தனித்துவமும் ஜன ரஞ்சகமும்
நேர் எதிரானவைகளைப்போன்றே
பயனும் சுவாரஸ்யமும்
எப்போதும்
எதிர் துருவங்களாகவே திரிகின்றன
பயனற்றதாயினும்
சுவாரஸ்யமாய் தரத் தெரிந்தவன்
பிழைக்கத் தெரிந்தவனாகவும்
புகழடைந்தவனாகவும் "விளங்க "
சுவாரஸ்யத்தைப் புறம் தள்ளி
பயனுள்ளதை மட்டுமே தருபவனோ
ஊருக்குத் தெரியாதவனாகவும்
உலகுக்கு
" விளங்காத "வனாகத்தான் தெரிகிறான்
ஆயினும் என்ன
கால நெருப்பு தீண்டுகையில்
"விளங்கியவன் "படைப்பு
எரிந்து கருகி
எதற்கும் விளங்காது போக
நிகழ்காலத்தில்
"விளங்காதவன் " படைப்போ
சுட்ட சங்காய்
கூடுதல் வெண்மை கொண்டு
ஒளி விளக்காய்
" விளங்கத்தான் " செய்கிறது
என்ன செய்வது
காலம் கடந்த பின்புதான்
படைப்பாளியைக்
காலன் கவர்ந்த பினபுதான்
உலகுக்கும் கூட
ஆண் மயிலுக்கும்
வான் கோழிக்குமுள்ள வித்தியாசம்
"விளங்கித் "தொலைக்கிறது
நேர் எதிரானவைகளைப்போன்றே
பயனும் சுவாரஸ்யமும்
எப்போதும்
எதிர் துருவங்களாகவே திரிகின்றன
பயனற்றதாயினும்
சுவாரஸ்யமாய் தரத் தெரிந்தவன்
பிழைக்கத் தெரிந்தவனாகவும்
புகழடைந்தவனாகவும் "விளங்க "
சுவாரஸ்யத்தைப் புறம் தள்ளி
பயனுள்ளதை மட்டுமே தருபவனோ
ஊருக்குத் தெரியாதவனாகவும்
உலகுக்கு
" விளங்காத "வனாகத்தான் தெரிகிறான்
ஆயினும் என்ன
கால நெருப்பு தீண்டுகையில்
"விளங்கியவன் "படைப்பு
எரிந்து கருகி
எதற்கும் விளங்காது போக
நிகழ்காலத்தில்
"விளங்காதவன் " படைப்போ
சுட்ட சங்காய்
கூடுதல் வெண்மை கொண்டு
ஒளி விளக்காய்
" விளங்கத்தான் " செய்கிறது
என்ன செய்வது
காலம் கடந்த பின்புதான்
படைப்பாளியைக்
காலன் கவர்ந்த பினபுதான்
உலகுக்கும் கூட
ஆண் மயிலுக்கும்
வான் கோழிக்குமுள்ள வித்தியாசம்
"விளங்கித் "தொலைக்கிறது
10 comments:
விளங்குவதும் விளங்காததும் ....
மிகவும் அருமை.
விளங்குவது சரியா என சரியாக விளாங்காமலும், விளாங்காதது ஒருவேளை சரியாக இருக்குமோ என விள(ங்/க்)குவதாகவும் மிக அழகாகப் படைத்துள்ள ஆக்கம் மகிழ்வளிக்கிறது.
மொத்தத்தில் என்னால், ஆண் மயிலுக்கும்
வான் கோழிக்குமுள்ள வித்தியாசம் எல்லாவற்றையும் நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது. :)
நான் இவ்வாறு உணர்ந்து விளங்கிக்கொண்டதை என்னால் மனம் விட்டு விளக்கத்தான் முடியவில்லை. :)
பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
விளங்குவதும் விளங்காததும். என்ன ரிப்ளை பண்ணினா சரியா இருக்கும் விளங்கலையே. அப்படின்னா நான் விளங்காதவளோ???
நன்றாகவே "விளங்கத்தான்" செய்கிறது ஐயா... நன்றி...
அருமை
வணக்கம்
ஐயா
அற்புதமான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை ஐயா.
நல்ல விளக்கம். பகிர்விற்கு நன்றி.
தெளிவூட்டும் நுட்பமான பதிவு
தொடருங்கள்
விளங்காமைப் பற்றி நல்ல விளக்கம்
விளங்காமைப் பற்றி நல்ல விளக்கம்
Post a Comment