இல்லை யென்று சொல்பவனும் மூடனே-அவனை
மறுத்து வெல்ல நினைப்பவனும் மூடனே
உள்ளத் தாலே உணரலாகும் ஒன்றையே-தனது
அறிவு கொண்டு தேடுவோனும் மூடனே
சுழித்து ஓடும் ஆறதனின் குளுமையை-கரையில்
நின்று கொண்டு உணர்ந்திடவும் கூடுமோ ?
குளித்து குளிரின் நடுங்குவோனின் நிலையதை-கரையில்
ஒதுங்கி நின்றோன் நடிப்பென்றால் விளங்குமா ?
எரிக்கும் பசியில் துடிப்பவனின் அவஸ்தையை-உண்டு
நெளிந்துக் கிடப்போன் உணர்ந்திடவும் கூடுமோ ?
பசிக்க வென்று ஓடுபவனின் நிலையதை-பசியில்
துடித்து நிற்போன் புரிந்திடவும் கூடுமோ ?
உண்டு என்று சொல்லியிங்குப் பிழைக்கவும்-தெய்வம்
இல்லை யென்றுச் சொல்லிநன்குச் செழிக்கவும்
உண்டு இங்கு மனிதரென்று அறிந்திடு-அவர்கள்
சொல்லும் மொழியை உளறரென்று ஒதுக்கிடு
உந்தன் உள்ளம் கொள்ளுகின்ற நிலையதே-என்றும்
உண்மை யென்று உணர்ந்துநீயும் செயல்படு
இந்த முடிவில் யாவருமே நின்றிடின்-இங்கு
ஏய்த்துப் பிழைக்கும் எத்தராட்டம் ஒழிந்திடும்

10 comments:
இதற்கு போதுமான மனத்திடம் தேவை. தன்னம்பிக்கை தரும் கவிதை.
உண்டு என்று சொல்லியிங்குப் பிழைக்கவும்-தெய்வம்
இல்லை யென்றுச் சொல்லிநன்குச் செழிக்கவும்
உண்டு இங்கு மனிதரென்று அறிந்திடு
உண்மை
உண்மை ஐயா
அருமை
தம +1
நல்ல கவிதை.
அருமையாக உள்ளது.
நன்றி.
சில கருத்து வேறுபாடு கொண்டவர்கள் ஏய்த்துப்பிழைக்கும் எத்தர்களா?
Kadavul peyaral pizhaikkum evarum eththarkale undu enach sollip pizhaithaalum illai enach solip pizhaothaalum
சிறப்பான வரிகள்! வாழ்த்துக்கள்!
நல்ல கவிதை. த.ம. +1
அருமையான கவிதை ...
உண்டு என்று சொல்லி பிழைப்பார் பற்பலருண்டு.. இல்லை என்று சொல்லி செழிப்பார் சிலருண்டு.
இரண்டும் ஒன்று என்று சொல்வார் இங்குண்டு..
இது சரியோ தவறோ? சொல்வார் யாருண்டு
-SSK
Post a Comment