Thursday, August 27, 2015

தமிழகத்திலும் வியாபம் ?

சமீபத்தில் எனது உறவினர் ஒருவர்
ஏதோ ஒரு இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டு
 அலைந்து திரிந்துஅவதிப்பட்டுக் கொண்டிருந்தார்
எனக் கேள்விப்பட்டேன்

என்ன ஏதென்று விசாரிக்கையில்
 வேலை வாங்கித் தருவதாக
ஒருவர்  பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி
அலைய விடுவதாகச் சொன்னார்கள்

தினமும் இதுபோன்றச் செய்திகள் பத்திரிக்கைகளில்
வருவதால் இது எனக்குப் பெரிய விஷயமாகப்
படவில்லை

ஆனாலும் நம்பிக் கொடுக்கத் தக்க நபராக அந்த
ஏமாற்றியவன் தெரியாததால் எப்படி அவரை நம்பி
பணத்தைக் கொடுத்தீர்கள் எனக் கேட்டபோதுதான்
அவர் ஒரு அதிர்ச்சித் தரும் செய்தியைச் சொன்னார்

ஒரு முன்னாள் மத்திய மந்திரியின் அரசு சார்ந்த
நேர்முக உதவியாளருக்கு தனிப்பட்ட எடுபிடியாக
இருந்த ஒருவர்இந்தபணம் கொடுத்து ஏமாந்தவருக்கு
நெடு நாள் பழக்கமாக இருந்திருக்கிறார்

அந்தப் பழக்கத்தில் ஒருநாள் அந்த ஏமாற்றுப் பேர்வழி
இந்த ஏமாந்தப் பேர்வழியிடம் தேர்வாணையத்திடம்
இருந்து அவர் பெயருக்கு வந்த வேலை
உத்திரவினைக் காட்டி

"நான் நான்காவது  பிரிவில் தட்டச்சருக்கு
பரிட்சை எழுதியது நிஜம்
ஆனால் பாஸாகவில்லை
.நேரடித் தேர்வுக்கும் போகவில்லை
அந்த அமைச்சரின் நேர்முக உதவியாளர் மூலம்
(தற்சமயம் அவர் ஓய்வு பெற்றுவிட்டார் )
கொஞ்சம் பணம் செலவழித்தேன்.
அவர் இந்த வேலைக்கு ஏற்பாடு செய்து
கொடுத்துவிட்டார் " எனச் சொல்லியுள்ளார்

அந்த உத்திரவு உண்மையாகத்தான்
இருப்பதனால் உடன் வேலையில் சேரவும் என
இந்த ஏமாந்தப் பேர்வழிச்
சொல்லியுள்ளார்

அவரும் சென்னையில் ஒரு அலுவலகத்தில்
பணியில் சேர்ந்து மூன்று நான்கு
மாதங்களாகப் பணியாற்றி வருகிறார்

விஷயம் இத்துடன் முடிந்திருந்தால் ஒன்றுமில்லை

அந்த ஏமாற்றுப் பேர்வழி இந்த ஏமாந்தப்
பேர்வழியிடம் "இதுபோல் உனக்குத் தெரிந்தவர்கள்
 யாரும் இருந்தால் சொல்
இவர் முலம் இப்படி எளிதாக அரசு
வேலை வாங்கிவிடலாம் "
என் ஆசை காட்டி வலைவிரித்திருக்கிறார்

வலைவிரித்த விதமும் விழுந்தவிதமும்
 வெகு சுவாரஸ்யம்

(தொடரும் )

7 comments:

விசு said...

தமிழகத்திலும் வியாபம் ?

தலைப்பை மாற்றி "தமிழகத்திலும் வியாப(பார)ம் ?" என்று வைக்கலாம் போல் இருக்கே.

மேலும், இந்த தொழு நோய் இந்தியாவின் எல்லா மாநிலத்திலேயும் உள்ளது.

Thulasidharan V Thillaiakathu said...

இது தொடர்கதைதானே ! இதைத்தான் வெற்றிக் கொடு கட்டு படத்தில் வெளிநாடு செல்ல ஏமாறுவதைச் சொல்லியிருப்பார்கள்....உள்நாட்டிலும் அதே கதிதான்...ம்ம்

Nagendra Bharathi said...

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்

Unknown said...

ஊழல் தொடர்கதை! ஆனதோ?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இதுதான் ஜனநாயகம்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை
ஏமாற்றுகிறவர்களும்இருக்கத்தான் செய்வார்கள்
தம+1

G.M Balasubramaniam said...

அதென்ன “தமிழகத்திலும்” எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறதே ஊழல்.

Post a Comment