Friday, April 10, 2020

ஒன்றுக்குள் ஒன்றுதானா..

குழப்பங்களே கேள்விகளாகிறதா            கேள்விகள்தான் குழப்புகிறதா                                                                                              கேள்விகள்தான் பதில்பெறுகிறதா                  பதில்கள்தான் கேள்விக்குக் காரணமா                                                                                                எளிதானதுதான் புரிகிறதா                          புரிந்ததுதான் எளிதாய்த் தெரிகிறதா                                                                                                  புதிரானதுதான் புரியவில்லையா              புரியாததால் அது புதிராகிறதா                                                                                                                சிந்திப்பது எழுதுவதால்தானா                    எழுதுவதே சிந்திப்பதால் தானா                                                                                                              இருப்பதனால் வாழ்வதுபோல்                            வாழ்வதனால் இருப்பதுபோல்                                                                                                                  இவையெல்லாம் ஒன்றுதானா                    இல்லை ஒன்றிலிருந்து ஒன்றுதானா

8 comments:

சிகரம் பாரதி said...

சிறப்பு.

ஆனால் இந்த பதிவை ஆன்மீகம் என வகைப்படுத்தாமல் கவிதை என வகைப்படுத்துவதே சாலச்சிறந்ததாக இருக்கும்.

தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 26 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
வார்த்தைகள் ஒன்றையொன்று விட்டு விலகி நிற்கின்றனவே ஐயா

Yaathoramani.blogspot.com said...

அலைபேசியில் பதிவேற்றுவதால் அதில் சரியாய் இருக்கிறது...தளத்தில் மாறித்தெரிகிறது...சரிசெய்ய முயற்சிக்கிறேன்.தகவலுக்கு நன்றி..

G.M Balasubramaniam said...

புரிந்தும் புரியாததுபோல் நினைப்பதே சில நேரங்களில் சௌகரியம்

Kasthuri Rengan said...

144 உத்தரவின் காரணமாக எழுதப்பட்டதோ என்று நினைத்தேன்.
ஆனால்
மொபைல் பார்மேட்டிங் காரணம் என்பதுதான் விசயம்..
கொஞ்சம் முடிந்தால் எளிதே
வார்த்தைகளை நகர்த்த வேண்டாம்
எங்கே என்ட்டர் வேண்டுமே அங்கே மட்டும் தட்டுங்கள் மொபைலில் எப்படி இருந்தாலும் ப்ளாகில் சரியாக இருக்கும்
நல்ல கேள்விகள் தான் கவிதைகள்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

https://translate.google.com/ பயன்படுத்தலாம்...

Yaathoramani.blogspot.com said...

மிக்க நன்றி....வாழ்த்துகளுடன்..

Yaathoramani.blogspot.com said...

தகவலுக்கு நன்றி..வாழ்த்துகளுடன்..

Post a Comment