Thursday, July 7, 2016

அழகின் அலகு

மழை அழகு
மழைக்கால மழை
இன்னும் அழகு

ஆயினும்
கோடைக் கால மழையே
அழகிலும்  கூடுதல் அழகு

நட்பு அழகு
இளமைக்கால நட்பு
இன்னும் அழகு

ஆயினும்
சோதனையில் தொடரும் நட்பே
அழகிலும் கூடுதல் அழகு

கவிதை அழகு
புரிகிறக் கவிதை
இன்னும் அழகு

ஆயினும்
பயன்தரும்  கவிதையே
அழகிலும் கூடுதல் அழகு

அழகே அழகு
பருவ அழகு
இன்னும் அழகு

ஆயினும்
முதிர்ச்சியில் மிளிரும் அழகே
அழகிற்கெல்லாம் கூடுதல் அழகு

ஏனெனில்
அழகு அழகுபெறுவது
அழகினால் மட்டுமாயினும்

அழகு சிறப்புப் பெறுவது
நிச்சயம் அது தரும்
பயன்பொறுத்துத்  தானே


8 comments:

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் கவிதையும் வெகு அழகு.

த.ம. +1

கரந்தை ஜெயக்குமார் said...

அழகு
அழகோ அழகு

Nagendra Bharathi said...

அருமை

KILLERGEE Devakottai said...

அழகிய கவிதை ரசித்தேன் கவிஞரே
த.ம.4

G.M Balasubramaniam said...

கவிதைக்கு பொய் அழகு .....!

கோமதி அரசு said...

அழகு கவிதை.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அனைத்தும்
அருமையான வரிகள்

Prabhakar Murari said...

உங்கள் மனதின் தேடுதல் அழகின் அழகு. !

Post a Comment