Sunday, August 2, 2015

பூந்தியாகும் லட்டுகள்

"ஸ்வீட் மாஸ்டர் பேசுகிறார்
என்னன்ன்னு கேளுங்கோ "என
அலைபேசியயைக் கொடுத்துப்போனாள் மனைவி

வாங்கிப் பேசினேன்

"அண்ணா ஒரு சின்னச் சங்கடம்
லட்டுக்கு ஆர்டர் கொடுத்திருந்தீர்கள் இல்லையோ
சின்ன ஆர்டர்ன்னு
அஸிஸ்டெண்டைப் பார்க்கச் சொல்லி இருந்தேன்
கொஞ்சம் பதம் விட்டுவிட்டான்
லட்டு இனி பிடிச்சா அதிகம் உதிரும்
மன்னிச்சுடுங்கோ
பூந்தியா பாக்கெட் செய்து கொடுத்திடறேனே " என்றார்

சரி இனி பேசிப் பயனில்லை எனப் புரிந்தது

"சரி அப்படியே செய்துடுங்கோ
இரண்டுக்கும் அப்படி என்ன வித்தியாசம் "என்றேன்
ஏதாவது சொல்லவேண்டுமே என்று

"ஒண்ணும் இல்லேண்ண
இரண்டுக்கும் சேர்மானம் செய்முறை எல்லாமே ஒன்றுதான்
சைஸ்தான் வித்தியாசம்
இது உருண்டை அது உதிரி " என்றார்

பல சமயம்
எப்படி முயன்றும்
ஒரு கட்டுக்குள் அடங்காது
வசனகவிதையாகிப் போன
சில மரபுக் கவிதைகளின் ஞாபகம்
ஏனோ எனக்கு உடன் வந்து போகுது

12 comments:

”தளிர் சுரேஷ்” said...

இனிப்பான உதாரணம்! பாராட்டுக்கள்! நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

வசனகவிதையாகிப் போன
சில மரபுக் கவிதைகள்
அருமை ஐயா
தம +1

காரஞ்சன் சிந்தனைகள் said...

இனித்தது! நன்றி ஐயா!

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமை ஐயா... ரசித்தேன்...

balaamagi said...

வணக்கம்,
மரபுக்கும் வசனத்திற்கும், நல்ல உதாரணம்,,,,,,,
அருமை, வாழ்த்துக்கள், நன்றி.

KILLERGEE Devakottai said...

கவிதை இனித்தது கவிஞரே...
தமிழ் மணம் 4

Admin said...

சிறப்பு

வலிப்போக்கன் said...

பூந்தியோ ,லட்டோ... சுவையாக இருந்தால் சரிதான்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல ஒப்புமை. நன்றி.

G.M Balasubramaniam said...

மரபுக் கவிதைக்கும் வசன கவிதைக்கு . பூந்தி லட்டுவுக்கு உள்ள வித்தியாசம்தானா.

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

..மரபுக் கவிதைக்கு பதம் மிகச் சரியாக
அமையாது போயின் அதை அப்படியே
விட்டுவிடுவதில்லை
கவித்துவத்திற்கான சேர்மானம் எல்லாம்
ஒன்றுதான் ஆயினும்
உருவ வித்தியாசம் வந்துவிடுகிறதே

Thulasidharan V Thillaiakathu said...

எதுவாக இருந்தால் என்ன ரசிப்போமே! கருத்துதானே முக்கியம்...உருவம் எப்படி இருந்தால் என்ன!!?

Post a Comment