யானைகளைக் கட்டி
பலசமயம்
இழுக்க இயலாதுப் போனக்
கவிதைத் தேரது
ஒரு சிறு எறும்பிழுக்க
வேகமாய்
வலம் வருவது விந்தை
குடம் குடமாய்
நீரூற்ற
வளராது வாடும்
கவிதைச் செடியது
ஒரு சிறு சாரலில்
முதுகு நிமிர்த்தி
ஓங்கி வளர்வது விந்தை
படித்து
அளவுகோலில் நிறுத்து
முயன்று செய்ய ருசிக்காதக்
கவிதைக் குழம்பு
மனமளக்க
கை நிறுக்க
அதிகம் ருசிப்பது விந்தை
விதம் விதமாய்
வேடிக்கைகள் காட்டியும்
வித்தைகள் செய்தும் வரமறுக்கும்
கவிதைக் குழந்தை
எதையோ நினைத்திருக்கையில்
சட்டெனத் தாவியணைத்து
சிந்தை கவர்வது விந்தை
ஆம் ..
அதிசயமே அதிசயிக்கும்
அதிசயப் பெண்போல
விந்தையே வியக்கும்
விந்தையது கவிதைதான்
பலசமயம்
இழுக்க இயலாதுப் போனக்
கவிதைத் தேரது
ஒரு சிறு எறும்பிழுக்க
வேகமாய்
வலம் வருவது விந்தை
குடம் குடமாய்
நீரூற்ற
வளராது வாடும்
கவிதைச் செடியது
ஒரு சிறு சாரலில்
முதுகு நிமிர்த்தி
ஓங்கி வளர்வது விந்தை
படித்து
அளவுகோலில் நிறுத்து
முயன்று செய்ய ருசிக்காதக்
கவிதைக் குழம்பு
மனமளக்க
கை நிறுக்க
அதிகம் ருசிப்பது விந்தை
விதம் விதமாய்
வேடிக்கைகள் காட்டியும்
வித்தைகள் செய்தும் வரமறுக்கும்
கவிதைக் குழந்தை
எதையோ நினைத்திருக்கையில்
சட்டெனத் தாவியணைத்து
சிந்தை கவர்வது விந்தை
ஆம் ..
அதிசயமே அதிசயிக்கும்
அதிசயப் பெண்போல
விந்தையே வியக்கும்
விந்தையது கவிதைதான்
8 comments:
அருமை... மிகவும் ரசித்தேன்...
தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் தங்கள் வலைத்தளம் உட்பட 12 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது விந்தையே வியக்கும் விந்தை.. பதிவும் எமது தளத்தில் தன்னியக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன. உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
முக்கிய குறிப்பு: வாசகர்களின் ஆதரவின்றி எந்த இணையத் தளத்தையும் நடத்த முடியாது. அது போல அனைவரும் தங்கள் ஆதரவை எமது வலைத்தளத்துக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இல்லாவிட்டால் எமது திரட்டியும் மூடப்பட வேண்டிய நிலையையே எதிர்நோக்கும்.
//விந்தையே வியக்கும்
விந்தையது கவிதைதான் //
உண்மைதான். இன்னதுதான் கவிதை என்று வரையறுக்க முடியாது. மனதில் இருந்து வெளிப்படும் நம் எண்ணங்களே கவிதை ஆகின்றன. தங்கள் கவிதையும் சிறப்பு.
எதையோ நினைத்திருக்கையில்
சட்டெனத் தாவியணைத்து
சிந்தை கவர்வது விந்தை
அருமை
அருமை
மிக அருமை!
அருமை.
அது தானாக வரும்போது மகிழ்ச்சி அதிகம்
GMB ஸார் சொல்வதை ஆமோதிக்கிறேன்.
Post a Comment