Tuesday, December 29, 2015

"சகாயங்கள் "குறித்து ....

மாற்றி யோசிக்க
ஆரம்பித்து விட்டோம்

இல்லாத இடத்திலேயே
தேடிக் கொண்டிருந்ததும்

குறுகிய வட்டத்துக்குள்ளேயே
தேடிக் கொண்டிருந்ததும்

எத்தனை தவறென்று உணர்ந்து

மாற்றி யோசிக்க
ஆரம்பித்துவிட்டோம்

அதனால்தான்
உங்களைப் போல்
"அசகாய " சூரர்கள்
வேண்டியதில்லையென்றும்

கட்சியில்லையெனினும்
தனித்தவரெனினும்
"சகாயங்கள் "குறித்து
சிந்திக்கத் துவங்கிவிட்டோம்

ஊடக நாடகங்கள்
ஆரவார ஆர்ப்பாட்டங்கள்
திருமங்கலம் ஃபார்முலாக்கள்
தில்லு முல்லுப் பேச்சுக்கள்
இலவச பம்மாத்துக்கள்
எல்லாம்
பத்தாம்பசலிச் சாமர்த்தியங்கள்

இவைகள் இனி
எடுபடுவது கஷ்டமே

இனியேனும்
மாறித் தொலைக்க யோசியுங்கள்
மாற்றி யோசிக்க ஆரம்பியுங்கள்

ஏனெனில்
நாங்கள்  மாற்றி யோசிக்க
ஆரம்பித்துவிட்டோம்.

6 comments:

Thulasidharan V Thillaiakathu said...

உண்மையே! மாற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டோம்...மாற்றம் நிச்சயமாக அவசியம்! இல்லையேல் தமிழகம் பாடு திண்டாட்டம்தான் மாற்றம் நிகழ வேண்டும்...

balaamagi said...

அப்படி தெரியவில்லை ஐயா, நடக்கும் நாடகங்களைப் பார்க்கும் போது, தங்கள் சிந்தனை சரி, நடந்தால் அதுவும் சரி,

ராஜி said...

மாத்தி யோசிக்க ஆரம்பிச்சாலும் நடைமுறைக்கு வரனுமே!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
உண்மையில் மாற்று சிந்தனை வரவேற்க தக்கது..த.ம 4
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இறந்த சடலத்தின் கற்பனை அழுகை.:

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

மக்கள் மாற்றத்தை விரும்புவது உண்மையே
பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்று
தம +1

G.M Balasubramaniam said...

ஆட்சி அசிங்கமாய்ப் போவதற்கு அதிகாரிகளும் முக்கிய காரணம் இபர்கள் தைரியமாக சரியாக வழிகாட்ட வேண்டும் அதிகாரிகள் மனம் மாறி மாற்றி யோசிக்க வேண்டும் அதிகாரிகளின் பலம் இல்லாமல் அரசியல் வாதிகள் தனித்தியங்க இயலாது. ஓரிரு சகாயங்கள் போதாது.

Post a Comment