- ஈரமிழந்த மரமாய் மனமும் மெல்ல மெல்ல பட்டுப் போய்க்கொண்டிருக்கிறது மனிதாபிமானமிழந்து.. மணத்தையும் நிறத்தையும் உணர்ந்து மலரை எடைபோட்ட மனம் இப்போது வியாபார குணம் மிகுந்ததால் எண்ணிக்கையும் எடையையும் வைத்தே மதிக்கப் பழகிக் கொண்டு விட்டது போலவும் முகமறியா தொடர்பேயில்லா ஒருவரின் மரணச் செய்தி கேட்டு அதிர்ந்த அதே மனம் இப்போதுஇயலாமையினகாரணமாய் மாலைச் செய்தியில் மரண எண்ணிக்கை அறிய. ஆவலாயிருக்கிறது எவ்வித உறுத்தலின்றியும்...
5 comments:
பட்டுப் போன மனம்.... நிதர்சனம்....
தாங்கவே முடியாத உண்மை...
மனம் மரத்துவிட்டது
உண்மை
மனித மனத்தின் விசித்திரம்.
Post a Comment