Friday, July 22, 2016

இது கபாலிக்கும் பொருந்தும்...

எத்தனைச் சிறப்பாக
வடிவமைக்கப்பட்டிருக்கினும்
அதை இயக்குவோன்
எத்தனைத் திறன்
மிக்கவனாயினும்

வாகனம் பொறுத்து
அதற்கென ஒரு
வேக அளவுண்டு

அது
மிதி வண்டி ஆயினும்
நவீன விமானமாயினும்

அளவை மீறுகையில்

அந்த அற்புத
வாகன்ம் மட்டுமல்ல
அந்தத் திறன் மிக்க
இயக்குவோன் கூடத்

தனக்கான மதிப்பினிலிருந்து
இறங்கவே சாத்தியம்
தனக்கான இடத்திலிருந்து
சரியவே சாத்தியம்

இது
கட்டை வண்டிக்கு மட்டுமல்ல
கபாலிக்கும் பொருந்தும்

7 comments:

KILLERGEE Devakottai said...

பொருத்தமான சொல்லடி அருமை.

வெங்கட் நாகராஜ் said...

ம்ம்ம்... கபாலிக்கும் பொருந்தும்! :)

த.ம. +1

Thulasidharan V Thillaiakathu said...

உண்மைதான்!

G.M Balasubramaniam said...

கபாலி பார்த்தீர்களா அதன் பாதிப்பா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சரியான பொருத்தமே.

K. ASOKAN said...

கபாலி திரைப்படம் பார்த்ததன் எதிரொலியோ

”தளிர் சுரேஷ்” said...

அட்டகாசமான ஒப்பீடு! வாழ்த்துக்கள்!

Post a Comment