Wednesday, December 2, 2015

அவனே நிச்சயம் உயரந்தவன்...

கடந்த காலத்தில்
செய்ய மறந்தது

எதிர்காலத்தில்
செய்ய வேண்டியது

செய்யாது விட்டது
யார் தவறு ?

இனி யார் வந்தால்
சரியாகச் செய்வார்கள் ?

இவைகள் குறித்து
மிகத் தெளிவாகப்
பேசிக் கொண்டிருப்பவன்  எல்லாம்
எந்த விதத்தில் உயர்ந்தவன் ஆயினும்
அவன் நிச்சயம் மனிதனில்லை

இயன்றதைக் கொடுத்தும்
முடிந்ததைச் செய்தும்
கடந்து கொண்டிருப்பவன் எல்லாம்
எந்த விதத்தில் குறைந்தவன் ஆயினும்
அவனே நிச்சயம் உயரந்தவன்

இயற்கையின் பாதிப்பிற்கு
 எதிரான இந்த
மாபெரும் பணியில்
நாம் மனிதாபிமானமிக்கவராகவே இருப்போம்

எதிலும் அரசியல் லாபம்
காண முயல்வோரை
எந்த நிலை உள்ளவராயினும்
ஒதுக்கிவைத்து  நம் பணியினைத் தொடர்வோம்

6 comments:

சீராளன்.வீ said...

வணக்கம் ஐயா !

உங்கள் உள்ளக் கிடக்கைகள் இங்கே கவிதைகளாக
வெளிப்படுவதை இட்டு நானும் இன்னலுறும் மக்களுக்காய் இறைவனை வேண்டுகிறேன்
வாழ்க வளமுடன் தம +2

கரந்தை ஜெயக்குமார் said...

மனிதாபிமானம் உள்ளவராய் இருப்போம்
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

அவனே நிச்சயம் உயரந்தவன்...

Geetha said...

மனித நேயம் தான் தற்போது அனைவரையும் காப்பாற்றிக்கொண்டுள்ளது சார்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

மனித நேயமாக இருப்பது சிறந்தது... த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu said...

ஆம் நம் பணியினைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம்...மனித நேயம் இன்று மிளிர்ந்து சுடட்விட்டுக் கொண்டிருக்கின்றது.

Post a Comment