ஈரம் காப்போம்
வறண்டு விடாது
ஈரம் காப்போம்
மண்ணின் செழுமைக்கு
மண்ணில் ஈரம்
மனிதரின் வளமைக்கு
நெஞ்சில் ஈரம்
கோடைச் சூரியன்
எப்படித் தாக்கினும்
அடைமடி ஈரம்
காத்திடும் பூமி
எப்படிக் கறப்பினும்
கன்றுக்கு பாலினை
ஒதுக்கியே வைத்திடும்
அழகியத் தாய்ப்பசு
அதுபோல்
சுயநலச் சூரியன்
எப்படி எரிப்பினும்
அடிமன ஈரம்
அகலாது காப்போம்
நம் நிலை எந்நிலை
ஆன போதிலும்
நம்சுகம் கொஞ்சம்
நலிவுறும் ஆயினும்...
ஈரம் வரும்வழி
மழைவழி நதிவழி
எவ்வழி என்று
பூமி பிரிப்பதில்லை
ஈரம் வரும் வழி
மதவழி இனவழி
எவ்வழி என்று
நாமும் பிரிக்காது
நெஞ்சில் ஈரம்
என்றும் காப்போம்
அனைவரும் உயர்ந்திட
ஆனதைச் செய்வோம்
(இந்த நிகழ்வுக்கு அனைத்து விதத்திலும்
ஊற்று அமைப்பின் சார்பாக அனைத்து
விதத்திலும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளவர்கள்
மதிப்பிற்குரிய ரூபன் ராஜா மற்றும்
நண்பர் யாழ்பாவாணன் ஆகியோரையும்
அறிவுக்குக்கண் கல்விக்கு கைக்கொடுப்போம்
அமைப்பினரையும் மனதார பாராட்டுவதன் மூலம்
நாமும் இந்த நிகழ்வில் பங்குபெறலாமே )
வாழ்த்துக்களுடன் ....
10 comments:
பாராட்டுவோம்
தம +1
வணக்கம்
ஐயா.
ஊற்று அமைப்பின் சேவை நாடு கடந்தும் தொடரும்...எல்லா வற்றுக்கும் தாங்களின் வழிகாட்டல்தான் ஐயா
வணக்கம்
ஐயா.
ஊற்று அமைப்பின் சேவை நாடு கடந்தும் தொடரும்....எல்லாம் தங்களின் வழிகாட்டல்தான் ஐயா.
நீங்கள் சொல்வது மிகச் சரி
ஆம் நாடு கடந்தும் இது நிச்சயம் தொடரும்
வாழ்த்தப்பட வேண்டியவர்களே... வாழ்க நலம்.
ஈரம் காக்கும் நெஞ்சங்களை எப்போதும் பாதுகாப்போம்,போற்றுவோம்,
வாழ்த்தப்பட வேண்டியவர்கள்! வாழ்த்துவோம்
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.....
Post a Comment