றினால் நல்லது.
த ம 11
சந்திப்பின் ஒரு முக்கிய பகுதி அறிமுகம்!எனவே பதிவர்கள் தங்கள் பெயர்,மற்றும் வலைப்பூவின் பெயர் மட்டும் கூறி அறிமுகம் செய்து கொண்டால் போதுமானது என்பது அவர்களுக்கு தெரியப்படுத்தப் பட வேண்டும்
நல்ல யோசனை. ஒவ்வொருவருக்கும் பெயர், இருப்பிடம், வலைப்பூ முகவரி ஆகியவற்றை மட்டும் சொன்னால் போதுமானது என்பதை முன்னரே தெரிவித்து விடுவது நல்லது.
Post a Comment