Sunday, July 17, 2016

ஆடி மாதமும் தம்பதிகளை பிரித்து வைத்தலும் ,,,

ஆடி மாதம் தம்பதிகளை பிரித்து வைப்பதற்கான
காரணங்களை பலரும் பலவிதமாக
விளக்கி இருந்தார்கள்

அதில் குறிப்பாக ஆடியில் சேர்ந்திருந்து
கருத்தரித்தால்சித்திரையில்
குழந்தைப்  பிறப்பிருக்கும்
கோடை வெய்யிலில் அது தாய்க்கு மிகுந்த
சிரமமாய் இருக்கும் என்பதுவும் ஒன்று

சமீபத்தில் ஜாதகம் பார்க்கும் நண்பர் ஒருவரை
சந்தித்து பேசிக் கொண்டிருக்கையில்
அதற்கு வேறு விதமாக விளக்கம் கொடுத்தார்

ஆடியில் கருத்தரிக்கிற பெண்ணுக்கு சித்திரையில்
குழந்தை பிறந்தால் அது மேஷ ராசியில்
பிறந்ததாக இருக்கும்

மேஷம் செவ்வாயின் ஆட்சி வீடு
அது சூரியனுக்கு உச்சவீடு
எனவே அந்த ராசியில் பிறப்பவன் நிச்சயம்
வீரமானவனாகவும் தான் இருக்குமிடத்தில்
தலைமைப் பொறுப்பேற்பவனாகவும்
இருப்பான்,

அதிலும் அதிகாலையில்  பிறந்து
லக்னமும் அதுவாக அடையப்பெற்று
பிற  அசம் ங்களும்  சரியாக அமையுமாயின்
அவனுக்கு அரசனாகும் யோகம் கூட உண்டு

தேவையில்லாமல் அதற்கு எதற்கு சந்தர்ப்பம்
அளிக்கவேண்டும் என்பதற்காகவே
 மன்னர்களின் காலத்தில்
ஜோதிடர்களின் வழிகாட்டுதலின்படித் 
தம்பதிகளைப்பிரித்துவைத்தலை
ஒரு சடங்காக சம்பிரதாயமாக ஆக்கி நாமும்
காரணம் தெரியாமல் அதைத் தொடர்ந்து
கொண்டிருக்கிறோம் என்றார்

ஒருவேளை அப்படியும் இருக்கலாமோ எனத்
தோன்றுகிறது எனக்கு

12 comments:

வெங்கட் நாகராஜ் said...

வித்தியாசமாய் இருக்கிறது. இதுவரை கேட்டதில்லை.

விமல் ராஜ் said...

எனக்கும் புதுசாக தான் இருக்கிறது ஐயா...பதிவுக்கு நன்றி....

Avargal Unmaigal said...

அப்ப ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைக்காமல் இருக்கும் மாற்று மதத்தினர்களுக்கு சித்திரையில்
பிறந்த குழந்தைகள் விரமானவர்களாகவும் தலைமை ஏற்கும் நிலையில் இருக்கிறார்களா? அல்லது ஆடி மாதத்தில் பிரித்து வைக்கும் மதத்தினரின் குழந்தைகளுக்கு மட்டும் இது பொருந்துமா?

S.P.SENTHIL KUMAR said...

வித்தியாசமான தகவலாக இருந்தது. ஆனாலும் மதுரை தமிழனுக்கு ஏற்பட்ட சந்தேகமே எனக்கும் வந்தது.

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //S.P.SENTHIL KUMAR //


..பங்குனி, சித்திரை ,வைகாசி
கோடைக்காலS.
சித்திரை அதில் உச்சம்
இது அனைவருக்கும் பொது

சிகரம் பாரதி said...

யோசிக்க வேண்டிய விடயம். விசாரித்துப் பார்க்கிறேன்.

Unknown said...

புதுமையான விளக்கம்!

Thulasidharan V Thillaiakathu said...

puthiya thagaval...muthal vilakkam ellorukum porundum. chiththirai kodai veil sutterikkum enbathu...ellorukkum porundum aanal josiyar solluvathu konjam yosikka vaikkirathu.

matrontru muthal kuzhandaiku mattume appadi aadi matham pirithu vaipathaga therigirathu aduththu varum kuzhandaigalukku illaiye....athuvum yosikka vaikkirathu

K. ASOKAN said...

அறிவியல்ரீதியாக கதிரவனின் வெம்மை பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு எற்படும் என்பதுதான் இதுநாள் வரை அறிந்த ஒன்று.இது புது தகவல் (பிறக்கின்ற எல்லா குழந்தைகளுமா அரசாளும் ?) மிக்க நன்றி

நம்பள்கி said...

மூட நம்பிக்கைக்கு முட்டுக் கொடுக்க அப்ப அப்ப அறிந்துகொள்ளும் விஷயங்களை அறிவியல்...என்று கூறி மக்களை அதை விடாமால் பின்பற்றவைப்பதே இதன் நோக்கம்.

அப்ப ஊட்டி கோடை ஏற்காடு மலை ஸ்தலங்களில் அங்கு வசிப்பவர்களுக்கு எதற்கு ஆடி மாசம்? இல்ல பூமத்திரேகைக்கு தெற்கே எதற்கு இங்கிருந்து செல்லும் தமிழனுக்கு ஆடி மாதம்? காலம் அங்கு மாறுமே.

வட இந்தியாவில் மற்ற சமூகத்தில் ஆடி மாதம் இல்லையே? இதை கேள்வி கேட்டவுடன்...அரசனுக்கு போட்டி என்று சொல்வது. இப்படி செய்வது மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று மூட நம்பிக்கையையும் பிடித்தா மாதிரி ஆகிறது. ஜோசியமும் பிழைத்தா மாதிரி ஆகும்!

உண்மையில் சித்திரையில் குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன? இது அரிசோனா மற்றும் அரேபியா நாடுகளில் வெயில் காலங்களில் குழந்தை பிறப்பதைல்லையா? இல்ல இந்த ஆடிமாதம் தமிழ் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு தானா?

Yaathoramani.blogspot.com said...


நம்பள்கி //

பின்னிரண்டு பாராக்களை
இன்னும் கொஞ்சம் சரியாக எழுதிருக்கலாம்
என தங்கள் பின்னூட்டம் படிக்கப் புரிந்தது
வாழ்த்துக்களுடன்....

நம்பள்கி said...

வட இந்தியாவில் மற்ற சமூகங்களில் ஆடி மதத்தில் மணமக்களைப் பிரிப்பதில்லையே? இல்லையே?

இதை கேள்வி கேட்டவுடன்...அரசனுக்கு போட்டி என்று சொல்வது. இப்படி செய்வது மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய். அறிவியல் என்று டூப்பு அடித்து மக்களை மூட நம்பிக்கையை விட்டு வெளியேறாமல் பார்துக் கொள்வது! இரண்டு அப்படியே அரசனுக்கு போட்டி என்ற தமாஷ் ஜோசியதையும் நிலை நிறுத்துவது.

உண்மையில் சித்திரையிலும் குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன என்ற உண்மை எததனை பேருக்கு தெரியும்? அமேரிக்கவில் உள்ள அரிசோனாவில் ஏப்ரல், மே நல்ல மாதம் இதமான குழிர். ஜூன் ஜூலை ஆகஸ்ட் தான் கொடூர வெயில். அப்போ வெயிலில் எச்சை துப்பினால் உடனே ஆவியாகும். அங்கு அப்போது தான் குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன. அரேபிய நாடுகளிலும் அப்படியே--இதற்கும் ஒரு வெண்டைக்காய் விளக்கம் நம்ம பஞ்சான்சங்கள் கொடுப்பார்கள். இல்லை இந்த ஆடிமாதம் தமிழ் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு தான் என்று நீட்டி முழக்குவார்கள். கிரகத்திற்கு நான் என்ன மொழி பேசுகிறோம் என்று தெரியுமாதலால்...தமிழனுக்கு மட்டும் பாதிப்பு என்ற அடுத்த டூப்பை அரங்கேற்றுவார்கள்.

Post a Comment